Latest Updates
-
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்..
பல ஆரோக்கிய நன்மைகளை தரும் இலவங்கப்பத்திரி இலை பற்றி தெரியுமா?
இலவங்கப்பத்திரியின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளன
இலவங்கப்பத்திரி இலைகள் நமக்கு எளிதில் சந்தைகளில் கிடைக்கக் கூடிய ஒன்றாகும். இதனை நாம் பிரியாணி இலைகள் என்று கூறுகிறோம். இது பிரியாணி போன்ற உணவுகளுக்கு நறுமணம் ஊட்டும் முக்கிய மசாலா பொருளாக செயல்படுகிறது. இது ஒரு சிறந்த மசாலா பொருள் மட்டும் அல்ல. சிறந்த மருத்துவ பொருளும் கூட... இதன் மகத்தான நன்மைகள் பற்றி இந்த பகுதியில் காணலாம்.

பொடுகு மற்றும் முடிவளர்ச்சி :
பொடுகு மற்றும் முடிவளர்ச்சி பிரச்சனையால் நீங்கள் அவதிப்படுகிறீர்களா? அப்படி என்றால் சிறிதளவு இலவங்கப்பத்திரி இலைகளை நீரிலே இட்டு காய்ச்சி, ஆற வைத்து பின் தலையை அலச வேண்டியது அவசியமாகும். இதன் பின்னர் ஷாம்பு போட்டு தலையை அலசி விடுவது அவசியம்.

தலை அரிப்பு :
தலையில் அரிப்பு உள்ளவர்கள், இந்த இலைகளை அரைத்து தலைக்கு மாஸ்க் போட்டு அரை மணி நேரம் கழித்து தலைமுடியை அளவான சூடுள்ள நீரில் அலசி விட வேண்டும்.

சர்க்கரை நோய் :
தினமும் இரண்டு முறை இலவங்கப்பத்திரி இலைகளை எடுத்துக்கொள்பவர்களுக்கு, உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. குறிப்பாக இது டைப் 2 வகை சர்க்கரை நோயாளிகளுக்கு உதவும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

ஜீரண கோளாறு :
வயிற்றுப்போக்கு மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற பிரச்சனைகளுக்கு இது மருந்தாக பயன்படுகிறது. இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவியாக இருக்கிறது. ஜீரண கோளாறுகளை சரி செய்து, சரியான முறையில் இயங்க வழி செய்கிறது.

புற்றுநோய் எதிர்ப்பு :
புற்றுநோயை உண்டாக்க கூடிய புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தி வைக்க இந்த இலவங்கப்பத்திரி உதவியாக இருக்கிறது என ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications
