Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
எக்காரணம் கொண்டும் மழை நேரத்தில் இந்த உணவுகளை ஒன்னா சாப்பிடாதீங்க.. எச்சரிக்கும் ஊட்டச்சத்து நிபுணர்!
National Nutrition Week 2025: ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 7 வரையிலான ஒரு வார காலம் தேசிய ஊட்டச்சத்து வாரமாக கொண்டாடப்படுகிறது. இந்த வாரத்தின் நோக்கமே சரியான உணவு மற்றும் ஊட்டச்சத்துக்களின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதாகும்.
தற்போதைய பரபரப்பான வாழ்க்கை முறையில் பணத்தை சம்பாதிப்பதற்காக தங்களின் ஆரோக்கியத்தை கூட சரியாக கவனித்துக் கொள்ள முடியவில்லை. இதனால் தான் சமீப காலமாக மக்களிடையே ஏராளமான நோய்களின் அபாயம் அதிகரித்து வருகிறது. அதுவும் தற்போது மழைக்காலம். இக்காலத்தில் நோய்த்தொற்றுகளின் அபாயம் அதிகமாக இருக்கும்.

மேலும் மழைக்காலத்தில் காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், எப்போதும் சூடாகவும், மொறுமொறுப்பாகவும் சாப்பிட வேண்டுமென்ற ஆவல் எழும். ஆனால் இக்காலத்தில் நமது உடலின் நோயெதிர்ப்பு சற்று மந்தமாக இருப்பதால், ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். அதற்கு உண்ணும் உணவுகளில் சற்று கவனமாக இருக்க வேண்டும். அதுவும் ஒருசில உணவுகளை ஒன்றாக உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்பது தெரியுமா?
இதுக்குறித்து ஊட்டச்சத்து நிபுணரான ஆய்னா சிங்கால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மழைக்காலத்தில் ஒன்றாக சாப்பிடக்கூடாத சில உணவுகளைப் பட்டியலிட்டுள்ளார். அவை எவையென்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
1. டீ + வறுத்த ஸ்நாக்ஸ் (பக்கோடா, சமோசா)
மழைக்காலத்தில் ஒரு கப் டீயுடன், பக்கோடா அல்லது சமோசா போன்றவற்றை சாப்பிட ஆசையாக இருக்கும். ஆனால் இப்படி சாப்பிட்டால் அது அசிடிட்டியை ஏற்படுத்தி, வாய்வு தொல்லை மற்றும் சோம்பலுக்கு வழிவகுக்கும்.
2. பால் + மாங்காய்
பாலையும் மாங்காயையும் யாரும் ஒன்றாக சாப்பிடமாட்டார்கள் தான். ஆனால் பால் குடித்த பின்னர் மாங்காயை உட்கொண்டாலோ அல்லது மாங்காய் தின்ற பின் பால் குடித்தாலோ, அது சருமத்தில் முகப்பரு வெடிப்புக்கள், வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தும்.
3. ப்ரைடு உணவுகள் + குளிர்ச்சியான மோர்
மழைக்காலத்தில் எண்ணெயில் பொரித்த உணவுகளை நன்கு வயிறு முட்ட உட்கொண்டு, அதன் விளைவாக சந்திக்கும் நெஞ்செரிச்சலை தணிக்க குளிர்ச்சியான மோரைக் குடிக்கும் பழக்கம் இருந்தால் உடனே நிறுத்துங்கள். ஏனெனில் இது கொழுப்பு உறிஞ்சுதலைக் குறைத்து, செரிமான தீயை அடக்குகிறது.
4. பருப்பு வகைகள் + குளிர்ந்த தயிர்
மழைக்காலத்தில் பருப்பு வகைகளை உட்கொண்ட பின், குளிர்ச்சியான தயிரை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது செரிமானத்தை மெதுவாக்கி, வயிற்று உப்புசத்தை மோசமாக்கும்.
5. பழங்கள் + மீல்ஸ் (சாதம், தால், ரொட்டி)
மழைக்காலத்தில் மதிய வேளையில் ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட பின், பழங்களை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது குடலில் புளிக்க வைத்து, வாய்வு தொல்லை மற்றும் வயிற்று உப்புசத்தை உண்டாக்கும்.
6. பால் + வாழைப்பழம்
பாலுடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடும் பழக்கம் இருந்தால், மழைக்காலத்தில் அதை சாப்பிடாதீர்கள். இல்லாவிட்டால் அது செரிமானத்தை மெதுலாக்கி, வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தும் மற்றும் சைனஸ் பிரச்சனையை தீவிரமாக்கிவிடும்.
7. மீன் + தயிர்
மழைக்காலத்தில் தயிரையும், மீனையும் ஒன்றாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது உடலில் நச்சுத்தன்மையை உருவாக்குவதோடு, சருமத்தில் அழற்சியையும் ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.
8. முளைக்கட்டிய பயிர்கள் + தயிர்
முளைக்கட்டிய பயிர்களும், தயிரும் குளிர்ச்சியானவை. இவ்விரண்டையும் ஒன்றாக உட்கொண்டால் அது வாய்வு தொல்லையை ஏற்படுத்துவதோடு, செரிமானத்தை பலவீனமாக்கும்.
9. பழைய சாதம் + தயிர்
பழைய சாதத்துடன் தயிரை சேர்த்து சாப்பிடுவது குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது தான். ஆனால் மழைக்காலத்தில் இதை உட்கொண்டால், குடல் தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். எனவே மழைக்காலத்தில் இந்த உணவைத் தவிர்ப்பதே நல்லது.
10. தர்பூசணி + பிற உணவுகள்
தர்பூசணியை எப்போதும் தனித்து தான் சாப்பிட வேண்டும். மற்ற உணவுகளுடன் சேர்த்து உட்கொண்டால், அது நொதித்தலுக்கு வழிவகுத்து, வயிற்றுப்போக்கை ஏற்படுத்திவிடும்.
எனவே நண்பர்களே! இதுவரை மழைக்காலத்தில் இந்த காம்பினேஷன் உணவுகளை உட்கொண்டு வந்திருந்தால், இனிமேல் அதைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications



