நல்ல உடல் மற்றும் மனநலத்துடன் எளிதாக ஆழ்ந்த உறக்கம் பெற பைபாசிக் முறை ட்ரை பண்ணுங்க!

Posted By:
Subscribe to Boldsky

ஒரு நாளுக்கு எட்டு மணிநேரம் உறங்க வேண்டும், ஒரு நாளுக்கு ஆறு மணிநேர கட்டாய உறக்கம் அவசியம். இல்லை என்றால் மன நலன், உடல் நலன் பாதித்துவிடும். உற்பத்தி திறன் குறைந்துவிடும் என அம்மாக்களில் இருந்து மருத்துவர்கள் வரை அனைவரும் கூறுவார்கள்.

There May Be a Better Way to Sleep, but Almost No One Even Tries It

ஆனால், எட்டு மணிநேர தூக்கம் தேவையில்லை. வேலையை எப்படி பிரித்து செய்கிறோமோ, அப்படி தான் உறக்கத்தையும் பிரித்து உறங்க வேண்டும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இது புதியதாக கண்டறியப்பட்டது அல்ல.

முன்பு காலம், காலமாக நமது முன்னோர்கள் கடைப்பிடித்த ஒரு உறக்க சுழற்சி முறை தான். இதை இப்போது மருத்துவ ரீதியாக பைபாசிக் முறை என கூறுகின்றனர். இது என்ன முறை, இதனால் நாம் அடையும் நன்மைகள் என்னென்ன என்று இனி காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உறக்கம் சீர்கெட்டு போனது ஏன்?

உறக்கம் சீர்கெட்டு போனது ஏன்?

உண்மையில் காலம், காலமாக மக்கள் இரண்டு முறை உறங்கும் பழக்கம் தான் கொண்டிருந்தனர். அவர்கள் செய்து வந்த வேலையும், இரண்டு வேளை உறங்க உடலை தூண்டியது, நேரமும் அளித்தது. ஆனால், காலப்போக்கில் வாழ்வியல், வேலை முறை மாறி நமது உறங்கும் தன்மையும் மாறிவிட்டது.

தாமஸ் ஆய்வு!

தாமஸ் ஆய்வு!

1992-ல் தாமஸ் என்பவர் ஒருசிலரை வைத்து ஒரு ஆய்வு நடத்தினார். இதில், அவர்களை ஒரு மாத காலம் தினமும் 14 மணிநேரம் ஒரு இருட்டு அறையில் அவர்களை இருக்கும்படி செய்தார்.

இந்த பயிற்சியின் காரணத்தால், அவர்கள் இரண்டு வேளை உறங்கும் உறக்க சுழற்சிக்கு மாறினார்கள். முதல் நான்கு மணிநேரம் உறங்கி. பிறகு எழுந்து ஓரிரு மணிநேரம் ஓய்வெடுத்து மீண்டும் இரண்டாவது நான்கு மணிநேரம் உறங்க துவங்கினார்கள்.

ரோஜர் எக்ரிச்!

ரோஜர் எக்ரிச்!

ரோஜர் எக்ரிச் எனும் வரலாற்று ஆசிரியர், பண்டைய காலம் முதலே மக்கள் இரண்டு முறை உறங்கும் பழக்கம் தான் கொண்டிருந்தார். இது பல வரலாற்று குறிப்புகளில் கண்டறியப்பட்டுள்ளது என கூறுகிறார்.

குறிப்புகளில் இருந்து கண்டறியும் போது 17-ம் நூற்றாண்டில் இருந்து 1920 வரை மக்கள் இரண்டு முறை உறங்கும் சுழற்சி முறையை கடைபிடித்து வந்தது அறியப்பட்டுள்ளது. இதை தான் இப்போது அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் பைபாசிக் முறை என கூறுகின்றனர்.

ஒளி!

ஒளி!

தெருவிளக்கு, எலட்ரிக் விளக்குகள், காபி இந்த மூன்றின் கண்டுபிடிப்பு தான் மனிதர்களின் உறக்க சுழற்சி முறையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவற்றின் வருகைக்கு பிறகு தான் மனிதர்கள் உறங்கும் முறை பாதிக்கப்பட்டுள்ளது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பைபாசிக் நன்மைகள்!

பைபாசிக் நன்மைகள்!

புரோலேக்ட்டின் எனும் ஹார்மோன் சுரப்பி வெளிப்படும் போது தான் மன அழுத்தம் குறைகிறது. இது நன்கு உறங்கும் போது மனிதர்களிடையே வெளிப்படும் ஹார்மோன் சுரப்பி ஆகும்.

சூரிய அஸ்தமனம் ஆன பிறகு உறங்க செல்ல வேண்டியது தான் சரியான நேரம். ஆனால், நாம் டிவி, மொபைல், எலக்ட்ரிக் விளக்குகளின் ஒளி போன்ற கவன சிதறல்கள் காரணத்தால் 11 மணிக்கும் கூட உறங்காமல் இருக்கிறோம்.

தூக்கமின்மை!

தூக்கமின்மை!

மிக குறைவாக உறங்கும் வழக்கம் தான் தூக்கமின்மை உண்டாக காரணியாக இருக்கிறது. எனவே, உறக்கத்தை இரண்டு வேளையாக பிரித்து பைபாசிக் முறையில் உறங்குவதால் தூக்கமின்மை கோளாறு வராது.

உடல் - மன நலம்!

உடல் - மன நலம்!

பைபாசிக் உறக்க முறை நல்ல உறக்கத்தை மட்டுமல்லாமல், உடல் மற்றும் மன நலம் மேலோங்கவும் வெகுவாக உதவுகிறது. மேலும், இது உங்கள் மன அழுத்தம் குறைத்து உற்பத்தி திறனை அதிகரிக்கவும் செய்கிறது.

ஆரோக்கியம்!

ஆரோக்கியம்!

நல்ல உறக்கம் தான் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உறக்கத்தில் உண்டாகும் பாதிப்புகள் மெல்ல,மெல்ல உங்கள் உடல் ஆரோக்கியத்தை சீர்கெட செய்யும். இதற்கு மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வது எல்லாம் முட்டாள் தனம். எனவே, இயற்கையான முறையில் நல்ல உறக்கம் பெற முயலுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

There May Be a Better Way to Sleep, but Almost No One Even Tries It

There May Be a Better Way to Sleep, but Almost No One Even Tries It
Please Wait while comments are loading...
Subscribe Newsletter