ஏன் ஆண்கள் உள்ளாடை அணியாமல் குதிக்கக்கூடாது எனத் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

எந்நேரமும் உள்ளாடை அணிந்தவாறு இருந்தால், அது அந்தரங்க உறுப்புக்களை சூடேற்றி, விந்தணுக்களை அழிக்கும். ஆகவே தூங்கும் போது உள்ளாடையின்றி தூங்குங்கள். ஆனால் சில ஆண்கள் இன்னும் ஒருபடி மேலே போய், நாள் முழுவதுமே உள்ளாடை அணியாமல் ஹாயாக சுற்றுவார்கள்.

இப்படி இருக்கலாமா அல்லது இது ஆபத்தா? ஆண்கள் சில செயல்களில் ஈடுபடும் போது உள்ளாடை அணிந்திருக்க வேண்டியது அவசியம். சில செயல்களின் போது அந்தரங்க உறுப்புகளுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். ஒருவேளை உங்களுக்கு உள்ளாடை அணிய பிடிக்காவிட்டால், கீழே கொடுக்கப்பட்டுள்ள தருணங்களின் போதாவது உள்ளாடையை தவறாமல் அணிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குதிக்கும் போது...

குதிக்கும் போது...

ஸ்கிப்பிங் விளையாடும் போது அல்லது வேறு செயல்களினால் குதிக்க வேண்டிய தருணத்தின் போது, தவறாமல் உள்ளாடையை ஆண்கள் அணிந்திருக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால், அந்தரங்க உறுப்புக்கள் பாதிக்கப்பட்டு, கடுமையான வலியை உண்டாக்கும்.

ட்ரையல் ரூம்...

ட்ரையல் ரூம்...

கடைகளுக்கு சென்று புதிய பேண்ட்டுகளை வாங்க செல்லும் போது, தவறாமல் உள்ளாடையை அணிய வேண்டும். ஏனெனில் பேண்ட் வாங்கும் போது, அவற்றை போட்டுப் பார்த்து தான் வாங்குவோம். ஆனால் அப்படி நாம் வாங்கும் பேண்ட்டை ஏற்கனவே வேறொருவர் போட்டு பார்த்திருப்பார்.

இந்நிலையில் உள்ளாடை அணியாமல், அந்த பேண்ட்டை அணிந்தால், பாக்டீரியாக்கள் எளிதில் மென்மையான அந்தரங்க உறுப்பை பாதித்து, தொற்றுக்களை உண்டாக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது. ஆகவே கவனமாக இருங்கள்.

பல நாட்கள் ஒரே பேண்ட்...

பல நாட்கள் ஒரே பேண்ட்...

ஆண்கள் ஒரே பேண்ட்டை பல நாட்களாக அணிவார்கள். இதனால் எவ்வித தவறும் இல்லை. ஆனால் அப்படி அணிவதாக இருந்தால், உள்ளாடை போடாமல் அணியக்கூடாது. இல்லாவிட்டால், அந்தரங்க பகுதியில் பாக்டீரியாக்களின் பெருக்கம் அதிகரித்து, தீவிர தொற்றுக்களை கூட உண்டாக்கும். ஆகவே இம்மாதிரியான தருணங்களில் கட்டாயம் உள்ளாடை அணிய வேண்டும்.

இறுக்கமான பேண்ட்...

இறுக்கமான பேண்ட்...

இறுக்கமான பேண்ட் அணியும் போது, உள்ளாடை அணியாமல் இருந்தால், அந்தரங்க உறுப்புக்களின் மென்மையான தோல் மிகுந்த உராய்விற்குள்ளாகி, அப்பகுதியில் கீறல் அதிகரித்து, கடுமையாக பாதிக்கக்கூடும். எனவே கவனமாக இருங்கள்.

நீண்ட தூர நடை

நீண்ட தூர நடை

ஒரு செயலை தொடர்ச்சியாக செய்யும் போது, அதாவது தொலை தூரம் நடக்கும் போது, அந்தரங்க பகுதிகளில் உராய்வு அதிகரிக்கும். இதனைத் தவிர்க்க வேண்டுமானால், உள்ளாடை அணிய வேண்டியது அவசியம்.

வியர்வை வெளிவரும்படியான செயல்கள்...

வியர்வை வெளிவரும்படியான செயல்கள்...

தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபடும் போது, அந்தரங்க உறுப்புக்களில் வியர்வை அதிகரிக்கும். அந்தரங்க பகுதியில் வியர்வை அதிகம் வெளிவரும் போது, அதனை உறிஞ்ச உள்ளாடை இருந்தால் தான், பாக்டீரியாக்களின் பெருக்கம் தடுக்கப்படும். இல்லாவிட்டால், காற்றோட்டமில்லாத அப்பகுதியில் பாக்டீரியாக்கள் பெருகி தொற்றுக்களை உண்டாக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why Men Shouldn't Jump Without Underwear

Do you know what happens if you jump without an underwear? Read on to know about the risks of not wearing underwear...
Story first published: Tuesday, March 14, 2017, 11:20 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter