ஏன் மூக்கில் உள்ள முடியை அகற்றக் கூடாது என உங்களுக்கு தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

ஆரோக்கியம் சார்ந்து நாம் தினமும் காட்டும் அக்கறையை விட, அழகு சார்ந்து நாம் அன்றாடம் காட்டும் அக்கறை தான் அதிகமாக இருக்கிறது.

அழகாக உடை உடுத்த வேண்டும், மிடுக்காக இருக்க வேண்டும், ஷூ பாலிஷ் செய்ய வேண்டும், முடிக்கு க்ரீம் பயன்படுத்துவது, தாடி ட்ரிம் செய்வது, மூக்கின் முடியை கூட மொத்தமாக அகற்றுவது என நாம் இவற்றை தினமும் செய்கிறோம்.

சமீபத்திய ஆய்வில், தாடியை கிளீன் ஷேவ் செய்வதே தவறு, தாடி இருப்பதால் நல்ல கிருமிகள் வளர்கின்றன.இவை, முகத்தின் சருமத்திற்கு நன்மை விளைவிக்கின்றன என கண்டறியப்பட்டது.

அதே போல மூக்கின் முடியை முழுமையாக தினமும் அகற்றுவதும் தவறு என கூறுகின்றனர். உண்மையில் மூக்கின் முடி பாக்டீரியா தாக்கம் உண்டாகாமல் தடுத்து உதவுகிறதாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அசௌகரியம்!

அசௌகரியம்!

மூக்கில் முடி வளர்வது அசிங்கமாக, அசௌகரியமாக இருக்கலாம். ஆனால், அதற்காக தினமும், மூக்கில் உள்ள முடிகளை அகற்றுவது சரியான தீர்வல்ல. உண்மையில் இது ஆரோக்கியமற்ற செயல்.

ட்ரையாங்கில் ஆப் டெத்!

ட்ரையாங்கில் ஆப் டெத்!

மூக்கு பகுதி ட்ரையாங்கில் ஆப் டெத் என்றும் கூறப்படுகிறது. மூக்கு நம் உடலின் முக்கியமான உறுப்புகளில் ஒன்று. மூக்கில் அல்லது மூக்கு வாயிலாக உடலுக்குள் ஏற்படும் தொற்று பெரும் அபாயத்தை உண்டாக்கலாம்.

நோய்க்கிருமிகள்!

நோய்க்கிருமிகள்!

மூக்கில் இருக்கும் முடிகளை நீங்கள் சீராக தினமும் அகற்றுவதால் நோய்க்கிருமிகள் எளிதாக மூக்கின் வாயிலாக உடலுக்குள் எளிதாக சென்றுவிடுகிறது.

மூக்கின் முடி!

மூக்கின் முடி!

மூக்கில் வளரும் முடியை ஆங்கிலதில் "Cilia" என்று கூறுகின்றனர். இது ஒவ்வொரு நாளும் மூக்கினை பாக்டீரியாக்கள் தாக்கம் உண்டாகாமல் காக்க உதவுகிறது.

என்ன தான் தீர்வு!

என்ன தான் தீர்வு!

ஆரோக்கியம் ஒருபுறம் இருக்க, அசௌகரியம் ஒரு புறம் இருக்க, இதற்கு என்ன தான் தீர்வு?

தினமும் மூக்கின் முடியை முழுவதுமாக அகற்றுவது,தினமும் ட்ரிம் செய்வது அல்லது வேக்ஸிங் செய்வதற்கு பதிலாக, சிறிய கால இடைவேளை விட்டு, சிறிதளவில் ட்ரிம் செய்துக் கொள்வது நல்லது, முழுவதுமாக மூக்கின் முடியை அகற்ற வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Do You Constantly Pick Your Nasal Hair?

Do You Constantly Pick Your Nasal Hair? Beware, It Can Be Fatal!
Please Wait while comments are loading...
Subscribe Newsletter