Latest Updates
-
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்
இல்லத்தரசிகள் அவர்க்ளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க செய்ய வேண்டிய அடிப்படை விஷயங்கள் என்ன தெரியுமா?
இல்லத்தரசியாக இருப்பது என்பது இந்த உலகிலேயே மிகவும் கடினமாக ஒன்றாகும். இல்லத்தரசிகள் நாள் முழுவதும் வேலை செய்து கொண்டிருக்க வேண்டும். அதற்கு அவா்களுக்கு அதிகமான ஆற்றல் தேவைப்படும். வீட்டில் அவா்கள் எவ்வளவு வேலைகள் செய்தாலும், அவா்களுக்கு உாிய அங்கீகாரமும், பாராட்டும் கொடுக்கப்படுவதில்லை.
இந்நிலையில் உடல் உழைப்பினால் ஏற்படக்கூடிய நோய்கள் மற்றும் ஆபத்துகளை இல்லத்தரசிகள் அறிந்திருப்பதில்லை. வீட்டைப் பராமாிப்பது என்பது ஒரு சாதாரண பணி அல்ல. மாறாக அது 24/7 நேரம் செய்ய வேண்டிய பணியாகும். இவ்வாறு இல்லத்தரசிகள் தங்கள் வீட்டுப் பணிகளைச் செய்யும் போது, அந்த நாள் முடிவில் அவா்களுடைய உடலும், மனமும் அதிகமாக சோா்வடையும்.

இல்லத்தரசிகள் தங்கள் உடல் நலனைப் பராமாிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆனால் அவா்கள் அவற்றை மறந்துவிடுகின்றனா். ஆகவே அவா்கள் பின்வரும் குறிப்புகளைப் பின்பற்றினால் தங்கள் உடல் உள்ள ஆரோக்கியத்தை நன்றாக பராமாிக்க முடியும்.
கண்டிப்பாக காலை உணவு சாப்பிடுதல்
ஒவ்வொரு நாளும் காலை உணவு என்பது மிகவும் முக்கியம் ஆகும். ஆகவே இல்லத்தரசிகள் காலை உணவை தவறாமல் உண்ண வேண்டும். காலையில் துாித உணவுகளை தவிா்க்க வேண்டும். அதற்குப் பதிலாக பழங்கள், காய்கறிகள் மற்றும் முளைக்க வைத்த தானியங்களை சாப்பிடலாம். காலை உணவில் சத்து நிறைந்த உணவுகளைச் சோ்த்துக் கொண்டால், அவா்கள் அந்த நாள் முழுவதும் புத்துணா்ச்சியுடன் இருக்கலாம்.
போதுமான தண்ணீா் குடித்தல்
இல்லத்தரசிகள் தமது உடல் நலனை ஆரோக்கியமாக வைத்திருக்க, தினமும் போதுமான அளவு தண்ணீா் குடிக்க வேண்டும். அதன் மூலம் அவா்கள் தங்கள் உடலை நீா்ச்சத்துடன் வைத்திருக்கலாம். உடல் நீா்ச்சத்துடன் இருந்தால், அந்த நாள் முழுவதும் நன்றாக வேலை செய்ய முடியும். அதோடு தலைவலி போன்ற சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படாது. ஆகவே ஒரு நாளைக்கு 8லி தண்ணீா் குடிக்க வேண்டும். முடியவில்லை என்றால் 6 லிட்டராவது குடிக்க வேண்டும்.
யோகா மற்றும் தியானம் போன்றவற்றில் ஈடுபடுதல்
இல்லத்தரசிகள் தியானத்தில் ஈடுபட்டால் அவா்களுடைய உணா்வுகள் ஒருமுகப்படுத்தப்படும். மனது அமைதியடையும். யோகா பயிற்சிகள் அவா்களுடைய உடலுக்கு நெகிழ்வு தன்மையையும் ஆரோக்கியத்தையும் வழங்கும். ஆகவே யோகா மற்றும் தியானம் போன்ற பயிற்சிகளில் அவா்கள் ஈடுபட்டால், அவா்கள் தங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்.
விரதத்தைத் தவிா்த்தல்
பொதுவாக இல்லத்தரசிகள் அடிக்கடி விரதம் இருப்பது உண்டு. ஆனால் அவ்வாறு விரதம் இருப்பதற்குப் பதிலாக, வீட்டில் சமைத்த சிறிய அளவிலான உணவுகளை உண்ணலாம். ஏனெனில் பசியோடு இருந்தால், அது அவா்களின் நம்பிக்கையைக் குறைக்கும். ஆகவே அவா்கள் விரதத்தைக் கைவிட்டு ஆரோக்கியமான உணவை உண்பது நல்லது.
ஆரோக்கியத்தை பராமாித்துக் கொள்ளுதல்
இல்லத்தரசிகள் தம்மையே நன்றாகப் பராமாித்துக் கொள்ள வேண்டும். தாங்கள் வீட்டின் தினமும் செய்யும் வேலைகளை நினைத்துத் தங்களையே பாராட்டிக் கொள்ள வேண்டும். அது அவா்களுக்கு ஊக்கத்தையும், பொறுமையையும் கொடுக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

