Latest Updates
-
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
ஜூலை 27-ல் வக்ரமடையும் சனி பகவான்: டிசம்பர் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
இந்த 4 குணங்கள் இருப்பவர்கள் அதிபுத்திசாலியாகவும், மேதைகளாகவும் இருப்பார்களாம் - சாணக்கிய தந்திரம் -
மணமணக்கும் பன்னீர் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.! -
ஜூலை 20-ல் சூரியன் நட்சத்திரத்தை மாற்றுவதால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இந்த 5 காலை பழக்கங்கள் இதய நோயின் அபாயத்தை அதிகரிக்குமாம்.. உஷார்.. -
400 ஆண்டுக்கு முன் தோன்றி இப்போதும் செயல்பாட்டில் உள்ள உலகின் முதல் வங்கி எது? அதன் முதலாளி யார் தெரியுமா? -
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 02 முதல் இந்த 4 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
மசாலா மினி இட்லி - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க..
இந்த மாதிரியான மருந்துகளை சாப்பிட்டதும் வெயில்-ல போகாதீங்க.. இல்லன்னா ஆபத்தாயிடும்!
Medication and Sun Sensitivity: சூரிய ஒளியில் செல்வது நம்மளுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளித்தாலும், சில வகை மருந்துகளை எடுத்துக் கொண்டு சூரிய ஒளியில் செல்லக் கூடாது என்பது உங்களுக்கு தெரியுமா. ஆமாம் சில வகை மருந்துகள் சூரிய ஒளியில் அதிக உணர்திறன் வாய்ந்தது.
இவை சூரிய ஒளியுடன் வினைபுரிந்து நமக்கு பல்வேறு இன்னல்களை உண்டாக்குகிறது. அதே மாதிரி இந்த மருந்துகளை சூரிய ஒளி படும் இடங்களில் ஒருபோதும் வைக்க கூடாது. சூரிய ஒளி அந்த மருந்தின் செயல்பாட்டை மாற்றி உங்களுக்கு பக்க விளைவுகளை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.

அதே சில வகை மருந்துகள் உங்கள் சருமத்தில் போட்டோ சென்ஸ்டிவிட்டியை உருவாக்கும். அதாவது உங்கள் சருமம் எளிதாக சூரிய ஒளியில் அதிக உணர்திறன் வாய்ந்ததாக மாறும். சிறிய அளவு சூரிய ஒளியில் கூட அதிக தீக்காயங்களை அது ஏற்படுத்தலாம்.
சொறி, சருமம் சிவத்தல், எரிச்சல் போன்ற பல்வேறு பிரச்சினைகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம். எனவே எந்த மாதிரியான மருந்துகளை எடுத்துக் கொண்டு சூரிய ஒளியில் செல்லக் கூடாது என்பதை பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
டாக்ஸிசைக்ளின் மற்றும் சிப்ரோஃப்ளோக்சசின் போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகள்
டெட்ராசைக்ளின் ஆன்டி பயாடிக் மருந்துகள் , குறிப்பாக டாக்ஸிசைக்ளின் (விப்ராமைசின், ஓரேசியா) போன்ற மருந்துகள் சூரிய ஒளியில் உணர்திறன் வாய்ந்தது. டெட்ராசைக்ளின்களை எடுத்துக் கொள்ளும்போது சூரிய ஒளி படுவதால் விரல் நகங்கள் அல்லது கால் நகங்கள் போன்றவை நக படுக்கையில் இருந்து பிரிந்து விட வாய்ப்பு உள்ளது.
இந்த மருந்துகள் சூரிய ஒளியில் அதிக உணர்திறன் வாய்ந்ததாக செயல்படுகிறது. எனவே இந்த மருந்தை நிறுத்திய பிறகு 10-14 நாட்களில் சூரிய ஒளி உணர்திறன் அறிகுறிகள் குறைந்து விடும். ஃப்ளோரோக்வினொலோன்கள் (குயினோலோன்கள்) , சிப்ரோஃப்ளோக்சசின் (சிப்ரோ) போன்றவையும் சூரிய ஒளியில் அதிக உணர்திறன் வாய்ந்த ஆன்டி பயாடிக்குகள் ஆகும். எனவே இந்த மருந்துகளை எடுத்துக் கொண்ட பிறகு சூரிய ஒளியில் செல்லாமல் இருப்பது நல்லது.
நாப்ராக்ஸன் போன்ற ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள்
ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் (NSAIDகள்), நாப்ராக்ஸன் (Aleve, Naprosyn) போன்றவை மிகவும் பொதுவான வலி நிவாரணிகளாகும். இந்த மருந்துகளும் சூரிய ஒளியுடன் வினைபுரியக் கூடியவை. நாப்ராக்ஸன் மருந்துகளை நீங்கள் எடுத்துக் கொண்டு வெளியே செல்லும் போது எரிச்சல் மற்றும் சிறிய கொப்பளங்கள் தோன்றலாம். டிக்ளோஃபெனாக் (காம்பியா, கேடாஃப்லாம்) போன்ற மருந்துகள் சூரிய ஒளியில் வினைபுரிந்து நகங்களை நக படுக்கையில் இருந்து பிரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் அரிக்கும் தோலழற்சி ஏற்பட வாய்ப்புள்ளது.
