ஒரு நாளுக்கு எத்தனை முறை காற்றை பிரிக்கிறீர்கள்?

Posted By:
Subscribe to Boldsky

அணுகுண்டு போட்டதை வடகொரியா ஒப்புக் கொண்டாலும், மனிதன் போட்ட குண்டை யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். இது கௌரவ பிரச்சனை.

சில வருடங்கள் கழித்து நண்பர்களுடன் பேசும் போது கூட, "அன்னிக்கு அவன் விட்டான் பாருடா..." என வேண்டும் என்றே யாராவது சொல்லி சிரிப்பை கிளப்பிவிட. அந்த "விட்ட" நபர் கையறுநிலைக்கு தள்ளப்படுவார்.

உண்மையில் வாயு வெளியேறுவது உடல் நலம் நன்றாக இருக்கிறது என்பதை வெளிகாட்டும் அறிகுறி. நாம் உட்கொள்ளும் பெரும்பாலான உணவுகளில் வாயு இருக்கிறது. அது கட்டாயம் வெளியேற வேண்டும். வாயு வெளியேறாமல் இருப்பது தான் தவறு.

முக்கியமாக, வாயுவை அடக்குதல் ஆரோக்கியத்தை கெடுக்கும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அந்தரங்க முடிகள்!

அந்தரங்க முடிகள்!

உங்கள் ஆசன வாய் பகுதியில் இருக்கும் முடிகளை முற்றிலும் நீங்கள் அகற்றிவிட்டால் சப்தமில்லாமல் உங்களால் வாயு வெளியேற்ற முடியாது.

அசிங்கம்!

அசிங்கம்!

குஷ் என்று சொன்னால் எப்படி நால்வர் முகத்தை சுளிப்பார்களோ, அப்படி தான் ஆங்கிலத்தில் Fart என்று சொல்வது அருவருக்கத்தக்க வார்த்தையாக காணப்படுகிறது. உண்மையில் இந்த வார்த்தை Feortan என்ற ஆங்கில சொல்லில் இருந்து திரிந்து வந்ததாகும். இதற்கு பொருள் காற்றை உடைப்பது, பிரிப்பது.

பலூன்!

பலூன்!

ஒருநாளுக்கு சராசரியாக ஒரு மனிதன் 14 முறை வாயு வெளியேற்றுகிறான். இந்த காற்றை வைத்து மீடியம் சைஸ் பலூன் ஒன்றை நிரப்பிவிடலாம்.

சராசரியாக மனிதரிடம் இருந்து வெளியேறும் வாயுவின் வேகம் மணிக்கு 9.5 கி.மீ ஆகும்.

பெண்கள்!

பெண்கள்!

ஆண்களின் வாயுவைவிட, பெண்களின் வாயுவின் நாற்றம் அதிகமாக இருக்குமாம். இதற்கு காரணம் பெண்களின் உடலில் இருக்கும் அதிக ஹைட்ரஜன் சல்பைட் என கூறப்படுகிறது. மேலும், நீங்கள் வெளியேற்றிய வாயுவின் நாற்றத்தை முழுமையாக நீங்கள் உணர முடியாது. மற்றவர்கள் தான் அதிகம் உணர்வார்கள்.

அடக்க வேண்டாம்!

அடக்க வேண்டாம்!

வாயுவை அடக்குவது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். இதனால் தலைவலி, குடல் இயக்க கோளாறுகள் ஏற்படலாம். நீங்கள் விழித்திருக்கும் நேரத்தை விட, உறங்கும் வேளையில் வாயு அதிகம் வெளியேறும்.

உள்ளாடைகள்!

உள்ளாடைகள்!

வாயு வெளியேறும் சப்தம் வெளியே கேட்காமல் இருக்க பிரத்யேக உள்ளாடைகள் உள்ளன. இவை Fart Filtering உள்ளாடைகள் என விற்கப்படுகின்றன. என்ன விலை கொஞ்சம் அதிகம்.

இறந்து மூன்று முதல் நான்கு மணி வரையிலும் கூட இறந்த உடலில் இருந்து வாயு, ஏப்பம் வெளிவரும் வாய்ப்புகள் உள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Funny Facts About Fart!

Funny Facts About Fart!
Story first published: Tuesday, September 26, 2017, 17:16 [IST]