For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மன அமைதி கிடைக்க இந்த யோகாவை எப்படி செய்யலாம்?

மன அமைதி வேண்டி புத்தர் போல் எல்லாராலும் விருப்பப்படி செல்ல முடியாது. நமக்கென வேலைகள் பல கண் முன் காத்துக் கிடக்கிறது. நீங்கள் இருக்குமிடத்திலே யோகாவினால்நீங்கள் இழந்த மன அமைதியை பெற முடியும்.

|

மன அழுத்தம் எல்லாருக்கும் ஏதேனும் ஒருவகையில் ஏற்படக் கூடியதே. பிரச்சனைகள் தீர்க்கப்படும்போது மன அழுத்தம் குறைந்து மனம் புத்துணர்வாகிவிடும்.

ஆனால் எப்போதும் மன அழுத்தம் இருந்துகொண்டே இருக்கும்போதுஅது உடல் நிலையை பாதிக்கும். பிரச்சனைகள் தீர்க்க முடியாவிட்டாலும், அதற்காக தொடர்ந்து மன அழுத்தத்துடன் இருப்பது நல்லதல்ல.

Uthana shishosana to stress

மன அழுத்தத்திலிருந்து மீண்டு வர உங்களுக்கு பிடித்தமானதை செய்யுங்கள். அதற்கு நேரமில்லையென்றால் உங்கள் அழுத்தலிருந்து மீண்டு வர யோகாவை செய்து பாருங்கள். தீர்வு கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உத்தன சிசோசனா:

உத்தன சிசோசனா:

நாய்குட்டியைப் போல் தோற்றம் கொண்ட நிலையில் செய்யப்படுவதால் சமஸ்கிருதத்தில் இந்த பெயர் வந்தது. இது உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்வு தந்து இறுக்கத்தை தளர்வாக்குகிறது.

 செய்முறை :

செய்முறை :

முதலில் தடாசனத்தில் நில்லுங்கள். பின்னர்ஆழ்ந்து மூச்சை விட்டபிறகு தரையில் முட்டி போட்டு நில்லுங்கள். முட்டியை ஊன்றியபடி நேராக நிற்கவும். கைகளை தளர்த்தி ஆழ்ந்து மூச்சை விடுங்கள்.

 செய்முறை :

செய்முறை :

பின் மெதுவாக உடலை முன்னோக்கி வளையுங்கள். கைகளை தரையில் பதியுங்கள். அழுந்த தரையில் உள்ளங்கைகளை பதித்து முதுகை வளைக்கவும். இடுப்புப் பகுதி மேல் நோக்கியும் முதுகு வளைந்தபடி படத்தில் உள்ளது போல் செய்யவும்.

 செய்முறை :

செய்முறை :

தலையையும் தரையில் பதியுங்கள். ஆழ்ந்து மூச்சை விடுங்கள். ஒரு நிமிடம் இந்த நிலையில் இருந்துவிட்டு பின் இயல்பான நிலைக்கு வரவும். பின்னர் மீண்டும் இது போல் சில முறை செய்யவும்.

பலன்கள் :

பலன்கள் :

மன அமைதியை தரும். முதுகு, தோள்பட்டை வலியை குறைக்கும். உடல் வலியை போக்கும். தோள் மற்றும் முதுகிறகு நெகிழ்வுத்தன்மையை தரும்.

குறிப்பு :

குறிப்பு :

மூட்டு மற்றும் காலில் அடிப்பட்டவர்கள் இந்த அசனத்தை தவிர்க்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Uthana shishosana to stress

Uthana shishosana to get relief from chronic mental stress and body pain.
Story first published: Monday, October 17, 2016, 14:14 [IST]
Desktop Bottom Promotion