Latest Updates
-
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க..
பழங்களில் உப்பு மற்றும் மசாலா போட்டு சாப்பிடுறீங்களா? அப்ப இந்த ஆபத்தான செய்தி உங்களுக்கு தானாம்!
கோடைகாலம் வந்தாலே நாம் அதிக பழங்களை எடுத்துக்கொள்கிறோம். அவை, உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் நம்மை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. பெரும்பாலும் பழங்களை நாம் அப்படியே சாப்பிடுவதில்லை. கடையில் நறுக்கப்பட்ட பழங்களில் சாட் மசாலா, உப்பு அல்லது சர்க்கரையை சேர்த்து சாப்பிடுகிறோம். வீட்டிலேயும் இதையே நாம் பின்பற்றுகிறோம்.
மசாலா சேர்த்து சாப்பிடுவது நாவிற்கு சுவையாக இருப்பதால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால் பழங்களை மசாலாவுடன் சேர்த்து சாப்பிடுவது நல்லதா? அது உங்களுக்கு அதிக ஊட்டச்சத்தை அளிக்குமா? என்று என்றாவது யோசித்து இருக்கிறீர்களா?

பழங்களை வெட்டி உப்பு மற்றும் மசாலா தூவியப் பிறகு, அவற்றில் இருந்து தண்ணீர் வெளியேறும். அது ஏன் தண்ணீரை வெளியிடுகின்றன என்பது பற்றி உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. இது பழங்களில் உள்ள நீர் ஊட்டச்சத்தை வெளியேற்றுகிறது.
உப்பு மற்றும் சாட் மசாலாவில் உள்ள சோடியம் நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். பழங்களில் மசாலா, உப்பு அல்லது சர்க்கரையைத் தூவி சாப்பிடுவதனால் உடலுக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
எடையை அதிகரிக்கிறது
பழங்களை எப்போதும் அப்படியே சாப்பிடுவது, உங்கள் உடல் எடையை குறைக்க உதவும். ஆனால், அவற்றில் உப்பு, சாட் மசாலா மற்றும் சர்க்கரை போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அதிக உப்பு மற்றும் சர்க்கரையைச் சேர்ப்பது உங்கள் தினசரி கலோரி உட்கொள்ளலை அதிகரிக்கும். இதனால் உங்கள் உடல் எடை அதிகரிக்க தொடங்கலாம்.
ஊட்டச்சத்துக்களை வெளியேற்றுகிறது
பழங்களின் மீது உப்பு அல்லது மசாலாவைத் தூவி, அவற்றை உடனடியாக சிற்றுண்டியாக நீங்கள் சாப்பிடலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால் இது பழங்களில் இருந்து தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வெளியேற்றிவிடும் என்பது உங்களுக்கு தெரியுமா?
உப்பு இல்லாமல் பழங்களை சாப்பிடும்போது, பழங்களில் இருந்து குறைவான நீர் கசிவு ஏற்படும். இதனால், ஊட்டச்சத்துக்கள் பழங்களில் அப்படியே இருக்கும். உப்பை நீங்கள் சேர்க்கும்போது, பழங்களில் இருந்து அதிகப்படியான நீர் கசியும். இது பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களை வெளியேற்றுகிறது. ஊட்டச்சத்துக்கள் அனைத்தையும் பெற பழங்களை அப்படியே சாப்பிடுங்கள்.
சிறுநீரகத்தை பாதிக்கிறது
உப்பு பழங்களில் தேவையற்ற சோடியத்தை சேர்க்கிறது. சோடியம் நம் உடலில் தண்ணீரைத் தக்கவைக்கிறது. இது சிறுநீரக ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கலாம். எனவே நீங்கள் சிறுநீரக பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தால், பழங்களில் உப்பு அல்லது மசாலா சேர்க்காமல் உட்கொள்ளுங்கள்.
வீக்கத்தை ஏற்படுத்துகிறது
மசாலா தூவிய பழங்கள் மோசமான pH மற்றும் சோடியம் காரணமாக உடலில் நீரை தக்க வைக்கிறது. இதன் காரணமாக வீக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். இது நாள் முழுவதும் உங்களை முழுமையாகவும் சங்கடமாகவும் உணர வைக்கலாம். எனவே, பழங்களில் உப்பு மற்றும் மசாலா சேர்த்து சாப்பிடுவது எடை அதிகரிப்பதோடு, வயிற்று வீக்கத்தையும் ஏற்படுத்தும்.
பழங்களில் என்ன சேர்க்கலாம்?
ஆயுர்வேதத்தின்படி, உடல் ஆரோக்கியத்திற்காக பழங்கள் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. கோடையில் ஏலக்காய் மற்றும் மிளகுத்தூள் மற்றும் குளிர்காலத்தில் இலவங்கப்பட்டை மற்றும் கிராம்பு பொடிகளை பழங்களில் தூவி சாப்பிடலாம். எந்தவொரு உடல்நலப் பிரச்சினையும் ஏற்படுத்தாமல், நீங்கள் தேடும் சுவையையும் ஆரோக்கியத்தையும் பழங்கள் உங்களுக்குத் தரும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


