For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடல் எடையை குறைக்க அடிக்கடி ப்ளாக் டீ குடிக்கும் நபரா நீங்கள்? அப்போ இதப்படிங்க!

ப்ளாக் குடிப்பதினால் உடலில் ஏற்படக்கூடிய பின் விளைவுகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.

|

உடல் நலனில் அக்கறை செலுத்தும் யாரும் கவனம் செலுத்த வேண்டியது அவர்கள் சாப்பிடக்கூடிய உணவு வகைகள் தான். சிலர் எங்கேயே படித்த கதைகளை எல்லாம் நினைவில் கொண்டு அதைச் சாப்பிடக்கூடாது, அதை குடிக்க கூடாது என்று எதையோ கேட்டு பல விஷயங்களை தவிர்த்து வருகிறோம்.அல்லது அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வோம்.

அவற்றில் ஒன்று தான் ப்ளாக் டீ. உடல் எடையை குறைக்க பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை முற்றிலுமாக சாப்பிடக்கூடாது என்று நம்பி ப்ளாக் டீ அதிகமாக சாப்பிடுவார்கள். இப்படி எதையும் அளவுக்கு மீறி எடுத்துக் கொள்ளும் போது பிரச்சனை தான் ஏற்படும்.

ஒரு நாளைக்கு மூன்று கப்பிற்கு மேல் அதிகமாக ப்ளாக் டீ குடிப்பவர்களுக்கு என்னென்ன உபாதைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கர்ப்பம் :

கர்ப்பம் :

கர்ப்பமாக இருக்கும் பெண்கள், ப்ளாக் டீ அளவுடன் எடுத்துக் கொள்ள வேண்டியது கட்டாயம். இதனை அதிகமாக குடித்தால் இதனால் ஏற்படுகிற பின் விளைவுகள் பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.

சில நேரங்களில், முதல் ட்ரைம்ஸ்டராக இருந்தால் கருக்கலையக்கூட வாய்ப்புண்டு.

அல்லது குறை மாதத்தில் பிரசவம் நடக்கவும் வாய்ப்புகள் உண்டு.

தாய்ப்பால் :

தாய்ப்பால் :

கர்ப்பமாக இருக்கக்கூடிய பெண்கள் மட்டுமல்ல தாய்பால் கொடுக்கக்கூடிய பெண்களும் இதனை தவிர்க்க வேண்டியது அவசியம்.

ஏனென்றால் நீங்கள் அடிக்கடி ப்ளாக் டீ குடிப்பதினால் அதன் நுன்பொருட்கள் உங்கள் ரத்தத்தில் கலந்திருக்கும்.

உங்களிடமிருந்து தாய்ப்பால் அருந்துகிற குழந்தைக்கு அது ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும் இதனால் குழந்தைக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட வாய்ப்புண்டு.

சோர்வு :

சோர்வு :

ப்ளாக் டீயில் அதிகப்படியான கேஃபைன் இருக்கிறது. இதனை அதிகமாக சேர்த்துக் கொண்டால் சோர்வு உண்டாக அதிக வாய்ப்பிருக்கிறது. இதனால் நா வறண்டு போவது, தூக்கம் குறைபாடு,மூச்சு விடுவதில் சிரமம், ஆகியவை ஏற்படும்.

இதய நோய் :

இதய நோய் :

ப்ளாக் அதிகமாக குடிப்பதினால் உங்கள் இதயத்திற்கும் பாதிப்பு ஏற்படக்கூடிய அபாயம் இருக்கிறது. ப்ளாக் அடி தொடர்ந்து ஒரு நாளைக்கு ஐந்து கப்பிற்கு மேல் குடிப்பதினால் இதயத்துடிப்பில் மாற்றங்கள் உண்டாகும். இது அப்படியே சங்கிலித் தொடர் போல பல நோய்களை உருவாக்கிடும்.

ரத்த சோகை :

ரத்த சோகை :

உங்கள் உடலுக்குத் தேவையான சிகப்பு ரத்த அணுக்கள் இல்லையெனில் அவை ரத்த சோகையை ஏற்படுத்திவிடும். ப்ளாக் டீ குடிப்பதால் இப்பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு. ஏற்கனவே இரும்புச் சத்துக்குறைபாடு பிரச்சனை இருப்பவர்கள் ப்ளாக் குடிப்பதை தவிர்த்துவிடுவது தான் நல்லது.

ப்ளீடிங் :

ப்ளீடிங் :

ப்ளாக் டீ அதிகமாக குடித்தால் அது ப்ளீடிங் டிஸ் ஆர்டரை ஏற்படுத்திடும். ஏனென்றால் இதிலிருக்கும் கேஃபைன் பொருள் நம் உடலில் இருக்கக்கூடிய ரத்தம் உறைதலை தாமதப்படுத்துகிறது. இதனால் ப்ளீடிங் டிஸ் ஆர்டர் பிரச்சனையிருப்பவர்களுக்கு இது பெரும் சங்கடத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.

க்ளூக்கோமா :

க்ளூக்கோமா :

கண்களில் இருக்கக்கூடிய ஆப்டிக் நரம்பு தளர்வுறும் போதோ அல்லது பாதிக்கப்படும் போதோ க்ளூக்கோமா பிரச்சனை ஏற்படும். இந்த பிரச்சனையின் போது கண்களில் பிரஷர் அதிகரிக்கும்.

ப்ளாக் டீ தொடர்ந்து குடித்து வர, அதனாலும் கண்களில் பிரஷர் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது சில நேரங்களில் இதனால் பார்வை பறி போகக்கூட வாய்ப்புண்டு. அதனால் க்ளூக்கோமா பிரச்சனை இருப்பது தெரிந்தால் ப்ளாக் டீ முற்றிலுமாக தவிர்த்துவிடுவது நல்லது.

ரத்த அழுத்தம் :

ரத்த அழுத்தம் :

ப்ளாக் டீ கண்களில் இருக்ககூடிய பிரஷரை மட்டுமல்ல நம் உடலில் இருக்கூடிய ரத்த அழுத்தத்தையும் அதிகப்படுத்தக்கூடியது. ரத்த அழுத்தம் திடீரென்று அதிகரிப்பது போன்ற அறிகுறிகள் உங்களுக்கு தெரிந்தால் தயவு செய்து ப்ளாக் டீ குடிக்க வேண்டாம்.

மலச்சிக்கல் :

மலச்சிக்கல் :

ப்ளாக் டீயில் அதிகப்படியாக டேனின் இருக்கிறது. இது அதிகமாக நம் உடலில் இருந்தால் நம் உடலில் சேரும் கழிவுகளை அப்படியே தங்கிடும் ஆபத்து இருக்கிறது. இதனால் மலச்சிக்கல் ஏற்படக்கூடும்.

சில நேரங்களில் அஜீரணத்திற்கு இதைக் குடிக்கிறார்கள். இது தவறானது அஜீரணம் என்றால் ப்ளாக் டீ குடிக்ககூடாது.

எலும்புத் தேய்மானம் :

எலும்புத் தேய்மானம் :

எலும்பு தேய்மானத்திற்கும், ப்ளாக்டீக்கும் என்ன சம்மந்தம் என்று யோசிக்கிறீர்களா? ஆம், ப்ளாக் டீ அதிகமாக குடிப்பதினால் எலும்புகளை தாங்கிப்பிடித்துக் கொண்டிருக்கும் கால்சியம் சத்து கரைய வழி செய்திடும்.

இதனால் எலும்புகள் வலுவிழந்து பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இந்தப்பிரச்சனையை தவிர்க்க கால்சியம் அதிகமாக எடுத்துக் கொள்ள ஆரம்பிப்பதை விட ப்ளாக் டீ குடிப்பதை நிறுத்த வேண்டும்.

1827 டீ :

1827 டீ :

டீ ஒரு உற்சாகம்தரக்கூடிய பானமாக இருக்கிறது. சோர்வாக இருக்கும் போது எனர்ஜிக்காக குடிக்ககூடிய இந்த டீ யில் பல வகைகள் இருக்கின்றன. சந்தையில் வெவ்வேறு விதமான டீ கிடைக்கிறது.

முதன் முதலாக 1827 ஆம் ஆண்டுகளில் தான் டீ தயாரித்து குடித்திருக்கிறார்கள்.

என்னென்ன இருக்கிறது :

என்னென்ன இருக்கிறது :

ப்ளாக் டீ யில் கேஃபைன், ஃப்ளூரைட், க்ளூக்ரோனிக், லேக்டிக் அமிலம்,மேக்னீசியம், டேனின்,பொட்டாசியம்,ப்யூரின்ஸ்,க்சைன்தைன் ,ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்,பாலிஃபினால் மற்றும் கேட்சின்ஸ் ஆகியவை இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Be Aware About Black Tea Side Effects

Be Aware About Black Tea Side Effects
Desktop Bottom Promotion