For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சைவப் பிரியர்களுக்கு இந்த குறைபாடு இருக்க வாய்ப்பிருக்கிறது !!- ஏன் தெரியுமா?

நமது உடல் புரதம் , கார்போஹைட்ரேட் , கொழுப்பு மற்றும் பெருமளவு நீரினால் ஆனது. ஆனால் இந்த சத்துக்களோடு, விட்டமின்களும் இணைந்து உங்கள் உடலிற்கு ஊட்டம் அளிக்கிறது. பலத்துடன் இருக்கச் செய்கிறது.

|

புரொட்டின், கார்போஹைட்ரேட்டிற்கு தரும் முக்கியத்துவம் நாம் விட்டமின்களுக்கு தருவதில்லை. ஆனால் விட்டமின்கள் உங்கள் திசு செல்களுக்கு போஷாக்கு அளிக்கவும், ஹார்மோன் மற்றும் சுரப்பிகளை தூண்டவும் முக்கியம்.

Causes for Vitamin B-12 deficiency

நீரில் கரையும் விட்டமின் பி காம்ப்ளக்ஸ் உடலில் நொதிகளை தூண்டும் கோ என்சைம்களாக இருக்கின்றன. அவற்றில் விட்டமின் பி12 மிக முக்கியமான பி காம்ப்ளக்ஸ் விட்டமின்களில் ஒன்று. அதனைப் பற்றி சில விஷயங்களை காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 விட்டமின் பி12 - வேலை என்ன ?

விட்டமின் பி12 - வேலை என்ன ?

இந்த விட்டமின் நரம்பு செல்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

டி.என். ஏ, ஆர். என் .ஏ ஆகிய இரண்டும் நமது மரபணுவை நிர்ணயிக்கக் கூடியவை. அவற்றின் உற்பத்தியில் இந்த விட்டமின் பங்கு வகிக்கிறது.

இது இரும்பு சத்துடன் சேர்த்து ரத்தத்தில் சிவப்பு அணுக்களை உருவாக்குகுறது. இதற்கு " ஃபோலிக் ஆசிட் "என்ற இன்னொரு பெயரும் உண்டு.

பி-12 குறைப்பாட்டின் அறிகுறிகள் :

பி-12 குறைப்பாட்டின் அறிகுறிகள் :

சோர்வு, தலை சுற்றல் மலச்சிக்கல், பசியின்மை, உடல் எடை குறைதல், ரத்த சோகை, நரம்பு தளர்ச்சி, குழம்ப்பம், மன அழுத்தம், ஞாபக மறதி, இவையெல்லாம் பி-12 விட்டமின் குறைப்பாட்டினால் உண்டாகக் கூடியவை.

யாருக்கெலாம் இந்த குறைபாடு உண்டாகும் என்பதை பார்க்கலாம்.

 யாருக்கெலாம் குறைப்பாடு வரலாம்?

யாருக்கெலாம் குறைப்பாடு வரலாம்?

சைவ பிரியர்களுக்கு :

பொதுவாக விட்டமின் பி-12 அசைவ உணவுகளில்தான் அதிகம் காணப்படும். இதனால் போதிய அளவு பி-12 சைவம் சாப்பிடுவரகளுக்கு கிடைக்காது. அதனால்தான் அவர்கள் பெருமளவில் ரத்த சோகையினால் பாதிக்கப்படுகிறார்கள். சரும தோல் வெளுத்து, பலவீனம் ஏற்படும்.

 யாருக்கெலாம் குறைப்பாடு வரலாம்?

யாருக்கெலாம் குறைப்பாடு வரலாம்?

மது குடிப்பவர்களுக்கு :

மது அருந்துபவர்களுக்கு விட்டமின் பி-12 உடலில் உறிஞ்சப்படும்போது சிதைக்கப்படுகிரது. இதனால் இந்த சத்து கிடைக்காது.

 யாருக்கெலாம் குறைப்பாடு வரலாம்?

யாருக்கெலாம் குறைப்பாடு வரலாம்?

அசிடிட்டி இருப்பவர்களுக்கு :

நெஞ்செரிச்சல், அசிடிட்டி இருப்பவர்களுக்கு அதிகம் ஜீரண அமிலம் சுரப்பதால் உண்டாகிறது. இந்த பிரச்சனை இருப்பாவ்ர்களுக்கு விட்டமின் பி-12 உடலில் உறிஞ்சப்படுவதை தடுக்கப்படுகிறது.

 யாருக்கெலாம் குறைப்பாடு வரலாம்?

யாருக்கெலாம் குறைப்பாடு வரலாம்?

சர்க்கரை வியாதி இருப்பவர்களுக்கு ;

சர்க்கரை வியாதி இருப்பவர்களுக்கு அதிகப்படியான குளுகோஸ், விட்டமின் பி-12 உடலில் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது.

 யாருக்கெலாம் குறைப்பாடு வரலாம்?

யாருக்கெலாம் குறைப்பாடு வரலாம்?

50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு :

50 வயதிற்கு மேல் இருப்பவர்கள் இந்த சத்து உடலில் அதிகமாக சேராது. இதனால் ஞாபக மறதி, பலவீனம் உண்டாகும்.

ஆனால் இன்று தேவையான சப்ளிமென்ட்ரி விற்பதால் மருத்துவரின் ஆலோசனையின் பெரில் சாப்பிட்டால் இந்த சத்து குறைப்பாட்டை சரிப்படுத்திடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Causes for Vitamin B-12 deficiency

What are the things affected absorbing vitamin B-12 and signs and symptoms of this deficiency
Story first published: Tuesday, October 25, 2016, 11:39 [IST]
Desktop Bottom Promotion