Latest Updates
-
அக்டோபர் 02 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
செவ்வாய் துலாம் ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வெள்ளை பட்டாணி இருந்தா இந்த பஞ்சாபி வடானா மசாலாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி. பூரிக்கு செமையா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க உலகை சுற்றும் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க தலைமுடி எலிவால் மாதிரி மாறுதா? அப்ப அடிக்கடி இந்த கற்றாழை ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
Gandhi Jayanti 2026: மகாத்மா காந்தியை பற்றி நமக்கு தெரியுமா? ஆனால் அவர் படிப்பில் எப்படிப்பட்டவர் தெரியுமா? -
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம்
வயிற்றில் புழுக்கள் அதிகமா இருக்கா? அதை அகற்ற என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
Stomach Parasites: நம் உடல் ஆரோக்கியமும் குடல் ஆரோக்கியமும் ஒன்றுக்கொன்று பிண்ணிப் பிணைந்தது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆமாம் நம் குடல் ஆரோக்கியம் மிகவும் அவசியமான ஒன்றாகும். நம் குடலில் பல நல்ல பாக்டீரியாக்களும் அதே நேரத்தில் தீங்கு விளைவிக்கும் ஒட்டுண்ணி வகைகளும் வளர்கின்றன.
இந்த தீங்கு விளைவிக்கும் ஒட்டுண்ணி வகைகள் நமக்கு வயிற்றுப் போக்கு, புழுக்கடித் தொந்தரவு, மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலி போன்ற பல சிக்கல்களை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. இந்த ஒட்டுண்ணிகள் நாம் உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி நம்மை மெலியச் செய்கிறது.

இதனால் நிறைய குழந்தைகள் போதிய உடல் எடை இல்லாமல் மெலிந்து காணப்படுகின்றன. குடல் ஒட்டுண்ணியால் பாதிக்கப்படும் போது உங்களுக்கு தோல் எரிச்சல், சரும தடிப்புகள், தசை மற்றும் மூட்டுகளில் வலிகள் தோன்றுதல், மனச்சோர்வு மற்றும் சோர்வு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த ஒட்டுண்ணிகளை எப்படி அகற்றலாம் என்பதை பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
குடல் ஒட்டுண்ணிகளின் வகைகள்
குடல் புழுக்கள் - இந்த குடல் புழுக்கள் பொதுவாக ஹெல்மின்த்ஸ் என்று அழைக்கப்படுகிறது. மோசமான சுகாதாரம் மற்றும் அசுத்தமான குடிநீர் வழியாக இவை குடலுக்குள் செல்கின்றன. இதன் லார்வாக்கள் வயிற்றில் தங்கி முட்டைகளை இடுகின்றன. இதனால் வீக்கம், இரத்த சோகை மற்றும் உறுப்பு செயலிழப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
புரோட்டோசோவா - புரோட்டோசோவா என்பது குடலில் வாழும் ஒற்றை செல் உயிரினம் ஆகும். இவை நமக்கு சோர்வு மற்றும் செரிமான பிரச்சினைகளை உண்டாக்குகிறது. நீர்க்கட்டிகள் வழியாக தொற்றுகிறது.
நாடாப் புழு - நாடாப் புழு அசுத்தமான குடிநீர் வழியாக குடலுக்குள் செல்கிறது. இறைச்சியை சமைக்காமல் சாப்பிடும் போது இத்தகைய பிரச்சினை ஏற்படுகிறது. நாடாப் புழு முட்டைகள் மலத்துடன் வெளியேற்றப்படுகின்றன. இவை அப்படியே கால்நடைகள் மற்றும் பன்றிகளுக்கு செல்கிறது. இந்த நாடாப் புழுக்கள் 50 அடி வரை வளரக் கூடியது. இவை உங்கள் குடலில் 30 ஆண்கள் வரை வாழும்.
ஜியார்டியா - ஜியார்டியா இண்டஸ்டினலிஸ் என்பது ஒரு புரோட்டோசோவான் ஒட்டுண்ணியாகும். இது குடலைப் பாதித்து ஜியார்டியாசிஸை உண்டாக்குகிறது. பாதிக்கப்பட்ட மலம் வழியாக இது பரவுகிறது. அசுத்தமான நீர் மற்றும் உணவுகளை சாப்பிடுவதால் இது உண்டாகிறது. இதனால் அடி வயிற்றில் வலி, வயிற்று வீக்கம், நீர்ச்சத்து இழப்பு மற்றும் வயிற்று போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
பிளாஸ்டோசிஸ்டிஸ் ஹோமினிஸ் - இது மற்றொரு வகை புரோட்டோசோவா ஆகும். இது பொதுவாக வயிற்றுப்போக்கு உள்ளவர்களின் மலத்தில் காணப்படும். அசுத்தமான குடிநீரை குடிப்பதால் மற்றும் பாதிக்கப்பட்ட நபரின் வழியாக பரவுகிறது. வயிற்றுப் போக்கு, குமட்டல், வயிற்றுப் பிடிப்புகள், வீக்கம் மற்றும் வாய்வு, சோர்வு, சரும நோய்கள் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.
குடல் ஒட்டுண்ணிகளை விரட்ட இயற்கை வழிகள்
பெர்பெரின், ஓரிகனோ எண்ணெய் மற்றும் திராட்சைப்பழ விதை எண்ணெய் போன்றவை குடல் ஒட்டுண்ணிகளை கொல்லக் கூடியது. மாசிபத்திரி, கருப்பு வால்நட்ஸ், ஆலிவ் இலை மூலிகைகள் குடல் ஒட்டுண்ணிகளின் செயல்பாட்டை குறைக்கின்றன. ஆன்டி பாரசிட்டிக் உணவுகளான தேங்காய், பூண்டு மற்றும் பூசணி விதைகள் போன்றவற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டு வரலாம். தேங்காய் எண்ணெயை உணவில் சேர்த்து வருவது நல்லது.
குடல் ஒட்டுண்ணிகளை எப்படி அகற்ற வேண்டும்?
படி 1: பிளாஸ்டோசிஸ்டிஸ் ஹோமினிஸ் என்ற ஒட்டுண்ணியில் இருந்து விடுபட 3 நாட்களுக்கு விரதம் இருக்கலாம். உங்கள் வயிற்றை காலியாக வைத்திருக்க முயற்சி செய்யலாம். அதே மாதிரி பெருங்குடலை சுத்தம் செய்யும் தெரபியை செய்யலாம்.
படி 2: பிறகு பெர்பெரின், ஆர்கனோ எண்ணெய் மற்றும் திராட்சைப்பழ விதை எண்ணெயை 3 நாட்கள் பயன்படுத்தி வரலாம்.
படி 3: மேலும் சர்க்கரைகள் நிறைந்த பழங்கள், தானியங்கள் மற்றும் பால் போன்றவற்றை தவிர்த்து வருவது நல்லது.
படி 4: ஒட்டுண்ணிகளுடன் சேர்ந்து புரோபயாடிக்குகள் அதாவது நல்ல பாக்டீரியாக்களும் அழிய வாய்ப்பு உள்ளது. எனவே ஒட்டுண்ணிகளை அழித்த பிறகு புரோபயாடிக் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். தயிர், கெஃபிர், கிம்ச்சி போன்ற உணவுகளை எடுத்துக் கொண்டு வாருங்கள். குடல் ஒட்டுண்ணிகள் தொந்தரவு அதிகமாக இருந்தால் மருத்துவர் ஆலோசனை பெறலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
