செக்சுவல் ஹெல்த் குறித்து ஆண்கள் சாதாரணமாக எண்ணிவிட கூடாத 5 அறிகுறிகள்!

Posted By:
Subscribe to Boldsky

உடலில் எந்தவிதமான மாற்றம் ஏற்பட்டாலும் நமது உடல் அதை பற்றிய அறிகுறிகளை வெளிப்படுத்திவிடும். அது நல்லதாக இருந்தாலும் சரி, கெட்டதா இருந்தாலும் சரி. இந்த அறிகுறிகளை நாம் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டியது தான் அவசியம்.

நாம் மிகவும் சங்கோஜம் அடையும் பிரச்சனை அந்தரங்க பகுதிகளில் ஏற்படும் குறைகள். முக்கியமாக பிறப்புறுப்பு பகுதியல் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து மருத்துவரிடம் பேசவே பலரும் கூச்சப்படுவார்கள்..

அந்த வகையில் முக்கியமாக ஆண்கள் இந்த 5 அறிகுறிகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அறிகுறி #1

அறிகுறி #1

ஆண்குறியின் முன் தோல் இறுக்கமாக இருப்பது, அல்லது ஆண்குறி தலை பகுதியில் ஆங்காங்கே வெள்ளை புள்ளிகள்

தென்படுவது "Lichen Sclerosus" எனும் பாதிப்பு ஆகும். இது ஹார்மோன் அல்லது நோய் எதிர்ப்பு சமநிலை இழப்பு காரணமாக ஏற்படுகிறது.

அறிகுறி #2

அறிகுறி #2

அரிப்பு ஏற்படுவது இயல்பு. ஆனால், அரிப்பு காரணமாக அல்லது புண்கள் ஆண்குறியில் ஏற்படுவது அசாதாரணம். வலியில்லாமல் கூட இருக்கலாம். ஆனால், இது ஆண்குறி புற்றுநோய்க்கான அறிகுறி ஆகும். இதை சரிப்பார்க்காமல் விட்டுவிட்டால் ஆண்குறி நீக்க வேண்டிய நிலை கூட ஏற்படலாம்.

அறிகுறி #3

அறிகுறி #3

சிலருக்கு ஆண்குறி வளைந்து காணப்படும். இது இயல்பு தான். ஆனாலும், ஆண்குறி மிகவும் வளைந்து காணப்படுவது Peyronie எனும் நோயின் காரணம் ஆகும். இந்த நோய் எதனால் ஏற்படுகிறது என இது நாள் வரை தெளிவாக அறியப்படவில்லை. ஆனால், இது விறைப்பு தன்மையை பாதிக்கும். இது பெரும்பாலும் 40 வயதை கடந்த ஆண்கள் மத்தியில் தான் காணப்படுகிறது.

அறிகுறி #4

அறிகுறி #4

பருக்கள் அல்லது கட்டிகள் போன்று விதைப்பையில் தென்படுவது. இது விதைப்பை புற்றுநோய் அறிகுறி என கூறுகின்றனர். சிறுசிறு பருக்கள் போல தோன்றுவது சாதாரண இன்பெக்ஷன் அல்லது மயிர்கால் வளர்ச்சி ஏற்படும் போது அப்பகுதி முடிகளால் ஏற்படுவது என கூறப்படுகிறது. ஆயினும் கட்டி போன்று உண்டானால் உடனே பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும்.

அறிகுறி #5

அறிகுறி #5

அதிகரித்த புரோஸ்டேட் அல்லது சிறுநீரக கற்கள் போன்ற காரணத்தாலும் சிறுநீரில் இரத்தம் கலந்து வெளிவரலாம் என டெக்சாஸ் மருத்துவ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பரிசோதனை

பரிசோதனை

மற்றும் மருத்துவர்கள் சிறுநீரில் இரத்தம் கலந்து வருவது புற்றுநோயின் அறிகுறியும் கூட என கூறுகின்றனர். மேற்கூறிய இந்த ஐந்து அறிகுறிகளில் எது தென்பட்டாலும் அதன் ஆரம்ப காலக்கட்டத்திலேயே பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Five Signs You Should Get Your Sexual Health Checked

Five Signs You Should Get Your Sexual Health Checked
Subscribe Newsletter