Latest Updates
-
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்...
செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
அனைத்து பருவங்களிலும் கிடைக்கும் ஒரு ஆரோக்கியமான பழம் என்றால் அது வாழைப்பழம்தான். வாழைப்பழங்கள் சாப்பிடுவதற்கு வசதியாகவும், எளிதில் ஜீரணிக்கக்கூடியதாகவும் இருக்கும். அவற்றை உணவுகள் மற்றும் மில்க் ஷேக்குகளில் சேர்க்கலாம். அவற்றின் தடிமனான தோல்கள் பூச்சிக்கொல்லிகள் மற்றும் மாசுபாடுகளிலிருந்து பழங்களை பாதுகாப்பாக வைத்திருக்கின்றன.
வாழைப்பழம் மீது பொதுவாக வைக்கப்படும் குற்றச்சாட்டு அது எடையை அதிகரிக்க வைக்கிறது என்பதுதான். ஆனால் மஞ்சள் வாழைப்பழங்களுக்குப் பதிலாக சிவப்பு வாழைப்பழங்கள் எடைக்குறைப்புக்கு உதவும். மஞ்சள் வாழைப்பழத்தை விட சிவப்பு வாழைப்பழத்தில் அதிக சத்துக்கள் உள்ளன.

சிவப்பு வாழைப்பழங்கள் இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் மட்டுமே காணப்படுகின்றன. அவை பசிபிக் தீவுகள், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற பல பகுதிகளிலும் வளர்க்கப்படுகின்றன. சிவப்பு வாழைப்பழத்தின் நன்மைகள் மேற்கு நாடுகளில் அவை பிரபலமடைய வழிவகுத்தன.
செவ்வாழையின் கலோரிகள்
மற்ற பழங்களுடன் ஒப்பிடும்போது சிவப்பு வாழைப்பழத்தின் கலோரிகள் குறைவு. ஒரு சராசரி சிவப்பு வாழைப்பழம் உங்கள் உணவில் 100 கலோரிகளுக்கும் குறைவாகவே சேர்க்கிறது.
நன்கு பழுத்த பழத்தையே சாப்பிட வேண்டும்
நீங்கள் சிவப்பு வாழைப்பழங்களை முழுமையாக பழுத்தவுடன் மட்டுமே சாப்பிட வேண்டும், இல்லையெனில் அவை சுண்ணாம்பு மற்றும் உலர்ந்த சுவையுடன் இருக்கும் அல்லது சுவையே இல்லாமல் இருக்கும். இதன் நன்மைகள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
எடையை குறைக்க உதவும்
மற்ற பழங்களை விட சிவப்பு வாழைப்பழம் குறைவான கலோரிகளை கொண்ள்ளது என்று மேலே பார்த்தோம். இது நார்ச்சத்து நிறைந்தது மற்றும் நீண்ட நேரம் உங்களை முழுதாக வைத்திருக்கும். ஒரு சிவப்பு வாழைப்பழத்தில் 90 கலோரிகள், நல்ல கார்போஹைட்ரேட் மற்றும் எளிதில் உடைக்கக்கூடிய நார்ச்சத்து ஆகியவை உள்ளது.
இதயத்தைப் பாதுகாக்கும்
இதில் உள்ள பொட்டாசியம் சிறுநீரக கற்கள் உருவாவதை கட்டுப்படுத்த உதவுகிறது. சுவாரஸ்யமாக, சிவப்பு வாழைப்பழத்தை வழக்கமாக உட்கொள்வது இதய நோய் மற்றும் புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. மேலும், கால்சியம் தக்கவைப்பு எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
புகைப்பிடிப்பதை நிறுத்த உதவுகிறது
இது கேட்பதற்கு வினோதமாக இருக்கலாம், ஆனால் உண்மையில் சிவப்பு வாழைப்பழங்கள் நிகோடின் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்த உதவியாக இருக்கும். இதில் மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் இருப்பதால், அவை நிகோடினைக் கைவிட்ட பிறகு திரும்பப் பெறும் அறிகுறிகளைச் சமாளிக்க உதவுகின்றன. அவை உங்களுக்கு உடனடி ஆற்றலையும், நிறைவான உணர்வையும் வழங்குகின்றன.
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
சிவப்பு வாழைப்பழத்தை வழக்கமாக உட்கொள்வது சருமத்தின் துளைகளை அழிக்கிறது மற்றும் இதனை ஒரு மாஸ்க்காகப் பயன்படுத்துவது சருமத்தை இறுக்கமாகவும் மீள்தன்மையுடனும் வைத்திருக்க உதவுகிறது. இதிலுள்ள 75 சதவீத நீர் உள்ளடக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் சருமத்தை ஹைட்ரேட் செய்து, உலர்த்துவதையும், உரிக்கப்படுவதையும் தடுக்கிறது.
இரத்தத்தை சுத்திகரிக்கும்
செவ்வாழையில் வைட்டமின் பி-6 உள்ளது, இது இரத்தத்தின் தரம் மற்றும் ஹீமோகுளோபின் எண்ணிக்கையையும் மேம்படுத்துகிறது. இது டிரிப்டோபனை செரோடோனினாக மாற்றவும் உதவுகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை மேம்படுத்த ஒவ்வொரு நாளும் 2 முதல் 3 வாழைப்பழங்களை உட்கொள்ள வேண்டும்.
கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
சிவப்பு வாழைப்பழம் பொடுகைக் கட்டுப்படுத்துவதில் பெயர் பெற்றது. இதனை குளிர்காலத்தில், முடியை ஈரப்பதமாக்க தேங்காய், எள் அல்லது பாதாம் எண்ணெயுடன் ஹேர் மாஸ்காகப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. இதைப் பயிற்சி செய்வதன் மூலம் முடி உதிர்தல் மற்றும் வறண்ட முடி ஆகியவையும் கட்டுப்படுத்தப்படும்.
மூல நோயைக் குணப்படுத்தலாம்
வாழைப்பழம் மலச்சிக்கலுக்கு நல்லது என்பதை நாம் அனைவரும் அறிவோம், நிபுணர்களின் கூற்றுப்படி, நாள்பட்ட மலச்சிக்கல் காரணமாக பைல்ஸ் ஏற்ப்பட வாய்ப்புள்ளது, எனவே செவ்வாழை பைல்ஸை குணப்படுத்தவும் உதவுகிறது. செரிமானத்தை மேம்படுத்த ஒவ்வொரு நாளும் மதிய உணவுக்குப் பிறகு ஒரு சிவப்பு வாழைப்பழம் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.
மனஅழுத்தத்தைக் குறைக்கும்
சிவப்பு வாழைப்பழங்களில் பொட்டாசியம் நிறைந்துள்ளது, இது உங்கள் இதயத் துடிப்பைத் தளர்த்துகிறது மற்றும் மன அழுத்தத்தின் போது உடலின் நீரின் நிலைத்தன்மையையும் கட்டுப்படுத்துகிறது. எனவே தினமும் ஒரு சிவப்பு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications












