Latest Updates
-
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க
வெயிலால் உங்களுக்கு தாகம் அதிகமா எடுக்குதா? அதைக் குறைக்க இதோ சில டிப்ஸ்...
உடலில் திரவங்களை சமநிலையுடன் வைத்துக் கொள்ள உடல் ஒரு குறிப்பிட்ட முறைமைகளில் வேலை செய்கிறது. எப்போது உடலில் திரவங்களின் அளவு குறைவாக உள்ளதோ அல்லது சோடியம் மற்றும் பொட்டாசியத்தின் அளவை அதிகமாகிறதோ, வாங்கிகள் மத்திய நரம்பு மண்டலத்திற்கு தண்ணீர் அவசியம் என்ற சமிக்கைகளை அனுப்பும் போது, நாம் தாகத்தை உணர்கிறோம்.
தினமும் எந்தெந்த நேரத்தில் எல்லாம் மறக்காமல் தண்ணீர் குடிக்க வேண்டுமென்று தெரியுமா?
ஒருவருக்கு தாகம் அளவுக்கு அதிகமாக இருக்கும் போது, ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகளான வாய் மற்றும் உதடு வறட்சி, மிகுந்த சோர்வு, தலைச்சுற்றல், கவனச்சிதறல், தசைப்பிடிப்புகள், தலைவலி, படபடப்பு போன்றவற்றை சந்திக்கக்கூடும். எனவே உங்களுக்கு ஏற்படும் தாகத்தின் அளவைக் குறைக்க ஒருசில டிப்ஸ்களை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது.

காய்கறிகள் மற்றும் பழங்கள்
ஒருவருக்கு ஏற்படும் அதிகமான தாகத்தை உணவுகள் மூலம் குறைக்க முடியும். அதற்கு காய்கறிகள் மற்றும் பழங்களை அதிக அளவில் கோடையில் உட்கொள்ள வேண்டும். குறிப்பாக நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த மற்றும் கோடைக்கால சீசன் பழங்களை தினமும் உட்கொண்டால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருப்பதோடு, தாக உணர்வும் குறையும்.

காபி, டீயைத் தவிர்க்கவும்
காபி, டீயை அதிகம் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த பானங்கள் உடலில் நீரின் தேவையை அதிகரிக்கும். எனவே காபி, டீ அருந்துவதைத் தவிர்த்து, பழச்சாறுகள் மற்றும் நீரை அதிகம் பருகுங்கள்.

உப்பை தவிர்க்கவும்
காய்கறி மற்றும் பழங்களைக் கொண்டு சாலட் செய்யும் போது, அதில் உப்பிற்கு பதிலாக, எலுமிச்சையை சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் உப்பை உணவில் அதிகம் சேர்ப்பதன் மூலம் நீர் தாகம் தான் அதிகரிக்கும். எனவே கோடையில் உணவில் அதிகம் உப்பு சேர்க்காதீர்கள்.

ஊறுகாய், கருவாடு வேண்டாம்
சிலருக்கு உண்ணும் போது ஊறுகாய் இல்லாவிட்டால், உணவே வயிற்றில் இறங்காது. ஆனால் கோடையில் இப்படி ஊறுகாய், கருவாடு போன்ற உப்பு அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொண்டால், தாகம் மேன்மேலும் தான் அதிகரிக்கும்.

கூல்ட்ரிங்க்ஸ்
கூல்ட்ரிங்க்ஸில் கார்பன் அதிகம் இருக்கும். இது நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்தாலும், உடலுக்கு எந்த ஒரு உபயோகமும் இல்லை. மாறாக தீங்கு நேரும் அபாயம் தான் அதிகரிக்கும். அதில் தாகம் இன்னும் அதிகமாக எடுக்கும்.

எண்ணெயில் பொரித்த உணவுகள்
கோடையில் எண்ணெயில் பொரித்த உணவுகளை உட்கொண்டால், தலைச்சுற்றல் அல்லது மயக்க உணர்வை சந்திக்க நேரிடுவதோடு, கடுமையான தாகத்தையும் உணரக்கூடும். ஆகவே இந்த உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

சூரிய ஒளி
நீண்ட நேரம் வெயிலில் திரிந்தால், அதனால் வியர்வையின் அளவு அதிகரித்து, உடலில் இருந்து திரவங்களின் அளவு குறைந்து, அதனால் தாகம் இன்னும் அதிகரிக்கும். ஆகவே கோடையில் வெளியே சுற்றுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

தண்ணீர்
கோடையில் மற்ற காலங்களை விட அதிகமான அளவில் தண்ணீர் பருக வேண்டும். அதிலும் உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் சாதாரண மக்களை விட இன்னும் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். அதற்காக ஒரே நேரத்தில் ஒரு பாட்டில் நீரைப் பருக வேண்டாம். கொஞ்சம் கொஞ்சமாக நாள் முழுவதும் தண்ணீர் குடித்தவாறு இருக்க வேண்டும். முக்கியமாக ஐஸ் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.



Click it and Unblock the Notifications
