உங்கள் வாய் துர்நாற்றத்தின் அளவை எப்படி கண்டறிவது? எளிய தீர்வுகள் என்னென்ன?

Posted By:
Subscribe to Boldsky

வாயு தொல்லையை காட்டிலும் பெரிய தொல்லை வாய் துர்நாற்றம். வாயுவை கூட யாரும் இல்லாத போது ரிலீஸ் செய்துவிடலாம். ஆனால், வாய் துர்நாற்றத்தை யாரும் இல்லாத போது பேசியா சமாளிக்க முடியும்???

DIY Test's To Find Out The Reason For Your Bad Breath

மேலும், வாய் துர்நாற்றம் அசௌகரியம், முக சுளிப்பை ஏற்படுத்தும் ஒரு பிரச்சனையாகவும் இருக்கிறது. முக்கியமாக தினமும் பலரை சந்தித்து, பலருடன் பேசி வேலை செய்யும் ஃபீல்டில் இருப்பவர்களுக்கு இந்த பிரச்சனை இருந்தா பரிதாபமான நிலையை சந்திக்க நேரிடும்.

சரி, உங்களுக்கு ஏன் வாய் துர்நாற்றம் அடிக்கிறது என்பதை எப்படி கண்டறிவது? இதற்கான வழிமுறைகள் என்னென்ன இருக்கின்றன? எப்படி சரி செய்வது?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கலர் டெஸ்ட்!

கலர் டெஸ்ட்!

பின்க் நிறம் - பின்க் நிறத்தில் இருந்தால் உங்களுக்கு வாய் துர்நாற்றம் அடிக்க வாய்ப்புகள் இல்லை.

மஞ்சள் / வெள்ளை - பாக்டீரியா தாக்கம் இருந்தால் தான் நாக்கில் மஞ்சள் / வெள்ளை படிமம் படரும். இதனால் தான் வாய் துர்நாற்றம் அதிகரிக்கும்.

லிக் டெஸ்ட்!

லிக் டெஸ்ட்!

உங்கள் உடல் பாகத்தை (எ-கா) நாக்கால் கையை நக்கி, அதிலிருந்து என்ன வாசம் / துர்நாற்றம் நீங்கள் உணர்கிறீர்களோ, அந்த துர்நாற்றம் தான் உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு உங்களிடம் இருந்து அடிக்கும்.

ஸ்பூன் டெஸ்ட்!

ஸ்பூன் டெஸ்ட்!

ஸ்பூன் டெஸ்ட் என்பது தான் சரியாக கண்டறிய உதவும். ஸ்பூன் அல்லது டங் கிளீனர் பயன்படுத்தி நாக்கை சுத்தம் செய்து, அதில் வரும் வாசத்தை வைத்தே உங்களுக்கு எவ்வளவு வாய் துர்நாற்றம் இருக்கிறது என்பதை அறிய முடியும்.

தீர்வு #1 | உணவுகள்

தீர்வு #1 | உணவுகள்

புதினா, எலுமிச்சை, ஆரஞ்சு தோல் போன்றவற்றை மெல்லுவதால் வாய் துர்நாற்றம் போக்கலாம்.

ஆப்பிள் சாப்பிடுவது, வாய் துர்நாற்றத்தை போக்கும்.

காபி, கிரீன் டீ போன்றவற்றை அதிகம் பருகுவதாலும் கூட வாய் துர்நாற்றம் அதிகரிக்கும்.

தீர்வு #2 | பழக்கங்கள்

தீர்வு #2 | பழக்கங்கள்

வாய் கொப்பளிக்க வேண்டும்.

நாக்கை தினமும் சுத்தம் செய்ய வேண்டும்.

உணவருந்திய பிறகு வாய் கழுவ வேண்டும்.

அதிகமாக மவுத் வாஷ் பயன்படுத்த வேண்டாம்.

பல் செட்டு பயன்படுத்தினால், அதை சீரான இடைவேளையில் கழுவ வேண்டும்.

தீர்வு #3 | தேங்காய் எண்ணெய்

தீர்வு #3 | தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் கொண்டு ஆயில் புல்லிங் செய்வதால் வாய் துர்நாற்றம் சரியாகும். தினமும் 3 - 5 நிமிடங்கள் இப்படி ஆயில் புல்லிங் செய்வதால் பாக்டீரியாக்கள் அழித்து, நல்ல பாக்டீரியாக்கள் பெருகி, வாய் துர்நாற்றம் போக்க வழிவகுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

DIY Test's To Find Out The Reason For Your Bad Breath

DIY Test's To Find Out The Reason For Your Bad Breath
Please Wait while comments are loading...
Subscribe Newsletter