அக்குடேன் (ஐசோட்ரெட்டினோயின்)
அக்குடேன் (ஐசோட்ரெட்டினோயின்) மருந்து சூரிய ஒளியில் செல்லும் போது தோலை அதிக உணர்திறன் வாய்ந்ததாக மாற்றுகிறது. இதனால் நீங்கள் நிறைய சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
ரெடின்-ஏ (ட்ரெட்டினோயின்)
ரெடின்-ஏ (ட்ரெட்டினோயின்) இந்த மருந்து முகப்பருவிற்கு பயன்படுத்தப்படும் மருந்தாகும். இது பக்க விளைவுகளையும் சூரிய உணர்திறன்களையும் உண்டாக்குகிறது. இந்த மருந்தால் உங்கள் சருமம் சூரிய ஒளியில் எரிய வாய்ப்பு உள்ளது.
ஹைட்ரோகுளோரோதியாசைடு போன்ற தியாசைட் டையூரிடிக்ஸ் மருந்துகள்
தியாசைட் டையூரிடிக்ஸ், குறிப்பாக ஹைட்ரோகுளோரோதியாசைடு (HCTZ) வேறுபட்ட எதிர்வினைகளை உண்டாக்குகிறது. இந்த மருந்தால் வெயிலுக்கு நீங்கள் கடுமையான தாக்குதலை சந்திக்க நேரிடலாம். அரிக்கும் தோலழற்சி, தடிப்புகள் போன்றவை ஏற்படும். மருந்தை நிறுத்திய பிறகு கூட இந்த பிரச்சினை சில வாரங்களுக்கு நீடிக்கும்.
சில நீரிழிவு நோய் மருந்துகள்
சல்ஃபோனிலூரியாக்கள், கிளைபுரைடு மற்றும் கிளிபிசைடு போன்ற மருந்துகள் கொப்புளங்களையும் சரும திட்டுகளையும் சூரிய ஒளியில் ஏற்படுத்துகிறது. மருந்துகளை நிறுத்திய பிறகு வாரங்கள் முதல் மாதங்கள் வரை இந்த அறிகுறிகள் நீடிக்கும்.
டிரைசைக்ளிக் ஆண்டிடிரஸண்ட்ஸ்
அமிட்ரிப்டைலைன் போன்ற ட்ரைசைக்ளிக் ஆண்டிடிரஸண்ட்ஸ் (TCAக்கள்) போன்ற மருந்துகளை எடுத்துக் கொண்டு வெளியே செல்லும் போது தோல் சிவத்தல், பரவலான தடிப்புகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. தோலில் சாம்பல் மற்றும் ஊதா நிற மாற்றத்தை ஏற்படுத்துகிறது
பழைய ஆண்டிஹிஸ்டமின்கள்
ஆண்டிஹிஸ்டமின்கள் சூரிய உணர்திறன் வாய்ந்தது. அதே மாதிரி ப்ரோமெதாசின் என்ற குமட்டல் மருந்தை எடுத்துக் கொண்டு சூரிய ஒளியில் செல்லும் போது உங்களுக்கு உடம்பு முழுவதும் தடிப்புகளை ஏற்படுத்தும். மருந்தை நிறுத்திய பிறகு கூட இந்த பிரச்சினை சில வாரங்களுக்கு நீடிக்கும்.
மெத்தோட்ரெக்ஸேட் மருந்துகள்
மெத்தோட்ரெக்ஸேட் மருந்துகள் ஆட்டோ இம்யூன் கோளாறுகள் மற்றும் புற்றுநோய்க்கு பரிந்துரைக்கப்படுகிறது. இது சூரிய ஒளியில் சருமம் எரிந்து போவதை உண்டாக்குகிறது. எனவே இந்த மருந்தை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல வேண்டாம்.
அமியோடரோன்
அமியோடரோன் (பேசரோன்) என்பது அரித்மியா (அசாதாரண இதயத் துடிப்பு) சிகிச்சைக்கு கொடுக்கும் மருந்தாகும். இது அதிகளவில் சூரிய ஒளியில் வினைபுரிந்து நீலம் மற்றும் சாம்பல் தோல் நிறமாற்றத்திற்கு வழி வகுக்கிறது.
சூரிய ஒளி உணர்திறன் மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது எப்படி உங்களை பாதுகாக்க வேண்டும்?
* முதலில் மருந்துகளை எடுத்துக் கொண்ட பிறகு சூரிய ஒளியில் நேரடியாக செல்வதை தவிருங்கள்.
* சன்ஸ்க்ரீன் மற்றும் சூரிய ஒளி பாதுகாப்பு ஆடைகளை அணியுங்கள்.
* நிறைய தண்ணீர் குடியுங்கள். சரும பிரச்சனைகளை கையாள உடனடியாக மருத்துவர்களை அணுகுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications