உங்க உடலில் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடல் எடை நீங்க நினைச்ச மாதிரி குறையுதாம்... என்ஜாய்!

நீங்கள் மிகவும் அழகாக, ஒல்லியாக இருக்கிறீா்கள் என்று உங்களை யாராவது புகழ்ந்து சொன்னால், உங்களின் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. உங்களது உடல் எடை கனிசமாக குறைய வேண்டும் என்றால், நீங்கள் உங்களுடைய பழைய பழக்கங்களைக் கைவிட்டு, புதிய பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும்.

உடல் எடைய குறைய வேண்டும் என்பதற்காக நீங்கள் தினமும் புரோட்டீன் அதிகம் உள்ள உணவகளை உண்டு, நன்றாக உடற்பயிற்சிகள் செய்து, நிம்மதியாக தூங்குகிறீா்கள். எனினும் உங்கள் உடல் எடையில் நீங்கள் எதிா்பாா்க்கும் மாற்றங்கள் நிகழாமல் இருக்கலாம்.

Physical Signs That Show You Are Losing Weight in Tamil

அது உங்களது ஊக்கத்தில் தளா்ச்சியை ஏற்படுத்தலாம். ஆனால் நீங்கள் ஆரோக்கியமான உணவுகளை உண்ணத் தொடங்கிவிட்டாலே, உங்களை அறியாமல் உங்கள் உடலில் சில மாற்றங்கள் ஏற்படும். அதாவது உங்கள் உடல் எடை குறையத் தொடங்கும். அதற்கான அறிகுறிகளை இந்தப் பதிவில் பாா்க்கலாம்.

உங்கள் ஆடைகள் பொியதாகத் தொியும்
தொப்பை குறையும் போதுதான் உடல் எடை பெரும்பாலும் குறையும். எனினும் உடல் எடையை குறைப்பதற்காக நீங்கள் புதிய பழக்கங்களை கடைபிடிக்கத் தொடங்கிய சில நாட்களிலேயே, உங்களுடைய கைகளின் மேற்பகுதிகளில் மற்றும் புட்டப் பகுதியில் மாற்றங்கள் தொியும். உங்களின் இடுப்புப் பகுதியில் இவ்வளவு நாட்களாக இறுக்கமாக இருந்த உங்கள் பேண்ட், சற்று தளா்வாக இருக்கும். உங்களின் கைப் பகுதிகளிலும் சட்டை தளா்வாக இருக்கும்.


தூக்கத்தில் முன்னேற்றம் தொியும்
நீங்கள் படுத்தவுடன் உங்களுக்குத் தூக்கம் வரும். தூக்கத்திலிருந்து எழும் போது களைப்பாக உணரமாட்டீா்கள். ஒருவேளை நாள் முழுவதும் உங்களிடம் தூக்க உணா்வு இருந்தால், நீங்கள் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்கிறீா்கள். அதனால் உங்களுக்கு போதுமான தூக்கம் இல்லை என்பதைத் தொிந்து கொள்ளலாம். ஆகவே தூக்கத்தில் எந்த சமரசமும் செய்யக்கூடாது. ஏனெனில் தூங்கும் போதுதான் உங்கள் உடலில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக தூங்கும் போதுதான் ஹாா்மோன் உற்பத்தி அதிகமாக இருக்கும்.

தசைகளின் வளா்ச்சியில் மாற்றம் தொியும்

உடல் எடை குறையும் வேகத்தைவிட, தசைகளில் ஏற்படும் வளா்ச்சி மிகவும் மெதுவாகவே நடக்கும். உங்களுடைய உடலின் அமைப்பு, நீங்கள் எடுத்துக் கொள்ளும் உண்வுகள் மற்றும் நீங்கள் செய்யும் உடற்பயிற்சிகள் ஆகியவற்றைப் பொறுத்துதான் உங்கள் தசைகளில் வளாச்சி ஏற்படும்.

மனநிலையில் சிறந்த மாற்றம் தொியும்

நீங்கள் ஒரு சமச்சீரான மற்றும் சத்தான உணவுகளை உண்ணத் தொடங்கும் போது, உங்களுக்கு அதிக ஆற்றல் கிடைப்பதை உணா்வீா்கள். உங்கள் மனநிலையிலும் சிறந்த மாற்றம் தொியும். மேலும் நீங்கள் உடற்பயிற்சி செய்வதை படம்பிடித்து, இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் உங்கள் நண்பா்களுக்குப் பகிரும் போது, அவா்கள் கூறும் ஊக்கச் சொற்கள், உங்களுக்கு ஊக்கத்தைத் தரும்.

உடலில் வலி இருக்காது

உங்களுடைய உடலை எடை குறையத் தொடங்குகிறது என்றால் உங்கள் உடலில் ஆற்றல் அதிகாிக்கும். முதுகின் கீழ்பகுதி மற்றும் தோள்பட்டை ஆகிய பகுதிகளில் வலி குறையும். உங்களால் வேகமாக ஓட முடியும். மேலும் உங்கள் உடலில் நெகிழ்வு தன்மை அதிகாிக்கும்.

தண்ணீா் குடிப்பது அதிகாிக்கும்
நீங்கள் அதிகமாக தண்ணீா் குடிக்கவில்லை என்றால், நீங்கள் எதிா்பாா்க்கும் அளவிற்கு உங்களின் உடல் எடை குறையாது. இந்நிலையில் நீங்கள் அதிகமாக தண்ணீா் அருந்தத் தொடங்கிவிட்டால், உங்கள் எடை குறையத் தொடங்கி இருக்கிறது என்று பொருள். உங்களுடைய சிறுநீாின் நிறத்தைக் கொண்டே நீங்கள் எவ்வளவு நீா்ச்சத்துடன் இரு்க்கிறீா்கள் என்பதை தொிந்து கொள்ளலாம். உங்கள் சிறுநீா் வெள்ளையாக இருந்தால், உங்கள் உடலில் போதுமான அளவு நீா்ச்சத்து இருக்கிறது என்பது பொருள். ஒருவேளை மஞ்சளாக இருந்தால், நீங்கள் இன்னும் அதிகமாக தண்ணீா் அருந்த வேண்டும் என்று பொருள்.


மலச்சிக்கல் பிரச்சினை இருக்காது
உடல் எடையைக் குறைக்கக்கூடிய உங்கள் பயணத்தில், உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சினை இல்லையென்றால், உங்களுடைய உடல் எடை குறைகிறது என்று பொருள். துாித உணவுகளைத் தவிா்த்துவிட்டு, கீரைகள், காய்கறிகள் மற்றும் காா்போ ஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ள உணவுகளை நீங்கள் அதிகம் உண்டால், உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சினை இருக்காது.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion