Latest Updates
-
சிக்கன் வாங்குனா எப்பவும் குழம்பு செய்யாம, ஒருவாட்டி ரசம் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி கார குழம்பு வைச்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்தியாவின் 'காபி தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? நம்ம பக்கத்துக்கு ஊர்தானா? -
அக்டோபர் 09-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் பண்டிகை கால இனிப்புக்களை ரசிப்பதற்கான 7 சிறந்த வழிகள்! -
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம் -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
Salt Tea: குடிக்கும் டீயில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
Salt Tea Benefits In Tamil: உலகில் டீ பிரியர்கள் ஏராளமானோர் உள்ளனர். அதுவும் காலையில் எழுந்ததும் ஒரு கப் டீ குடித்தால் தான் பலருக்கும் அன்றைய நாளின் தொடக்கம் சிறப்பாக இருப்பதை உணர்வார்கள். காலையில் எழுந்ததும் ஒரு கப் டீ குடித்தால், உடலுக்கு ஆற்றல் கிடைப்பதோடு, ஏராளமான ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும். தற்போது டீயில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் க்ரீன் டீ, ப்ளாக் டீ, மூலிகை டீ போன்றவை குறிப்பிடத்தக்கவை.
பொதுவாக டீயில் சுவைக்காக சர்க்கரை சேர்த்து தான் குடிப்போம். ஆனால் டீயில் சர்க்கரைக்கு பதிலாக உப்பு சேர்த்து குடித்தால், இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது தெரியுமா? நிச்சயம் இச்செய்தி பலருக்கு சற்று விசித்திரமாக இருக்கும். ஆனால் சீனா, காஷ்மீர் போன்ற பகுதிகளில் மக்கள் தாங்கள் குடிக்கும் டீயில் உப்பு சேர்த்து குடிப்பார்களாம்.

ஏனெனில் இப்படி டீயில் உப்பு சேர்த்து குடிக்கும் போது உடல் ஆரோக்கியம் இன்னும் சிறப்பாக இருக்கும். நிபுணர்களின் கூற்றுப்படி, குடிக்கும் டீயில் உப்பு சேர்க்கும் போது, அது டீயின் சுவையை அதிகரிக்கும். முக்கியமாக எப்படி சர்க்கரை டீயில் உள்ள கசப்புச் சுவையைக் குறைக்கிறதோ, அதேப் போல் உப்பில் உள்ள மெட்டல் அயனிகள் டீயில் உள்ள கசப்புச் சுவையைக் குறைக்கும்.
உப்பு டீ குடிப்பதால் பெறும் நன்மைகள்
ஆய்வுகளின் படி, சோடியம் இதய நோய், சிறுநீரக பிரச்சனைகள் போன்ற உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுடன் தொடர்பு கொண்டிருந்தாலும், இதை மிதமான அளவில் சேர்த்து வந்தால் பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கும். முக்கியமாக உப்பு உடலில் எலக்ட்ரோலைட் மற்றும் திரவங்களை சமநிலையில் பராமரிக்க உதவுகிறது, செல்களுக்கு ஊட்டச்சத்துக்களை கொண்டு செல்ல உதவுகிறது, அமிலத்தன்மையை சீராக பராமரிக்க உதவுகிறது.
மேலும் நரம்புகளின் செயல்பாட்டிற்கு உதவுகிறது, இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது மற்றும் செரிமான அமிலத்தை சுரக்க உதவுகிறது. எனவே இவ்வளவு நன்மைகளை வழங்கும் உப்பை குடிக்கும் டீயில் கலந்து குடிக்கும் போது இன்னும் பலவிதமான நன்மைகள் உடலுக்கு கிடைக்கும். அந்த நன்மைகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.
1. நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
டீயில் உப்பு சேர்த்து குடிக்கும் போது, அது நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது. இதனால் அடிக்கடி நோய்வாய்ப்படுவது தடுக்கப்படும். நீங்கள் அடிக்கடி ஏதேனும் ஆரோக்கிய பிரச்சனையால் அவதிப்படுவீர்களானால், தினமும் குறைந்தது ஒரு டம்ளர் உப்பு டீயைக் குடித்து வாருங்கள்.
2. செரிமான பிரச்சனைகள் நீங்கும்
உப்பு டீயை குடிப்பதன் மூலம் உடலின் ஆற்றல் அதிகரிப்பதோடு, நாள் முழுவதும் உடல் சுறுசுறுப்பாக செயல்படும். மேலும் இந்த டீ செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ளும் மற்றும் உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தும்.
3. சரும பிரச்சனைகள் தடுக்கப்படும்
பல்வேறு சரும பிரச்சனைகளை எதிர்த்துப் போராட இந்துப்பு பெரிதும் உதவுகிறது. ஏனெனில் இந்துப்பில் உள்ள ஜிங்க், சேதமடைந்த திசுக்களை சரிசெய்கிறது மற்றும் முகத்தில் பருக்கள் வருவதைத் தடுக்கிறது. எனவே நீங்கள் சரும பிரச்சனைகளைக் கொண்டிருந்தால், டீயில் இந்துப்பு ஒரு சிட்டிகை சேர்த்து குடித்து வாருங்கள்.
4. ஒற்றைத் தலைவலி தடுக்கப்படும்
அடிக்கடி ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுவீர்களா? அப்படியானால் உப்பு கலந்த டீயை தினமும் ஒரு டம்ளர் குடித்து வாருங்கள். இதனால் ஒற்றைத் தலைவலி தடுக்கப்படுவதோடு, உடல் மற்றும் மனம் ரிலாக்ஸாக இருக்கும். இது தவிர இந்த டீ மன அழுத்த ஹார்மோன்களின் சுரப்பைக் கட்டுப்படுத்தி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. முக்கியமாக உப்பு கலந்த டீயைக் குடிக்கும் போது, உடல் நீண்ட நேரம் நீரேற்றத்துடன் இருக்கும்.
உப்பு டீயை தயாரிப்பது எப்படி?
உப்பு டீ தயாரிப்பதற்கு, நீங்கள் பால் டீ குடிப்பவரானால், முதலில் ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் நீரை ஊற்றி, டீ தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, குடிப்பதற்கு முன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
அதுவே நீங்கள் ப்ளாக் டீ குடிப்பவரானால், கொதிக்கும் நீரில் டீ தூளை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, அத்துடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, குடிக்க வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
