Latest Updates
-
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம் -
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
ஜூலை 27-ல் வக்ரமடையும் சனி பகவான்: டிசம்பர் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
இந்த 4 குணங்கள் இருப்பவர்கள் அதிபுத்திசாலியாகவும், மேதைகளாகவும் இருப்பார்களாம் - சாணக்கிய தந்திரம் -
மணமணக்கும் பன்னீர் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.!
எச்சரிக்கை! நைட் 10 மணிக்கு மேல இந்த உணவுகளை சாப்பிடாதீங்க... இல்லன்னா சீக்கிரம் மாரடைப்பு வந்துடும்..
Never Eat These Foods After 10 PM: நீங்கள் அடிக்கடி எதையாவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பீர்களா? முக்கியமாக இரவு நேரங்களில் அதிகமாக நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவீர்களா? அப்படியானால் உடனே அந்த பழக்கத்தை நிறுத்துங்கள். ஏனெனில் இப்படி இரவு நேரங்களில் நொறுக்கு தீனிகளை மட்டுமின்றி, ஒருசில உணவுகளை உண்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
குறிப்பாக இப்படி சாப்பிடுவது உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து, மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை வருவதற்கான அபாயத்தை அதிகரித்துவிடும். இது தவிர இரவு நேரத்தில் தாமதமாக ஒருசில உணவுகளை உட்கொண்டால், அது இரவு தூக்கத்தை கெடுப்பதோடு, செரிமானத்தை பாதிக்கும் மற்றும் உடல் பருமனை அதிகரித்துவிடும். கீழே எந்த வகை உணவுகளை இரவு 10 மணிக்கு மேல் உட்கொள்ளக்கூடாது என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.

காப்ஃபைன் நிறைந்த உணவுகள்
பொதுவாக காப்ஃபைன் நிறைந்த உணவுகளை மாலை 6 மணிக்கு மேல் உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் காப்ஃபைன் ஒருவரது தூக்கத்தில் இடையூறை ஏற்படுத்தும். ஒருவரது தூக்கத்தில் இடையூறு ஏற்பட்டால், அதுவே உடலின் பல செயல்பாடுகளை பாதிக்கும். எனவே காப்ஃபைன் நிறைந்த சாக்லேட், டீ, காபி போன்றவற்றை மாலை வேளையில் இருந்தே குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
வறுத்த உணவுகள்
எண்ணெயில் பொரித்த மற்றும் வறுத்த உணவுகள் செரிமானமாக சற்று கடினமாக இருக்கும். இத்தகைய உணவுகளை இரவு நேரத்தில் தாமதமாக உட்கொள்ளும் போது, அது வயிற்று உப்புசம் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். மேலும் இந்த உணவுகளை உட்கொண்டதும் தூங்கினால், அதில் உள்ள கொழுப்புக்கள் அப்படியே உடலில் தேங்கிவிடும். இதன் விளைவாக ஒரு கட்டத்தில் இதய நோயின் அபாயம் அதிகரித்துவிடும். எனவே பர்கர், பிரெஞ்சு ப்ரைஸ், ப்ரைடு சிக்கன் போன்றவற்றை இரவு நேரத்தில் உட்கொள்ளாதீர்கள்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சோடியம் மற்றும் செயற்கை பொருட்கள் அதிகம் இருப்பதால், சாதாரணமாகவே இந்த வகை உணவுகளை உட்கொண்டால், அது வயிற்று உப்புசம் மற்றும் அசௌகரியத்திற்கு வழிவகுக்கும். அதுவும் இரவு நேரத்தில் இந்த உணவுகளை உட்கொண்டால், அது தூக்கத்தில் இடையூறை ஏற்படுத்தும். எனவே எளிதில் ஜீரணமாகக்கூடிய முழு தானிய உணவுகளை உட்கொள்ளுங்கள்.
ஆல்கஹால்
ஆல்கஹாலைக் குடித்தால் விரைவில் தூங்கிவிடலாம் என்று நிறைய பேர் நம்புகிறார்கள். ஆனால் உண்மையில் இந்த பானத்தை குடிக்கும் போது, ஆரம்பத்தில் தலைச்சுற்றும். பின் அது நல்ல ஆழமான தூக்கத்தைப் பெற முடியாமல் தூக்கத்தில் இடையூறை ஏற்படுத்தும். எனவே இரவு நேரத்தில் ஆல்கஹாலை அருந்துவதைத் தவிர்த்திடுங்கள். அப்படியே குடித்தாலும், மாலை வேளையில் அளவாக குடியுங்கள்.
ஸ்நாக்ஸ் மற்றும் சர்க்கரை நிறைந்த இனிப்புகள்
ஐஸ்க்ரீம், குக்கீஸ், மிட்டாய் மற்றும் பிற சர்க்கரை நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிட்டால், அது தற்காலிகமாக இரத்த சர்க்கரை அளவை சட்டென்று உயர்த்தி, பின் சட்டென்று குறைத்துவிடும். எனவே இப்படியான இனிப்பு நிறைந்த ஸ்நாக்ஸ்களை இரவு நேரத்தில் உட்கொள்வதைத் தவிர்த்திடுங்கள்.
கார்பனேட்டட் பானங்கள்
சோடா போன்ற கார்பனேட்டட் பானங்கள் வயிற்று உப்பு, வாய்பு தொல்லை போன்றவற்றை ஏற்படுத்தி, இரவு நேரத்தில் நிம்மதியான தூக்கத்தை பெற முடியாமல் தடுக்கும். அதுவும் இதில் உள்ள கார்பனேற்றம் செரிமான மண்டலத்திற்குள் சென்றதும் காற்றை உருவாக்குகிறது. இதன் விளைவாக ஏப்பம் மற்றும் வயிற்று அசௌகரியம் ஏற்படுகிறது. மேலும் இந்த வகையான பானங்கள் இரத்த சர்க்கரை அளவில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதிக அளவிலான உணவு
இரவு நேரத்தில் வயிறு நிறைய உணவுகளை உட்கொண்டால், அது தூக்க சுழற்சியில் இடையூறை ஏற்படுத்தும். அதுவும் கொழுப்பு அல்லது புரோட்டீன் அதிகம் நிறைந்த உணவை இரவு தாமதமாக உட்கொண்டால், அவற்றை செரிக்க உடல் கடினமாக வேலை செய்யும். உடலின் மெட்டபாலிச செயல்பாடு அதிகரித்தால், தூங்குவதில் சிரமத்தை சந்திக்க நேரிட்டு, மிகுந்த உடல் சோர்வை சந்திக்க நேரிடும். எனவே இரவு நேரத்தில் அளவாக உட்கொள்ள வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications