ஒரு லாங் லிப்லாக் கிஸ்ஸிற்கு பிறகு உடலில் ஏற்படும் 10 மாற்றங்கள் பற்றி தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

"மகள்கள் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தில் சேராதது என்று..." ஆமாங்க! முத்தம் என்பது அன்பின் வெளிபாடு. கட்டாயப்படுத்தி ஒருவருடன் உடலுறவில் கூட ஈடுபடலாம். ஆனால், முத்தமிட முடியாது. அப்படி செய்தாலும் உங்களுக்கு அதில் எந்த ஒரு உணர்ச்சியும் இருக்காது.

முத்தம் என்பது ஒரு உறவின் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, உங்கள் உடலின் ஆரோக்கியத்தையும் பல வகைகளில் மேம்பட உதவுகிறது.

Changes That Happens after a Long Kiss!

முத்தமிட்டுக் கொள்வதால் மனதில் ஒரு நிம்மதி, மகிழ்ச்சி ஏற்படுகிறது எண்ணும் நபர்களே, முத்தமிட்டுக் கொள்வதால், முத்தமிட்டுக் கொண்ட பிறகு ஒரு சில நிமிடத்தில் உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இதயத்துடிப்பு!

இதயத்துடிப்பு!

ஒரு நீண்ட முத்தமிட்டுக் கொள்வது (லிப்லாக்) உங்கள் சர்குலர் சிஸ்டத்திற்கு நன்மை விளைவிக்கும். இதனால் உங்கள் இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 110 முறை துடிக்கும். இது இதயத்திற்கு ஒரு நல்ல பயிற்சி ஆகும்.

நுரையீரல்!

நுரையீரல்!

முத்தமிட்டுக் கொண்ட பிறகு நுரையீரல் வலிமையாக இயங்க துவங்கும். நிமிடத்திற்கு 20 முறை என்பதை தாண்டி 60 முறை மூச்சு விடுவீர்கள். இதனால் நுரையீரல் பிரச்சனை வாய்ப்புகள் குறையும்.

எச்சில்!

எச்சில்!

வாயில் எச்சில் சுரக்க வேண்டியது அவசியம். இது உணவில் செரிமானம், வாயின் ஆரோக்கியம் என பலவற்றுக்கு உதவும். முத்தமிட்டுக் கொள்வதால் வாயில் எச்சில் அதிகம் சுரக்கும் என பல் மற்றும் வாய் ஆரோக்கிய மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மன அழுத்தம்!

மன அழுத்தம்!

மூன்று நிமிடத்திற்கும் மேலாக முத்தமிட்டுக் கொள்வது மன அழுத்தம் மற்றும் அதன்பால் ஏற்படும் விளைவுகளை குறைய செய்கிறது. மேலும், முத்தமிட்டுக் கொள்வதால் ஏற்படும் பயோ-கெமிக்கல் ரியாக்ஷன்கள் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களை அழிக்குமாம்.

ஆயுள்!

ஆயுள்!

தினமும் துணையை முத்தமிட்டு வழியனுப்பும் தம்பதிகள் மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் ஐந்து ஆண்டுகள் அதிகம் ஆயுள் பெறுகிறார்களாம். அப்பறம் என்ன காசா, பணமா.. தினமும் ஒன்னு கொடுத்து அனுப்புங்க.

சுய மரியாதை!

சுய மரியாதை!

முத்தமிட்டுக் கொள்வது ஒருவரின் சுய மரியாதை நிலையை ஊக்குவிக்கிறது. இதனால் அவரின் மனநல அளவு மேலோங்கும். மேலும், இது ஒருவகையான பாராட்டும் கருவியாக திகழ்கிறது.

கலோரிகள்!

கலோரிகள்!

ஒரு நிமிட முத்தம் இரண்டு முதல் மூன்று கலோரிகளை கரைக்க செய்கிறது. இரட்டிப்பு மடங்கு வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. அன்பாக வெளிப்படும் முத்தம் குறைந்தது 20 நொடிகளாவது நீடிக்கும்.

மன பாரம்!

மன பாரம்!

மன பாரத்தை குறைக்க முத்தம் ஒரு சிறந்த கருவி. இது ஒருவரின் கோபம், மனதில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் கார்டிசால் எனப்படும் மன அழுத்த ஹார்மோனை அழித்தல், நல்ல எண்ணங்கள் மனதில் அதிகரிக்க செய்தல் என பல வகையில் உதவுகிறது.

தசைகள்!

தசைகள்!

முத்தமிட்டுக் கொள்ளும் போது முகத்தின் முப்பது தசைகள் செயல்படுகின்றன. இதில் எட்டு, முகத்தின் சருமம் இறுக்கமடைய உதவுகிறது. இதனால் கன்னம் தொங்காது, சருமம் மிருதுவாகும். முகத்தின் சருமத்தில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

இதயம்!

இதயம்!

முத்தம் இதயத்திற்கு ஒரு நல்ல தோழன். இது இதயம் நன்கு பம்ப் ஆக உதவும் அட்ரினலின் உருவாக்குகிறது. இதனால் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். அடிக்கடி முத்தமிட்டுக் கொள்தல், இதய இயக்க நலன், இரத்த அழுத்தம் குறைய, கொலஸ்ட்ரால் குறையவும் முத்தம் பலனளிக்கிறது.

அடிக்கடி முத்துமிட்டுக் கொள்வதால் நீங்கள் பெறும் இதர நலன்கள்...

  1. வயிற்றுவலி வராது,
  2. இரத்தத்தில் இன்பெக்ஷன் ஏற்படாது,
  3. இயற்கையாக எச்சிலில் இருந்து ஆன்டி- பயாடிக்ஸ் உற்பத்தி ஆகும்.,
  4. மனநலம் மேம்படும்,
  5. நிம்மதி உணர்வீர்கள்!
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Changes That Happens after a Long Kiss!

Changes That Happens after a Long Kiss!
Subscribe Newsletter