For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உளவியல் ரீதியாக உங்களின் இந்த வலிகளுக்கு இவைதான் காரணம் !!

|

சிலசமயங்களில் நீங்கள் உணர்ந்திருக்கலாம் ஏதாவது ஒரு இடத்தில் தொடர்ந்து வலி உண்டாகும்.

மருத்துவரிடம் பரிசோதனை செய்தும் எந்த பிரச்சனையும் இருந்திருக்காது. ஆனால் வலி மட்டும் அப்படியே இருக்கும்.

உடலில் பாதிப்புகள் இல்லையென்றாலும் உளவியல் அடிப்படையில் உங்களுக்கு மனதளவில் பிரச்சனைகள் இருந்தால் அது உடலை பாதித்து வலிகளை உண்டாக்கும்.

பொதுவாக எந்த பிரச்சனை எந்த வலியை தரும் என பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 கீழ் முதுகு வலி :

கீழ் முதுகு வலி :

பொருளாதார தேவைக்காக மாங்கு மாங்கென்று உழைக்கிறீர்களென்றால் கீழ்முதுகில் வலி உண்டாகும்.

பொருளாதாரம் ஈட்ட வேண்டும் என்று மனதளவில் பாதிப்பு உண்டாகும்போது இப்படி பிரச்சனை உண்டாகும்.

 தோள்பட்டைவலி :

தோள்பட்டைவலி :

நீங்கள் அதிக பாரம் , வீட்டு வேலைகளை சுமப்பதாக நினைத்தால் தோள்பட்டை வலி வருவதுண்டு. இது உங்கல் பாரங்களை குறைக்க உங்கள் மனம் வேண்டுவதன் அறிகுறி.

மூட்டுவலி :

மூட்டுவலி :

வேற எந்த எலும்பு சம்பந்தப்பட்ட வலியும் இல்லாமல்ட்டு வலி ஏற்பட்டால் அது ஈகோவினால் உண்டாகும் வலி என்று கூறுகின்றனர்.

போட்டிகளை சமாளிக்க வேண்டி அதிக ஈடுபாடு கொடுத்து உழைக்கும்போது உண்டாகும் ஈகோவினால் மூட்டு வலி உண்டாகும்.

முதுகு வலி :

முதுகு வலி :

உணர்வுபூர்வமாக ,உங்களுக்கு யாருமில்லை என்று உணரும்போது, உங்கள் பிரச்சனைகளை தாங்கிப் பிடிக்க ஒரு துணையை நாடும்போது உண்டாகும் வலிதான் முதுகுவலி.

முழங்கை வலி :

முழங்கை வலி :

இயற்கையான விஷய்ங்களை மாற்றி ஒரு செயற்கைத்தனத்துடன் நீங்கள் வாழ்க்கையை வாழ்கிறீர்களென்றால்முழங்கை வலி உண்டாகும்.

கழுத்துவலி :

கழுத்துவலி :

உங்களுக்கு நெருக்கமானவர் உங்களை மனதளவில் காயப்படுத்தியிருந்தால் அதனை மறக்க முடியாமல் மனம் வருந்தினால் கழுத்துவலி உண்டாகுமாம்.

 கை வலி :

கை வலி :

நீங்கள் மற்றவர்களை நிராகரித்து தனிமையில் வாழ்கிறீர்களென்றால் அதனால் உண்டாகும் வலிதான் உங்கள் கைகளில் எதிரொலி. கை வலிக்கு இதுவும் காரணம்.

தலைவலி :

தலைவலி :

தேவையில்லாம மனக் குழப்பம், மன அழுத்தம், வேலை அழுத்தம், ஆகியவை தலைவலியை உண்டாக்கும். இதற்கு வாஸ்குலார் தலைவலி என மருத்துவதுறையில் பெயருண்டு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Emotions may cause for pains

Emotions may cause for certain pains in your body? read this article to know more
Story first published: Friday, October 7, 2016, 14:18 [IST]
Desktop Bottom Promotion