வெங்காயத்தை பற்களுக்கு அடியில் வைப்பதால் உடல் பெறும் அற்புத நன்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

வெங்காயம் ஒரு சிறந்த உணவு பொருள். நாம் அன்றாடம் நமது உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவு பொருள் வெங்காயம். இதில் இருந்து நமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி மிகுதியாக கிடைக்கிறது. மேலும், இது உடலில் இருக்கும் நச்சுக் கிருமிகளை அழிக்க வெகுவாக உதவுகிறது.

Health Benefits of Placing Onion Slice Under Teeth

Image Courtesy

எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் கொண்டுள்ள வெங்காயத்தை பற்களின் அடியில் வைத்துக் கொள்வதால் நாம் பெறும் நன்மைகள் என்னென்ன என்று இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பல் வலி போக்கும்!

பல் வலி போக்கும்!

தாங்காத பல் வலியால் அவதிப்படுகிறீர்களா? அப்போது உங்களுக்கு இது சிறந்த தீர்வளிக்கும். ஒரு வெங்காயத்தை ஸ்லைசாக அறுத்து, அதை பற்களுக்கு கீழே வைத்தால் பல் வலி குறையும்.

ஆரம்பம்...

ஆரம்பம்...

உங்களுக்கு பல் வலி ஆரம்பத்தில் தான் இருக்கிறது என்றால், அப்போதே அந்த பல் வலி அதிகரிக்காமல் செய்ய / பல்வலியை போக்க வெங்காயத்தை மென்று வந்தால் போதுமானது.

ஒரு சில நிமிடங்கள்...

ஒரு சில நிமிடங்கள்...

அல்லது வெங்காயத்தை ஸ்லைசாக அறுத்து, அதை பற்களுக்கு அடியில் ஒருசில நிமிடங்கள் வைத்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தின் ஜூஸ் மெல்லே, மெல்ல இறங்கி, பல் வலியில் இருந்து குணமடைய செய்யும்.

கிராம்பு எண்ணெய்!

கிராம்பு எண்ணெய்!

இந்த வெங்காய சிகிச்சைக்கு அடுத்து, கிராம்பு எண்ணெய்யை கூட பல்வலி போக்க பயன்படுத்தலாம்.பஞ்சை 2-3 சொட்டு கிராம்பு எண்ணெயில் நனைத்து பல் வலை இருக்கும் இடத்தில் தேய்த்து கொடுத்தால் போதும். நல்ல நிவாரணம் பெறலாம்.

பற்களின் ஆரோக்கியம்!

பற்களின் ஆரோக்கியம்!

பல் வலி ஏற்படாமல் இருக்க பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக உணவு துகள்கள் பற்களின் இடுக்குகளில் சிக்கி கொள்வதை சுத்தம் செய்யாமல் விட்டால் அது கிருமிகள் அதிகரிக்க செய்து, பல் வலி உண்டாக காரணியாக அமையும். எனவே, பற்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

வெள்ளரிக்காய்!

வெள்ளரிக்காய்!

வெங்காயத்தை போலவே, வெள்ளரிக்காய் ஸ்லைஸ் அறுத்து அதை பற்களுக்கு அடியில் வைத்தாலும் பல் வலி குறையும்.

இஞ்சி!

இஞ்சி!

பல் வலி மிகுதியாக இருந்தால் இஞ்சியை சிறு துண்டாக அறுத்து, அதை பல் வலி இருக்கும் இடத்தில் வைத்து மென்று வந்தால் வலி குறைய உதவும்.

டீ பேக்!

டீ பேக்!

சூடான டீ பேக்கை பல் வலி இருக்கும் இடத்தில் நேரடியாக வைத்து ஒத்தடம் போல கொடுத்தால் பல் வீக்கத்தை குறைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health Benefits of Placing Onion Slice Under Teeth

Health Benefits of Placing Onion Slice Under Teeth
Please Wait while comments are loading...
Subscribe Newsletter