Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்! -
சனிப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், எந்த ராசிக்கு ஆபத்தாகவும் இருக்கப்போகுது தெரியுமா?
Nayanthara: இன்ஸ்டாவில் தனது ஃபிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட நடிகை நயன்தாரா!
Nayanthara Fitness Secret: நடிகை நயன்தாரா 20 ஆண்டுகளாக திரைத்துறையில் பயணித்து வருகிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்த நயன்தாரா, ஜவான் என்னும் திரைப்படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்து, பாலிவுட்டிலும் காலடி பதித்துள்ளார். இந்த படமானது நல்ல வெற்றியைப் பெற்றது. நடிகை நயன்தாரா கடைசியாக தமிழில் அன்னப்பூரணி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த படம் எதிர்பார்த்த அளவில் நல்ல வெற்றியைப் பெறவில்லை.
நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தனர். நயன்தாராவிற்கு குழந்தைகள் என்றால் ரொம்ப பிடிக்கும். இரட்டை குழந்தை பிறந்த பின்னரும் நயன்தாரா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ஆரம்ப காலத்தில் சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்டிவ்வாக இல்லாமல் இருந்த நயன்தாரா, ஜவான் படத்திற்கு பின், ஆக்டிவ்வாக உள்ளார். அவ்வப்போது தனது குழந்தைகளுடன் எடுத்து போட்டோக்களை வெளியிட்டு வருவார். வேலை நேரத்தை தவிர மற்ற நேரங்களில் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிட முயற்சிப்பாராம். அடுத்ததாக தமிழில் கவினுடன் சேர்ந்து நயன்தாரா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
39 வயதிலும் நயன்தாரா இவ்வளவு ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கான ரகசியத்தை பலரும் தெரிந்து கொள்ள ஆவல் கொண்டிருப்பீர்கள். இந்நிலையில் சமீபத்தில் நயன்தாரா தனது பிட்னஸிற்கான ரகசியம் குறித்து இஸ்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அது என்னவென்பதைக் காண்போம்.
நயன்தாரா ஆரம்ப காலத்தில் சற்று குண்டாகவே இருந்தார். ஆனால் திரையுலகில் நன்கு சிக்கென்று உடலை பராமரித்து வந்தால் தான் நீடித்திருக்க முடியும் என்பதற்காக நயன்தாரா டயட்டில் இருந்துள்ளார். ஆனால் அப்போது கடுமையான டயட்டை மேற்கொண்டதன் விளைவாக மருத்துவமனையில் எல்லாம் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.
இதுவரை இவர் டயட் என்றால் தனக்கு பிடித்ததை சாப்பிடாமல் இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்ததாகவும், தற்போது டயட் என்பது கலோரிகளை எண்ணுவது அல்ல, மாறாக ஊட்டச்சத்துக்களை எண்ணுவது மற்றும் சரியான அளவுகளில் பலவகையான உணவுகளை உண்பது பற்றியது என்பதை தெரிந்து கொண்டதாகவும் அந்த இன்ஸ்டா போஸ்ட்டில் தெரிவித்துள்ளார்.
டயட் பற்றிய கண்ணோட்டத்தை தனது ஊட்டச்சத்து நிபுணர் மும்ம் கனோரிவால் மாற்றியுள்ளதாகவும், தற்போது தான் ஆரோக்கியமாக இருப்பதற்கும், உடலுக்கு வேண்டிய சத்துக்களை சரியாக பெறுவதற்கு தேவையான சரியான உணவுத் திட்டத்தை அமைத்து கொடுத்ததற்கும் நன்றி தெரிவித்துள்ளார். இந்த ஊட்டச்சத்து நிபுணரின் சிறப்பான உணவுத் திட்டமானது வீட்டில் சமைக்கும் உணவின் மீதான காதலை அதிகரித்தது என்றும், ஜங்க் உணவுகளின் மீதான நாட்டம் குறைந்தது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மொத்தத்தில் நமது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு உணவு முக்கியமானது. நாம் என்ன சாப்பிடுகிறோமோ அது நமது ஆரோக்கியத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக நம்புவதாகவும், தனது அனுபவத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தை தழுவ உங்களை ஊக்குவிப்பதாக நம்புவதாகவும் தெரிவித்திருந்தார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











