Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
சுட்டெரிக்கும் கோடை வெயிலில் இருந்து உங்களை குளிர்ச்சியாக வைத்திருக்க... இந்த விதைகள் சாப்பிடுங்க!
சுட்டெரிக்கும் கோடை வெயில் பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். தலைசுற்றலில் தொடங்கி சில சமயங்களில் வெயிலின் தாக்கத்தால் வாந்தி, பதட்டம் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். ஆதலால், இந்த கோடையில் உங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும்.
உடலைக் குளிர்ச்சியாக்க வைத்திருக்கவும் வெப்பத் தாக்கத்திலிருந்து பாதுகாக்கவும் சில உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நீங்கள் தினமும் உட்கொள்ளும் உணவுகள் உங்கள் ஆரோக்கியத்தோடு, சம்பந்தப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இந்திய சமையலறையில் அனைத்து வகையான பிரச்சனைகளுக்கும் தீர்வுகள் இருப்பதை அறிந்து, நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள், இது அனைத்து பருவங்களையும் மிக எளிதாக சமாளிக்க உதவும். ஆம், உடல் வறட்சியிலிருந்து பாதுகாப்பது மட்டுமல்லாமல், வெப்ப பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை தடுக்கும் விதைகள் பற்றி இங்க தெரிந்துகொள்ளுங்கள்.
ஏலக்காய் விதைகள்
ஏலக்காய் விதைகள் செரிமானத்தை அதிகரிக்கிறது மற்றும் நெஞ்செரிச்சலை குறைக்கிறது. உடலைத் தளர்த்தவும், குமட்டல் ஏற்படும்போதும் ஏலக்காய் உண்ணப்படுகிறது. மேலும், இந்த விதைகள் வாயின் புத்துணர்ச்சிக்கும் பயன்படுகிறது. ஏலக்காயை கொண்டு தயாரிக்கப்படும் டீ-யை குடிப்பது, உங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். குறிப்பாக அவற்றை ஐஸ்கட் டீ தயாரிப்பதிலும் பயன்படுத்தலாம்.
சீரகம்
சீரக விதைகள் உங்கள் செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுவதோடு, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் உதகிறது. இந்த விதைகளை உட்கொள்வது மிகவும் எளிதானது. இதை நீங்கள் காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் உட்பட உங்கள் அன்றாட சமையலிலும் பயன்படுத்தலாம்.
சீரகத் தண்ணீரைச் செய்தும் குடிக்கலாம். சீரக நீர் தயாரிக்க, ஒரு கிளாஸ் தண்ணீரில் சீரகத்தை ஊறவைத்து சிறிது நேரம் கழித்து வடிகட்டி அந்த தண்ணீரை குடிக்க வேண்டும்.
துளசி விதைகள்
சப்ஜா என்றும் அழைக்கப்படும் துளசி விதைகளை சாப்பிட்டு வந்தால் உடல் வெப்பம் குறையும், வயிற்றை குளிர்விக்கும். துளசி விதைகளை காய்கறிகளை ஸ்மூத்திகள், ஷேக்ஸ் மற்றும் ஃபலூடாவில் சேர்த்தும் சாப்பிடலாம்.
பெருஞ்சீரகம் விதைகள்
பெரும்பாலான ஹோட்டல்களில் உணவுக்குப் பிறகு பெருஞ்சீரகம் விதைகள் நிறைய கொடுக்கப்படுகிறது. ஏனெனில் வெந்தய விதைகளை உட்கொள்வது உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறது மற்றும் வயிற்றுப் பிரச்சினைகளைத் தடுக்கிறது. இந்த விதைகளை சாதாரணமாக உண்ணலாம் மற்றும் தண்ணீரில் ஊறவைத்தும் குடிக்கலாம்.
வெந்தய விதைகள்
மருத்துவ குணங்கள் நிறைந்த வெந்தய விதைகளை கோடையில் சாப்பிடுவது மிகவும் நல்லது. இந்த விதைகள் உடல் வெப்பநிலையை அதிகமாக அதிகரிக்க அனுமதிக்காது. வெந்தயத்தை இரவு முழுவதும் ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் வடிகட்டி குடிக்கலாம். இந்த நீரை சிறிது சூடுபடுத்தியும் குடிக்கலாம்.
கொத்தமல்லி விதைகள்
உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி குளிர்ச்சியைப் பெற கொத்தமல்லி விதைகளை உட்கொள்ளலாம். இந்த விதைகளை தண்ணீரில் கலந்தும் குடிக்கலாம் அல்லது கொத்தமல்லி விதைகளை கொண்டு தயார் செய்யப்பட்ட தேநீர் குடிப்பதும் நன்மை பயக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

