Latest Updates
-
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா?
வெறும் உப்பைக் கொண்டு ஒற்றைத் தலைவலியில் இருந்து உடனடியாக விடுபடுவது எப்படி?
இங்கு வெறும் உப்பைக் கொண்டு ஒற்றைத் தலைவலியில் இருந்து உடனடியாக விடுபடுவது எப்படி என்று கொடுக்கப்பட்டுள்ளது.
சாதாரணமாக தலைவலி வந்தாலே, நாம் பாடுபடுகிறோம். அதிலும் ஒற்றைத் தலைவலி பிரச்சனை ஒருவருக்கு இருந்தால், இவ்வுலகில் அவர்களைத் தவிர வேறு யாரும் அம்மாதிரியான வலியை அனுபவித்து உயிர் வாழ முடியாது. அவ்வளவு கொடுமையாக இருக்கும்.

ஒற்றை தலைவலி எப்போது வேண்டுமானாலும் வரும். அதிலும் வலி இருக்கும் போது சூரியக்கதிர்கள் பட்டால், அப்போது தாங்கவே முடியாது. இந்த ஒற்றை தலைவலி தீவிரமாக இருக்கும் போது, குமட்டல், வாந்தி, கால்கள் மற்றும் கைகளில் கூச்ச உணர்வு அதிகரிக்கும், பார்வை மங்கலாகும்.
இப்பிரச்சனைக்கு அவ்வளவு எளிதில் சிகிச்சையின் மூலம் தீர்வு காண முடியாது. இருப்பினும் நம் தமிழ் போல்ட் ஸ்கை உலக சுகாதார தினத்தையொட்டி, ஒற்றைத் தலைவலியில் இருந்து உடனடியாக விடுபட உதவும் ஓர் எளிய வழியைக் கொடுத்துள்ளது. அது என்ன என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கல் உப்பு
உப்பு பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வளிப்பதில் மிகவும் சிறந்தது. எனவே நல்ல தரமான உப்பை எப்போதும் வாங்குங்கள். அதிலும் இமாலய உப்பு மிகவும் நல்லது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவதோடு, தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலிக்கு சிகிச்சை அளிக்கவும், உடலில் அல்கலைனைத் தக்கவைக்கவும், எலக்ட்ரோலைட்டுக்களை நிலையாக வைத்திருக்கவும் உதவும்.

எலுமிச்சை
ஒற்றைத் தலைவலியில் இருந்து விடுபட உதவும் மற்றொரு பொருள் எலுமிச்சை. இது உடலை சுத்தம் செய்வதோடு, ஒற்றைத் தலைவலியில் இருந்தும் நிவாரணம் அளிக்கும்.

தேவையான பொருட்கள்:
இமாலய கல் உப்பு - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை - பாதி

செய்முறை:
முதலில் ஒரு டம்ளர் நீரில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து, அத்துடன் உப்பு சேர்த்து நன்கு கலந்து குடிக்க வேண்டும். இப்படி ஒற்றை தலைவலியின் போது குடித்தால், சில நிமிடங்களில் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

குறிப்பு
ஒற்றை தலைவலி வருவதற்கு மோசமான வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், தூக்கமின்மை போன்றவைகளும் ஓர் காரணம் என்பதால், இனிமேல் அந்த தவறை செய்து இந்த கொடுமையான பிரச்சனையில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.



Click it and Unblock the Notifications
