உடல் சூட்டைத் தணித்து, உடலைக் குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள சில டிப்ஸ்...

Posted By:
Subscribe to Boldsky

வெயில் காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பலரது உடலும் மிகவும் வெப்பமாக இருக்கும். காலநிலை திடீரென்று மாறும் போது, பலர் கோடைக்காலத்தின் ஆரம்பத்தில் உடல்நலக் குறைவால் அவஸ்தைப்படுவார்கள்.

Best Tips To Stay Cool And Healthy This Summer!

குளிர்காலத்தில் எப்படி உடலை வெப்பமாக வைத்துக் கொள்ள முன்னெச்சரிக்கையாக சில விஷயங்களைச் செய்கிறோமோ, அதேப் போல் கோடையில் உடலைக் குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள சிலவற்றை மேற்கொள்ள வேண்டும்.

இங்கு கொளுத்தும் கோடையில் உடலைக் குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்வதற்கான சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டிப்ஸ் #1

டிப்ஸ் #1

கோடையில் வெளியே செல்லும் போது, சன்ஸ்க்ரீன் லோசனைத் தவறாமல் சருமத்திற்கு பயன்படுத்துங்கள். இல்லாவிட்டால், சூரியனின் புறஊதாக் கதிர்களால் சரும செல்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, சில நேரங்களில் சரும புற்றுநோய் வரும் அபாயமும் அதிகரிக்கும்.

டிப்ஸ் #2

டிப்ஸ் #2

கோடைக்காலத்தில் தினமும் தவறாமல் குறைந்தது 3 லிட்டர் நீரைக் குடியுங்கள். ஏனெனில் வெயிலால் உடலில் உள்ள நீர்ச்சத்து மிகவும் வேகமாக குறைய ஆரம்பிக்கும்.

டிப்ஸ் #3

டிப்ஸ் #3

பழங்கள் மற்றும் காய்கறிகளால் ஆன சாலட்டுகளை அன்றாடம் தவறாமல் ஒருமுறையாவது சாப்பிட வேண்டும். இதனால் உடலில் நீர் வறட்சி ஏற்படுவதைத் தடுக்கலாம்.

டிப்ஸ் #4

டிப்ஸ் #4

எப்போதும் வெயில் காலத்தில் காரமான உணவுகளை உட்கொள்ள வேண்டாம். இந்த உணவுகள் உடலின் வெப்பத்தை மேன்மேலும் அதிகரிப்பதோடு, செரிமான பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.

டிப்ஸ் #5

டிப்ஸ் #5

கோடையில் காலை உணவை மட்டும் தவறாமல் சாப்பிட வேண்டும். ஆரோக்கியமான காலை உணவு தான் ஒரு நாளைக்கு வேண்டிய ஆற்றலை வழங்கி, வெயிலால் மயக்கம் ஏற்படுவதைத் தடுக்கும்.

டிப்ஸ் #6

டிப்ஸ் #6

மற்ற காலங்களை விட, கோடையில் மது அருந்துவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் மது உடலின் வெப்பநிலையை அதிகரிக்கும்.

டிப்ஸ் #7

டிப்ஸ் #7

வெளியே செல்லும் போது எலுமிச்சை ஜூஸ், ஓஆர்எஸ் நீர்மம் போன்றவற்றை கையில் எடுத்து செல்லுங்கள். இதனால் உடல் வறட்சி அடையவதைத் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Best Tips To Stay Cool And Healthy This Summer!

Here are a few tips that you can follow now, in order to remain cool and healthy, this summer.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter