For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வேலைக்கு நடுவுல குட்டித் தூக்கம் போடுற பழக்கம் இருக்கா? அப்ப நீங்க இத படிச்சே ஆகணும்!

அயராது உழைத்துக் கொண்டே இருக்கும் நபரா நீங்கள். அந்த உழைப்புக்கு நடுவே பத்து நிமிடங்கள் உறங்கினால் ஊதியத்தோடு சேர்த்து நல்ல ஆரோக்கியமும் பெறலாம்.

|

நமது இன்றைய வாழ்க்கை, வேலை, கேளிக்கை சூழல் அனைத்தும் நமது உறக்கத்தை கெடுப்பதாய் தான் இருக்கிறது. ஏனெனில், இன்று நமது வாழ்க்கை,ம வேலை, கேளிக்கை அனைத்தும் டிஜிட்டல் சாதனங்களுடன் ஒன்றிணைந்து விட்டன.

Four surprising things that happen to your body when you nap for 10 minutes

24x7 கண்ணிமைக்காமல் மந்தமான ஒளி கொண்ட திரைகளை பார்த்துக் கொண்டே இருப்பது கண்களையும், மூளையையும் சோர்வடைய செய்கிறது. இதனால் தான் நமக்கு தூக்கமின்மை பிரச்சனை அதிகரிக்கிறது.

அயராது உழைத்துக் கொண்டே இருக்கும் நபரா நீங்கள். அந்த உழைப்புக்கு நடுவே பத்து நிமிடங்கள் உறங்கினால் ஊதியத்தோடு சேர்த்து நல்ல ஆரோக்கியமும் பெறலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அறிவாற்றல்!

அறிவாற்றல்!

உறக்கம் உங்கள அறிவாற்றலை ஊக்குவிக்கும். சோர்வுடன் நீங்கள் கற்கும் எந்த விஷயமும் உங்கள் மனதிலோ, மூளையிலோ சரியாக பதிவாகாது. இது வேலை செய்வதிலும் பொருந்தும்.

எனவே, குறைந்தபட்சம் 2-4 மணிநேரத்திற்கு ஒருமுறை 10 - 30 நிமிடங்கள் உறங்குவது உங்கள் வேலையில் செயற்திறனில் நல்ல மாற்றத்தை உண்டாக்கும்.

இதயம்!

இதயம்!

வேலைக்கு நடுவே பத்து நிமிடங்கள் உறங்குவது, உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சிறிய உறக்கமானது எதிர்காலத்தில் உங்களுக்கு மாரடைப்பு அல்லது இதய நோய் உண்டாகும் சதவீதத்தை குறைக்கிறது.

மன அழுத்தம்!

மன அழுத்தம்!

வேலைக்கு நடுவே சிறிது நேரம் உறங்குவது உங்கள் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்கிறது. இதனால் நீங்கள் சீரான கவனத்துடன் செயல்பட முடியும். இது உங்கள் உடலையும், மனதையும் சுறுசுறுப்பாக செயல்பட உதவுகிறது.

உடல் வலிமை!

உடல் வலிமை!

குட்டி தூக்கம் போடும் தடகள வீரர்கள் தான் சிறந்து செயல்படுகிறார்கள் என அறியப்பட்டுள்ளது. இது உங்கள் திறனை வேகப்படுத்த உதவுகிறது. இது, நாள் முழுக்க நீங்கள் துடிப்புடன் செயல்பட உதவுகிறது.

டிப்ஸ் #1

டிப்ஸ் #1

குட்டித் தூக்க என்பது 5 - 45 நிமிடங்களுக்குள் இருக்க வேண்டும். இதை நீங்கள் அலார்ம் வைத்து பரிசோதித்து பாருங்கள். நீங்கள் நல்ல மாற்றம் காண்பீர்கள்.

டிப்ஸ் #2

டிப்ஸ் #2

வெப்பம் குறைவாக இருக்கும் குளுமையான அறையில் குட்டி தூக்கம் போடுவது அவசியம். ஏனெனில், குளுமையான அறையில் உறங்குவது தான் ஆழ்ந்த நல்ல உறக்கத்தை பெற உதவும்.

டிப்ஸ் #3

டிப்ஸ் #3

குட்டித் தூக்கம் போட சிறந்த நேரம் மதியம் தான். பகல் அல்லது மாலை வேலை உங்கள் இரவு நேர உறக்கத்தை கெடுக்கும். சாப்பிட உடன் உறங்க வேண்டாம், சாப்பிட்டு 15 - 30 நிமிடங்களுக்கு பிறகு உறங்குங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Four surprising things that happen to your body when you nap for 10 minutes

Four surprising things that happen to your body when you nap for 10 minutes
Desktop Bottom Promotion