Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க..
எச்சரிக்கை! காலையில இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப நுரையீரல் புற்றுநோய் இருக்குன்னு அர்த்தமாம்...
Lung Cancer In Tamil: உலகளவில் இரண்டாவதாக அதிக மரணத்தை உண்டாக்கும் ஒரு கொடிய நோய் தான் புற்றுநோய். இந்த புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. அது புற்றுநோய் தாக்கும் பகுதியைப் பொறுத்தது. புற்றுநோயானது உடலில் உள்ள செல்களின் கட்டுபாடற்ற வளர்ச்சியைக் குறிக்கிறது.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஆண்கள் பெண்கள் என இருபாலரையும் தாக்கும் குறிப்பிட்ட புற்றுநோய்கள் உள்ளன. அதில் நுரையீரல், புரோஸ்டேட், பெருங்குடல், வயிறு மற்றும கல்லீரல் புற்றுநோய் போன்றவை ஆண்களைத் தாக்கும் பொதுவான புற்றுநோய்களாகும். அதே சமயம் மார்பகம், பெருங்குடல், நுரையீரல், கர்ப்பப்பை மற்றும் தைராய்டு புற்றுநோய் போன்றவை பெண்களை தாக்கும் புற்றுநோய்களாகும்.

ஆனால் நுரையீரல் புற்றுநோயால் ஆண், பெண் என இருபாலருமே பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளதால், இந்த வகை புற்றுநோயில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அதுவும் நுரையீரல் புற்றுநோயை ஒருவர் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை மேற்கொண்டால், உயிர் தப்பலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
அமைதியாக ஆளை கொல்லும் நோய்
நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிவது மிகவும் கடினம். ஏனெனில் இவை வெளிக்காட்டும் அறிகுறிகள் அனைத்தும் தினந்தோறும் நாம் சந்திக்கும் சாதாரண உடல்நல பிரச்சனைகளின் அறிகுறிகளை ஒத்தது.நிபுணர்களின் கூற்றுப்படி, நுரையீரல் புற்றுநோய் அமைதியாக இருந்து ஆளைக் கொல்லக்கூடிய கொடிய நோய் மற்றும் இதற்கு ஆரம்ப நிலைகளில் எவ்வித அறிகுறிகளும் இல்லை.
அதனால் தான் நுரையீரல் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது கடினமாக உள்ளது. மேலும் நுரையீரல் புற்றுநோயானது உடலின் பிற பகுதிகளுக்கு பரவ ஆரம்பிக்கும் போது தான் அது அறிகுறிகளை வெளிக்காட்டத் தொடங்கும். இருப்பினும் நுரையீரல் புற்றுநோயின் எச்சரிக்கை அறிகுறிகளை முன்கூட்டியே தெரிந்து கொண்டால், சிகிச்சை மேற்கொள்ள சற்று எளிதாக இருக்கும் அல்லவா?
காலையில் வெளிப்படும் அறிகுறிகள்
நுரையீரல் புற்றுநோய் ஒருவருக்கு இருந்தால், அது காலையில் எழும் போதே ஒருசில எச்சரிக்கை அறிகுறிகளை வெளிக்காட்டும். அதுவும் அந்த அறிகுறிகள் ஒருவர் காலை தூங்கி எழுந்ததுமே தென்படும். இந்த அறிகுறிகளை புறக்கணித்தால், பின் மிகவும் முற்றிய நிலையில் தான் கண்டறிய முடியும். இப்போது காலையில் ஒருவர் எந்த அறிகுறிகளை உணர்ந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்பதைக் காண்போம்.
1. காய்ச்சல்
நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அடிக்கடி காலையில் எழுந்ததும் காய்ச்சலை சந்திப்பதாக அமெரிக்க தேசிய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
பொதுவாக உடலில் ஏதேனும் தொற்றுகள் ஏற்பட்டால் காய்ச்சல் வரும். அதுவும் ஒருவர் தொடர்ந்து காலை வேளையில் காய்ச்சலை உணர்ந்தால், நுரையீரல் புற்றுநோய் இருக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
2. அதிகப்படியான வியர்வை
தூங்கும் போது அதிகமாக வியர்ப்பது மற்றும் காலை தூங்கி எழும் போது அதிகப்படியான வியர்வையை அனுபவிப்பது போன்றவை நுரையீரல் புற்றுநோயின் எச்சரிக்கை அறிகுறிகளுள் ஒன்று.
ஏனெனில் உடலானது அதிகப்படியான வெப்பநிலையில் இருக்கும் போது, உடலை குளிர்விக்க அதிகமாக வியர்க்கும். எனவே உங்களுக்கு காரணமின்றி இந்த மாதிரியான அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவரை சந்தியுங்கள்.
3. தொடர் வறட்டு இருமல்
நீங்கள் 3 வாரங்களுக்கும் மேலாக சளியின்றி வெறும் வறட்டு இருமலை மட்டும் சந்தித்தால், அது ஒரு நல்ல அறிகுறி அல்ல. இப்படி இருந்தால், புற்றுநோய் செல்கள் நுரையீரலில் வளர்ந்து கொண்டிருக்கிறது, உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்று அர்த்தம்.
நுரையீரல் புற்றுநோயால் ஏற்படும் இருமல் பொதுவாக வறட்டு இருமலாகத் தான் இருக்கும். தரவுகளின் படி, குறைந்தது 65 சதவீத நுரையீரல் புற்றுநோயாளில் இம்மாதிரியான வறட்டு இருமல் இருந்தது. எனவே வறட்டு இருமலையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
4. இரத்தம் கலந்த சளி
நுரையீரல் புற்றுநோயின் 4 ஆவது மிகவும் முக்கியமான எச்சரிக்கை அறிகுறி தான், இரத்தம் கலந்த சளி வெளியேறுவது. அதுவும் கெட்டியான சளியுடன் இரத்தம் கலந்திருக்கும். எனவே நீங்களும் இம்மாதிரியான அறிகுறியை சந்தித்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள நான்கு அறிகுறிகளும் உயிரைப் பறிக்கும் கொடிய நுரையீரல் புற்றுநோயின் எச்சரிக்கை அறிகுறிகளாகும். நீங்கள் இந்த அறிகுறிகளை காலையில் எழுந்ததும் அனுபவித்தால், உங்களுக்கு நுரையீரல் புற்றுநோய் இருக்க வாய்ப்புள்ளது. எனவே உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து ஆரம்பத்திலேயே சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

