Latest Updates
-
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா?
தினசரி ஆரோக்கிய பிரச்சனைகளுக்கான சில பாட்டி வைத்திய குறிப்புகள்
grandma health tips for day today health problems
நீங்கள் உங்களது பாட்டியுடன் சிறிது நேரம் பேசினாலே, அவரிடம் இருந்து ஏராளமான பாட்டி வைத்திய குறிப்புகளை பெற்றுவிடலாம். அவர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ இந்த பாட்டி வைத்தியங்களே காரணமாக இருக்கும். இவை உணவு பொருளாக இருப்பதால், உங்களது உடலில் எந்த வித பக்கவிளைவுகளையும் உண்டாக்காது. இந்த பகுதியில் நமக்கு அடிக்கடி உண்டாகும் சில உடல்நல பிரச்சனைகளுக்கான தீர்வுகளை காணலாம்.

வயிற்றுப்போக்கு
வெள்ளை அல்லது பிரன் அரிசியால் செய்யப்பட்ட கஞ்சியை குடித்தால் வயிற்றுப்போக்கு சீக்கிரமாக குணமாகிவிடும்.

வறட்சியான கண்கள்
வறட்சியான கண்களுக்கு 1 அல்லது 2 டிஸ்பூன் ஆளி விதை எண்ணெய்யை தினமும் குடித்து வர வறட்சியான கண் பிரச்சனை தீரும். இதில் ஒமேகா 3 உள்ளது.

பருக்கள்
முகப்பருக்களுக்கு 1 பங்கு வினிகரில் மூன்று பங்கு தண்ணீர் விட்டு, பஞ்சில் இதனை நனைத்து பருக்களில் அப்ளை செய்ய வேண்டும். இது முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய்யை போக்கி பருக்களை ஒழிக்கிறது.

வலிமை இல்லாத எலும்புகள்
சியா விதைகள் பாலை விட 4 மடங்கு அதிகமாக கால்சியத்தை ஏற்கும் தன்மை கொண்டுள்ளது. இதில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளன். இதனை சுமூத்திகள், தயிர் போன்றவற்றில் கலந்து சாப்பிடலாம்.

மலச்சிக்கல்
மலச்சிக்கல் உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு காரணமாக உள்ளது. படுக்கைக்கு செல்லும் முன்னர் ஒரு டேபிள் ஸ்பூன் ஆழி விதையை மிதமான சூடுள்ள நீருடன் குடித்தால் மலச்சிக்கல் நீங்கும்.



Click it and Unblock the Notifications
