Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
வாய் துர்நாற்றம் அதிகமா வீசுதா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த உணவுகளை சாப்பிடுங்க..
Bad Breath Remedies In Tamil: உலகளவில் பெரும்பாலானோர் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் வாய் துர்நாற்றம். இது ஒருவருக்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தக்கூடியது. இந்த வாய் துர்நாற்ற பிரச்சனையைத் தவிர்க்க தினமும் இரண்டு வேளை பற்களை துலக்குவதோடு, நாக்குகளை சுத்தம் செய்வது மற்றும் மௌத் வாஷ் போன்றவற்றை பயன்படுத்தினால் சரியாகிவிடும் என்று பலரும் நினைப்பார்கள்.
அது உண்மை தான். ஆனால் சில சமயங்களில் போதுமான வாய் சுகாதாரத்தை மேற்கொண்டும், வாய் துர்நாற்ற பிரச்சனையை பலர் சந்திக்கின்றனர். அப்படி சந்தித்தால், வாயில் பிரச்சனை இல்லாமல், உடலில் உள்ள பிரச்சனை காரணமாக இருக்கலாம்.

ஒருவரது வாயில் கடுமையான துர்நாற்றம் வீசினால், குடல் ஆரோக்கியமாக இல்லாமல் இருக்கலாம் என்று பல நிபுணர்கள் கூறுகின்றனர். அதுவும் ஒருவரது செரிமானம் சிறப்பாக இல்லாத போது, உணவுகள் நொதிக்கப்பட்டு, வாயுக்கள் உருவாகும். இதனால் இரத்தத்தில் சேர்மங்கள் சேர்ந்து சுவாசத்தை பாதிக்கலாம்.
சமீபத்தில் ஊட்டச்சத்து நிபுணரான நமாமி அகர்வால் வாய் துர்நாற்றத்திற்கும், குடல் பிரச்சனைக்கும் இடையிலான தொடர்பு குறித்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது, "தினமும் பற்களை துலக்கினாலும் வாய் துர்நாற்றம் வீசுகிறதா? அப்படியானால் பிரச்சனை உங்களின் வாயில் இல்லை, குடலில் தான் உள்ளது. இப்படி குடல் பிரச்சனையால் சந்திக்கும் வாய் துர்நாற்றத்தை சமையலறையில் உள்ள சில பொருட்களைக் கொண்டே சரிசெய்யலாம்" என்று கூறினார். மேலும் அந்த பொருட்கள் குறித்தும், அவை எப்படி உதவுகிறது என்பது குறித்தும் விளக்கியுள்ளார்.
1. இஞ்சி
முதலாவதாக அவர் கூறியது, இஞ்சி. இஞ்சியில் ஜிஞ்செரோல் உள்ளது. இது உமிழ்நீர் உற்பத்தியை அதிகரிக்கிறது மற்றும் குடலியக்கத்தையும் ஆதரிக்கிறது என்று நிபுணர் கூறினார். மேலும் இஞ்சியானது வயிற்றை விரைவில் காலியாக்க உதவுகிறது. இதன் மூலம் உணவுகள் வயிற்றில் நீண்ட நேரம் நொதித்து, அதனால் வாய் துர்நாற்றம் ஏற்படும் வாய்ப்புக்களும் குறைக்கிறது.
2. சோம்பு
இரண்டாவதாக அவர் கூறியது சோம்பு. சோம்பு விதைகளில் அனெத்தோல் எனப்படும் ஒரு சேர்மம் உள்ளது. மேலும் இது நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. சோம்பு குடல் வாயுவை குறைக்க உதவுகிறது மற்றும் சல்பர் சேர்மங்களால் ஏற்படும் வாய் துர்நாற்றத்தை தடுக்க உதவுகிறது என்று நமாமி கூறினார். எனவே வாய் துர்நாற்றத்தைத் தடுக்க, ஒவ்வொரு வேளை உணவு உட்கொண்ட பின்னரும் சிறிது சோம்பு விதைகளை வாயில் போட்டு மெல்லும் வழக்கத்தைக் கொள்ளுங்கள்.
3. புதினா
புதினாவில் மெந்தால் உள்ளது மற்றும் இதில் இயற்கையான ஆன்டி-பாக்டீரியல் பண்புகளும் உள்ளது. இது வாய் மற்றும் குடலில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும் என்று ஊட்டச்சத்து நிபுணர் கூறினார். மேலும் புதினா வாய்க்கு ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கும் மற்றும் செரிமானத்தை சீராக்கும்.
4. கிராம்பு
கடைசியாக அவர் கூறியது கிராம்பு. இந்த கிராம்பு ஒரு வலுவான ஆன்டி-செப்டிக் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகளை கொண்டுள்ளது. இந்த கிராம்பு துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களைக் கொல்ல உதவுகிறது. மேலும் இது வாய்க்கு புத்துணர்ச்சியையும் அளிக்கிறது. ஒருவரது செரிமானம் சிறப்பாக நடந்தால், வாய் புத்துணர்ச்சியுடன் இருக்கும் என்றும் ஊட்டச்சத்து நிபுணர் கூறினார்.
எனவே நண்பர்களே! நீங்கள் தினமும் 2 வேளை பற்களைத் துலக்கியும், வாய் துர்நாற்றத்தை சந்தித்தால், உங்கள் வாயில் பிரச்சனை இல்லை, குடலில் தான் பிரச்சனை என்பதை புரிந்து, மேலே கொடுக்கப்பட்டுள்ள சமையலறை மூலிகைப் பொருட்களை தினசரி உணவில் சேர்த்து வாருங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications