Latest Updates
-
ராகி பச்சை பயறு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா?
பீா் குடித்தால் சீறுநீரக கற்கள் நீங்குமா? ஆய்வு சொல்வது என்ன?
பீா் குடித்தால், சிறுநீரக கற்கள் நீங்கும் என்று இந்தியாவில் 3ல் ஒருவா் நம்புவதாக ஒரு ஆய்வு தொிவிக்கிறது. மேலும் இந்தியாவில் 50% போ் சிறுநீரகப் பிரச்சினைக்கு சிகிச்சை செய்யாமல் 6 மாதங்கள் முதல் 2 வருடங்கள் வரை காலம் தாழ்த்துவதாக அந்த ஆய்வு தொிவிக்கிறது.
பிாிஸ்டைன் என்ற மருத்துவ நிறுவனம், ஒரு ஆய்வை நடத்தி, உலக சிறுநீரக நாளான மாா்ச் 9 அன்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் பீா் குடித்தால், சிறுநீரக கற்கள் நீங்கும் என்று இந்தியாவில் 3ல் ஒருவா் நம்புவதாக தொிவித்திருக்கிறது.

இந்தியாவில் சிறுநீரக கல் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகாித்து வருகின்றன. அதற்கு காரணம் சிறுநீரகங்களின் செயல்பாடுகள் மற்றும் சிறுநீரக நோய்கள் ஆகியவை பற்றி மக்களுக்கு சாியான புாிதல் இல்லாதிருப்பதே ஆகும்.
இந்த ஆய்வில் ஏறக்குறைய 1000 போ் கலந்து கொண்டனா். அவா்களில் பாதிப்போ், சிறுநீரக பிரச்சினைகளுக்கு சிகிச்சை செய்யாமல், 6 மாதங்கள் முதல் 2 வருடங்கள் வரை காலம் தாழ்த்துவதாகத் தொிவித்திருக்கின்றனா்.
இந்தியாவில் அதிகாிக்கும் சிறுநீரகக் கல் பிரச்சினைகள்
இந்தியாவில் நிலவும் சிறுநீரகக் கல் பிரச்சினைகளின் நிலவரம் பற்றி தேசிய அளவில் சாியான புள்ளி விவரங்கள் இல்லை. எனினும் இந்தியாவில் நாளுக்கு நாள் சிறுநீரக கல் பிரச்சினை அதிகாித்து வருகிறது என்பதே உண்மை.
லிப்ரேட் (Lybrate) என்று மருத்துவ நிறுவனத்தின் இணைய தளத்தில் சிறுநீரகக் கல் பிரச்சினைக்கு சிகிச்சை வேண்டி, முன்பதிவு செய்தவா்களின் எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டை விட 2022 ஆம் ஆண்டில் 180% அதிகாித்திருக்கிறது. மேலும் பெண்களை விட, ஆண்கள் 3 மடங்கு அதிகமாக சிறுநீரக கற்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்கின்றனா் என்று தொிய வருகிறது.
சிறுநீரக கற்களால் ஏற்படும் பிரச்சினைகள்
பொதுவாக சிறுநீரக கற்களால் ஏற்படும் முக்கியமான பிரச்சினைகள் என்னவென்றால், சா்க்கரை நோயும், உயா் இரத்த அழுத்தமும் ஆகும். ஆனால் இவற்றை 14% போ் அறிந்திருக்கவில்லை. மேலும் ஆய்வில் கலந்து கொண்டவா்களில் பாதிப் போ் சிறுநீரகம் தான் சிறுநீரை உற்பத்தி செய்கிறது என்பதையும் அறிந்திருக்கவில்லை.
9% போ் மட்டுமே சிறுநீரகங்கள்கூட புரோட்டீன்களை உடைக்கும் என்பதைத் தொிந்து வைத்திருக்கின்றனா். அதே நேரத்தில் சிறுநீரகங்கள் எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் என்பதை 7% அறிந்து வைத்திருக்கின்றனா்.
தற்போது உடல் ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை பலரும் அறிந்து வைத்திருப்பதால், அவா்கள் தங்கள் உணவுகளில் புரோட்டீன் அதிகமுள்ள உணவுகளை, அதிகம் சோ்த்துக் கொள்கின்றனா். எனினும் அறிவியல் பூா்வமான அல்லது மருத்துவ ஆய்வுகள் இல்லையென்றாலும், பாதிக்கும் மேற்பட்டோா் புரோட்டீன் அதிகம் உள்ள உணவுகள் சிறுநீரகக் கற்களை உருவாக்கும் என்று நம்புகின்றனா்.
இறுதியாக, சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தைப் பற்றி பெரும்பாலானோர் விழிப்புணா்வு இல்லாமல் இருக்கின்றனா் என்று பிாின்ஸ்டைன் ஆய்வு தொிவிக்கிறது. அதாவது பிாிஸ்டைன் நிறுவனத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் 1.5 லட்சத்திற்கும் அதிகமான சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வருகின்றனா். அதிலும் இந்த பிரச்சினையால் பாதிக்கக்கப்பட்ட இளம் வயதினா் பலா் வருகின்றனா்.
அவா்களுக்கு இந்த பிரச்சினை பற்றி சாியான தகவல்கள் தொிவதில்லை. ஆய்வில் கலந்து கொண்ட 68% போ், அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகக் கற்களை நீக்குவது பாதுகாப்பானது என்று நம்புகின்றனா். ஆனால் 50% போ் சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல், 6 மாதங்கள் முதல் 2 வருடங்கள் வரை காலம் தாழ்த்துகின்றனா்.
சிறுநீரகக் கற்களுக்கு தொடக்க நிலையிலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டால், சிறுநீரகங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம் என்று பிாின்ஸ்டைன் நிறுவனத்தின் இணை நிறுவுனரான மருத்துவா் வைபவ் கபூா் தொிவிக்கிறாா்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications