For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மழைக்காலம்,மழைக்கால நோய்கள், மழைக்கால நோய்களிலிருந்து தப்பிக்க,சளித்தொல்லையிலிருந்து உடனடி நிவாரணம்,

மழைக்காலங்களில் எளிதாக தொற்று நோய் பரவிடும். அதனால் ஏராளமான பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க சில குறிப்புகள்

|

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது.இதனால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீராலும் ஏராளமான உடல நல பாதிப்புகளை மக்கள் சந்தித்து வருகிறர்கள். மழைக்காலத்தில் வைரஸ் தொற்றிலிருந்து எளிதாக விடுபட சில பயனுள்ள குறிப்புகள்.

நள்ளிரவிலிருந்து சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் மழை கொட்டுகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையினால் சாலைகளில் வெள்ள நீர் ஓடிக் கொண்டிருக்கிறது.

பல வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் ஏராளமான மக்கள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறார்கள்.ஏற்கனவே டெங்கு உட்பட வைரஸ் காய்ச்சல் பரவிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் உங்கள் ஆரோக்கியத்தை பராமரிப்பது மிகவும் அவசியமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குளிர்ச்சி

குளிர்ச்சி

குளிர்ச்சியான பருவநிலையில் மின்விசிறியின் கீழே படுத்துத் தூங்குவது, குளிர்ந்த நீரில் முகம் கழுவுவது போன்றவற்றைச் செய்தால் தும்மல், மூக்கடைப்பு, தலைபாரம், தலைவலி சளித்தொல்லை எனப் பிரச்னைகள் வரிசைகட்டி நிற்கும். இது சைனஸ், ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்களை வெகுவாக பாதிக்கும். அதோடு, சுற்றுச்சூழல் மாசுபடுவதாலும் சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படும். முடிந்தளவு இதனை தவிர்ப்பது நன்று.

சளித்தொல்லை

சளித்தொல்லை

சளிப் பிரச்னை அதிகம் உள்ளவர்கள் மிளகு, சீரகம், துளசி, ஓமவல்லி, தூதுவளையைச் சேர்த்துக் கொதிக்கவைத்து பனங்கற்கண்டு சேர்த்து அருந்தலாம். இது தொண்டைக்கு இதமாக இருக்கும். அதோடு மூக்கடைப்பில் தொடங்கி சளி தொடர்பான அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு தரும். தொண்டை கட்டிக்கொண்டிருந்தால் வெந்நீருடன் உப்புச் சேர்த்து வாய் கொப்பளிக்கலாம். துளசி இலைகளை ஊறவைத்த நீரை அருந்துவதும் நன்மை தரும்.

தலைக்குளித்தல்

தலைக்குளித்தல்

மழைக்காலங்களில் தலைக்குக் குளிப்பதைப் பலரும் தவிர்த்துவிடுவது உண்டு. சிலர் சைனஸ், தலைபாரம், ஒற்றைத் தலைவலி எனச் சில காரணங்களைச் சொல்லி தலைக்குக் குளிக்காமல் தவிர்ப்பதுண்டு. இப்படிச் செய்வதால் தலையில் நோய்த் தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, தலைக்குக் குளித்ததும் தலைமுடியை நன்றாக உலர்த்தி சாம்பிராணி புகைகாட்டுவது அல்லது வெந்நீரில் தலைக்குக் குளிப்பதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். நொச்சி, யூகலிப்டஸ் போன்ற இலைகளைத் தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து குளிப்பதும் சளித்தொல்லைகளிலிருந்து நிவாரணம் தரும்.

செரிமானக்கோளாறு

செரிமானக்கோளாறு

மழைக்காலங்களில் செரிமானக் கோளாறு ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால், உணவை உண்ணும்போதே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கூடியவரை இட்லி, இடியாப்பம் போன்ற ஆவியில் வேகவைத்த உணவுகளாக இருப்பது நல்லது.

வயிற்றுப் போக்கு

வயிற்றுப் போக்கு

மழைக்காலங்களில் மிக எளிதாக வயிற்றுப்போக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. சுகாதாரமற்ற உணவு மற்றும் தண்ணீராலேயே வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. வயிற்றுப்போக்கு ஏற்படாமல் தடுக்க, சுத்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும்.

சாப்பிடுவதற்கு முன்னர் கை கழுவுவது, வெந்நீர் அருந்துவது போன்றவை வயிற்றுப்போக்கு ஏற்படாமலிருக்கச் செய்யும். மேலும், காலரா, மஞ்சள்காமாலை போன்ற பாதிப்புகள் அசுத்தமான, சுகாதாரமற்ற தண்ணீரால் வர வாய்ப்பு உள்ளது என்பதால் காய்ச்சி ஆறவைத்த தண்ணீரை அருந்துவது நல்லது.

மணத்தக்காளி சூப்

மணத்தக்காளி சூப்

மழையில் நனைவதாலோ அல்லது குளிர்ந்த சூழலாலோ மூக்கை அடைத்துக்கொண்டு சளி பிடிப்பதுபோல இருக்கும். அது போன்ற சூழலில் மணத்தக்காளிக்கீரையை சூப் செய்து அருந்தினால் உடனடியாக ஜலதோஷம் விலகும். மணத்தக்காளி குளிர்ச்சியூட்டக்கூடியது என்றாலும், அதை சூப் வடிவில் செய்து சூடாக அருந்தினால் தொண்டை கரகரப்பு, மூக்கடைப்பு, ஜலதோஷம் போன்றவை குணமாகும்.

அசைவ உணவுகள்

அசைவ உணவுகள்

அசைவ உணவுகள் விரும்புகிறவர்கள் மீன், இறைச்சி போன்ற உணவுகளை சாப்பிடலாம். என்றாலும் இது அளவுடன் இருக்க வேண்டும். அதே நேரத்தில் செரிமானம் ஆகுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இறைச்சி உண்டதும் வெற்றிலை போடுவது அல்லது பெருஞ்சீரகம், புதினா போன்றவற்றில் எதையாவது மென்று சாப்பிடுவது செரிமானத்துக்கு வழிவகுக்கும்.

பூச்சித் தொல்லை

பூச்சித் தொல்லை

மழைக்காலங்களில் கொசு, பூரான், வண்டு மற்றும் சிறுபூச்சிகளின் தொல்லைகள் அதிகம் இருக்கும். நொச்சி, வேம்பு போன்ற இலைகளை வீட்டுக்கு வெளியே தீயிட்டு கொளுத்தி புகைமூட்டம் போட்டால், கொசுக்களின் தொல்லை இருக்காது. வீட்டின் உள்ளே கற்பூரம் கொளுத்துவது, படுக்கையைச் சுற்றி பூண்டுப் பற்களை நசுக்கிவைப்பது, மஞ்சள் நீர் தெளிப்பது போன்றவை பூச்சிகளின் தொந்தரவிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்.

மலச்சிக்கல்

மலச்சிக்கல்

மழைக்காலங்களில் நாம் தண்ணீர் அதிகமாக அருந்துவதில்லை. இதனால் மலச்சிக்கல் வரும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, நிறையத் தண்ணீர் அருந்த வேண்டும். மலச்சிக்கல் வந்தாலும் அவ்வப்போது காய்ந்த திராட்சைப்பழங்கள், கொய்யாப்பழம், பப்பாளி போன்றவற்றை அதிகமகா எடுத்துக் கொள்ளுங்கள்

பூண்டுப் பால்

பூண்டுப் பால்

இரவில் உறங்குவதற்கு முன்னர் பூண்டுப்பால் அருந்தினால், ஜலதோஷத்துக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். ஒரு நபருக்கு பூண்டுப்பால் செய்ய... 10 பூண்டுப்பற்களை உரித்து, 50 மி.லி பாலுடன் அதே அளவு நீர்விட்டுக் கொதிக்கவைக்கவும். அது பாதியாக வற்றியதும் மிளகு, மஞ்சள் தூள் சேர்த்து இறக்கவும். அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் சளித்தொல்லைகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.

பாதம் பராமரிப்பு

பாதம் பராமரிப்பு

நீரிழிவுக்கான பாத பராமரிப்பு - மழை காலம் எங்கும் ஈரப்பதத்தை உண்டாக்குவதால், எல்லோருக்கும் குறிப்பாக நீரிழிவு நோய்க்கு ஒரு சிறப்பு பாதம் பராமரிப்பு தேவை.

தினமும் இரவு படுக்கப்போகும் முன்பு, சிறிது வெந்நீரை ஊற்றி, அதில் உங்கள் பாதங்களை 5 நிமிடங்கள் ஊற வைத்து கைவிரல்களால் மசாஜ் செய்யுங்கள்.

இப்படிச் செய்வதால் உடல் முழுவதும் உள்ள இறுக்கம் விடுபட்டது போல் இருக்கும். வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வரும்போது சுத்தமான தண்­ணீரால் கால்களை நன்கு கழுவி, சுத்தமான துணியால் ஈரத்தை துடையுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Important tips to take care of your health in rainy season

Important tips to take care of your health in rainy season
Story first published: Wednesday, November 1, 2017, 16:08 [IST]
Desktop Bottom Promotion