Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...

பொதுவாக ஜலதோஷம் 3 நாளிலோ அல்லது அதிகபட்சம் 2 வாரத்திலோ குணமடைந்து விடும். அப்படி குணமாகவில்லை என்றால் அவர்களுக்கு சைனஸ் என்று தெரிந்து கொள்ளலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அறிகுறிகள்
மூக்கின் முக்கிய பாகங்களாக இருப்பது சைனஸ் அறைகள். அப்போது ஜலதோஷத்தால் உருவாகும் சளி அந்த சைனஸ் அறைகளில் தங்கி கிருமிகலந்த சீழாகி மாறி விடுகிறது. அதனால் நன்றாக சுவாசிக்க முடியாது. தலை பாரமாக இருக்கும். சரியாக பேசவும் இயலாது. குனிந்தாலும், நிமிர்ந்தாலும் கூட விண் விண்' என்று தலை வலிக்கும். லேசாக இருமினாலும் வலி ஏற்படும். மூக்கு அடிக்கடி அடைத்துக் கொள்ளும். வாசனை தெரியாது. ருசியை உணர முடியாது.
மூக்கு எதற்கு அடைக்கிறது?
மூக்கில் உள்ள சைனஸ் அறைகள் அடைக்க பல காரணங்கள் உள்ளன. மூக்கின் நடுவில் இருக்கும் தடுப்புச் சுவர் சிலருக்கு சற்று வளைந்து இருக்கும். அந்த தடுப்புச் சுவர் நடுவில் இருந்தால் சைனஸ் அறைகளின் உள்ளே காற்று சென்று வருவதில் எந்த தடையும் இருக்காது.
மாறாக அது வளைந்து இருந்தால் அதன் அருகில் இருக்கும் சைனஸ் அறையின் வாசலை அது எப்போது வேண்டுமானாலும் அடைத்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. சைனஸ் அறை வாசலில் உள்ள சதை வளர்ச்சி ஏற்பட்டாலும் அடைத்துக் கொள்ளும். மேலும் தூசுகள் நிரம்பிய இடங்களில் வேலை பார்த்தால் மூக்குக்குள் தூசுகள் சென்று ஜவ்வுகளைத் தாக்கி சளி தொந்தரவை ஏற்படுத்தி விடும்.
தடுக்கும் முறைகள்
கோடையில் 2 வகையாக சைனஸ் பிரச்சினையை உண்டாகும். ஒன்று திடீரென்று வந்து, அதிக வலியை தரும் சைனஸ். இதை நாசில்ஸ் ஸ்பிரே என்ற நோய் எதிர்ப்பு மாத்திரைகளால் எளிதில் குணப்படுத்தி விடலாம். மிகச் சில பேருக்கு மட்டுமே அறுவை சிகிச்சை வரை போக வேண்டியதிருக்கும்.
மற்றொன்று நிரந்தரமானது ஆனால் குறைவான வலியைத் தரும் சைனஸ். இதற்கு முதலில் என்ன மருந்து கொடுத்தாலும் முழுமையாக குணப்படுத்தி விட முடியாத நிலையில் வலியை மட்டுமே முடிந்தது. ஆனால் தற்போது என்டோஸ்கோப்பிக்' சைனஸ் அறுவை சிகிச்சை முறையில் அதை குணப்படுத்த முடியும். இந்த சிகிச்சையில் மூடப்பட்ட சைனஸ் அறை கதவை திறந்து உள்ளே இருக்கும் சீழ் வெளியேற்றப்படுகிறது.
மேலும் சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் என்ற நவீன வசதிகளால் எந்த சைனஸ் அறை பாதிக்கப்பட்டிருக்கிறது, எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிவதோடு அவற்றில் இருப்பது சளியா அல்லது சீழா என்பதையும் மிகத்துல்லியமாக கண்டறிய முடிகிறது. இதனால் அறுவை சிகிச்சை எளிதாகி விட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம்
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
