Latest Updates
-
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க
பெண்களே! உங்க முகத்தில் இந்த மாற்றங்கள் தெரியுதா? அப்ப உங்க கருப்பை-ல பிரச்சனைன்னு அர்த்தம்.. உஷார்..
PCOS Awareness Month: இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் பெண்கள் சந்திக்கும் ஒரு பிரச்சனை தான் பிசிஓஎஸ் என்னும் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம். தற்போது இந்த பிரச்சனையானது வயது வந்த சிறுமிகள் முதல் திருமணமான பெண்கள் வரை அனைவரிடத்திலும் பொதுவாக காணப்படுகிறது. இது ஹார்மோன் கோளாறுகளால் ஏற்படக்கூடியது. இது கிட்டத்தட்ட 5 பெண்களில் ஒருவரை பாதிக்கிறது.
இந்த பிசிஓஎஸ் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் பிசிஓஎஸ் விழிப்புணர்வு மாதம் அனுசரிக்கப்படுகிறது. இந்த விழிப்புணர்வு மாதத்தின் நோக்கம் பிசிஓஎஸ்-க்கு சரியான நேரத்தில் சிகிச்சையை ஊக்குவிப்பதாகும். இம்மாதத்தில் இந்த பிசிஓஎஸ் எதனால் வருகிறது, அதன் அறிகுறிகள் என்ன, எப்படி சரிசெய்வது போன்றவை குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஆங்காங்கு நடத்தப்படும்.

பிசிஓஎஸ் என்றால் என்ன?
பிசிஓஎஸ் என்பது கருப்பைகளைப் பாதிக்கும் ஒரு ஹார்மோன் ஏற்றத்தாழ்வு ஆகும். இது ஒழுங்கற்ற மாதவிடாய், கருமுட்டை வெளியிடுவதில் சிரமம் மற்றும் கருப்பையில் நிறைய நீர்க்கட்டிகள் ஏற்பட வழிவகுக்கிறது. மேலும் இந்நிலையின் போது உடலில் ஆன்ட்ரோஜென் என்னும் ஆண் ஹார்மோன்களின் அளவு அதிகமாக இருக்கும். இன்னும் நிறைய பெண்களுக்கு பிசிஓஎஸ் பிரச்சனை குறித்து சரியாக தெரியவில்லை. இதன் விளைவாக கருத்தரிப்பதில் சிரமத்தை சந்திக்கின்றனர். ஆனால் ஆரம்பத்திலேயே இப்பிரச்சனையை கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால், கருத்தரிப்பதில் உள்ள பிரச்சனையைத் தவிர்க்கலாம்.
சருமத்தில் தெரியும் பிசிஓஎஸ்-ன் அறிகுறிகள்
லண்டனைச் சேர்ந்த டாக்டர் சிமி அடேடிஜி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பிசிஓஎஸ் பிரச்சனை இருந்தால் சருமத்தில் எந்த மாதிரியான அறிகுறிகளை சந்திக்க நேரிடும் என்று பகிர்ந்துள்ளார். அந்த அறிகுறிகளாவன:
1. முகப்பரு
"பிசிஓஎஸ் பிரச்சனை இருந்தால், உடலில் டெஸ்டோஸ்டிரோன் என்னும் ஆண் ஹார்மோன்களின் அளவு அதிகரித்து, கன்னங்களின் கீழ் பகுதியில் முகப்பருக்கள் அதிகம் வரக்கூடும்." என்று டாக்டர் கூறினார். எனவே வழக்கத்திற்கு மாறாக முகப்பருக்களை அதிகம் சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
2. அதிகப்படியான முடி வளர்ச்சி
"பெண்கள் தங்களின் உதடுகளுக்கு மேல் முடியின் வளர்ச்சியை அதிகம் சந்தித்தால், உடலில் டெஸ்டோஸ்டிரோன் என்னும் ஆண் ஹார்மோன்களின் அளவு அதிகம் உள்ளது என்று, பிசிஓஎஸ் பிரச்சனை உள்ளது என்றும் அர்த்தம்." என்றும் டாக்டர் கூறினார். ஆகவே முகத்தில் முடியின் வளர்ச்சியை அதிகம் சந்தித்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.
3. தலைமுடி மெலிவது
தலைமுடி வழக்கத்திற்கு மாறாக அதிகம் உதிர்ந்து முடி மெலிந்து போவதைக் கண்டாலோ அல்லது முன்பக்க நெற்றி மேலே ஏறுவதை சந்தித்தாலோ, பிசிஓஎஸ் பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது என்று டாக்டர் கூறினார்.
4. கழுத்து மற்றும் அக்குள் கருமை
கழுத்து மற்றும் அக்குள் பகுதியில் கருப்பு நிற படலத்தை கண்டால், அதை அழுக்கு என்று கருதிவிட வேண்டாம். அது உடலில் இன்சுலின் ஹார்மோன் ஏற்றத்தாழ்வின் விளைவால் ஏற்பட்டது என்று டாக்டர் கூறினார். எனவே கழுத்து, அக்குள் போன்ற பகுதிகள் திடீரென்று கருப்பாக மாறுவதைக் கண்டால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
5. எண்ணெய் பசை சருமம்
உடலில் டெஸ்டோஸ்டிரோன் என்னும் ஹார்மோன் அதிகமாக இருந்தால், அது எண்ணெய் சுரப்பியை விரிவடையச் செய்து, அதிகப்படியாக எண்ணெயை உற்பத்தி செய்து, சருமத்தில் எண்ணெய் வழியத் தூண்டும் என்று டாக்டர் கூறினார். ஆகவே உங்கள் முகத்தில் திடீரென்று எண்ணெய் பசை அதிகமாக இருப்பதை உணர்ந்தால், மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து பாருங்கள்.
6. மருக்கள்
மருக்களானது சருமத்தில் வளரும் மென்மையான மற்றும் புற்றுநோயல்லாத ஒரு வளர்ச்சியாகும். இதுவும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளின் விளைவாக வளரக்கூடிய ஒன்றாகும். எனவே சருமத்தில் மருக்கள் வழக்கத்திற்கு மாறாக திடீரென்று அதிகமாக வளர்வதைக் கண்டால், மருத்துவரை அணுகுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
