For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலில் தேங்கியிருக்கும் அனைத்து நச்சுக்களையும் போக்கும் மூலிகைகள்!

உடலில் உள்ள நச்சுக்களை போக்கும் மூலிகைகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது

By Lakshmi
|

நீங்கள் உங்களது முழு உள் உடலை எப்போது கடைசியாக சுத்தம் செய்தீர்கள் என்று நியாபகம் இருக்கிறதா? நமது வெளி உடலை எப்படி தினமும் குளித்து செய்யாவிட்டால் அதிகப்படியான அழுக்கு சேர்ந்து உடல் நலம் பாதிக்கப்படுமோ அதை விட அதிகமாக உள் உடல் பாதிக்கப்படும். எனவே நமது முழு உடலையும் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். இல்லை என்றால் உடலின் உட்பகுதியில் அங்காங்கே நச்சுக்கள் சேர்ந்துவிடும்.

உடலில் அதிகமாக நச்சுக்கள் சேர்ந்துவிடுவதால், உங்களது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும். இந்த நச்சுக்களை நீக்க மூலிகைகளே மிகச்சிறந்த தீர்வாகும். இது நச்சுக்களை நீக்க உங்களது ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. கொத்தமல்லி

1. கொத்தமல்லி

கொத்தமல்லியில் ஆன்டி மைக்ரோபையல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன், உடலில் உள்ள தேவையற்ற பொருட்களை நீக்கும் திறன் ஆகியவை அடங்கியுள்ளன. இது வயற்று கோளாறுகளை சரி செய்கின்றன. அதுமட்டுமின்றி இரத்த சர்க்கரையின் அளவை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது. இதனை நீங்கள் ஜூஸ் செய்தும் பருகலாம்.

2. திரிபலா

2. திரிபலா

திரிபலா ஒரு ஆயுர்வேத மருந்தாகும். கடுக்காய், தான்றி, நெல்லிக்காய் ஆகிய மூலிகைகளை ஒன்றாக சேர்ந்து அரைப்பதால் கிடைப்பதாகும். தினமும் இரவில் அரை டீஸ்பூன் திரிபலா சூரணத்தை அரை கப் சூடான நீரில் கொதிக்க 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து பருகலாம்.

3. மில்க் த்ரிஸ்டில் (Milk Thistle)

3. மில்க் த்ரிஸ்டில் (Milk Thistle)

இது ஒரு ஆன்டி ஆக்ஸிடண்டாக செயல்படுகிறது. இது உடலில் உள்ள இறந்த செல்களை அகற்றுகிறது. இதன் விதைகளை உணவுக்கு முன்னர் வேறும் வயிற்றில் சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைக்கும். இது உடலில் உள்ள அனைத்து நச்சுக்களையும் அகற்றும் தன்மை கொண்டது.

4. வேம்பு

4. வேம்பு

வேம்பு இலை மிகவும் கசப்பானதாக தான் இருக்கும். ஆனால் இதில் எண்ணிலடங்காத மருத்துவ குணங்கள் உள்ளன. இது செரிமானத்திற்கும் உதவுகிறது. தினமும் வேம்பின் இலைகளை சாப்பிட்டு வருவதால் உடலில் உள்ள அனைத்து பாக்டீரியாக்களும் அழியும். இது வைரஸ், பூஞ்சை, பாக்டீரியா என அனைத்தையும் எதிர்க்கும் திறன் கொண்டது.

5. புதினா

5. புதினா

புதினாவில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடண்டுகள் உள்ளது. இது செரிமானத்திற்கு உதவுகிறது. புதினா டீ வயிற்றை சுத்தம் செய்ய உதவுகிறது. இது குடல் எரிச்சலை போக்கும் தன்மை உடையது. இது வயிற்றை குளுமைப்படுத்துகிறது. தோல் அரிப்பு, பற்களை வெண்மையாக்குதல், வாய்துர்நாற்றம் போக்குதல், இரத்தம் செய்தல், உடலில் உள்ள நஞ்சுகளை போக்கவும் உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Herbs for Detoxification

Herbs for Detoxification
Story first published: Monday, September 25, 2017, 17:32 [IST]
Desktop Bottom Promotion