Latest Updates
-
மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன்: மே மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் அபார வளர்ச்சியை காண்பாங்க.. -
அவரைக்காய் வாங்குனா சாம்பார் வைக்காம இந்த மாதிரி கூட்டு செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
வெயிலுக்கு வாழைத்தண்டை இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், உடல் சூடும் குறையும்.. -
அரசியலில் பெரிய தலைவராக வரும் அதிர்ஷ்டமும், தகுதியும் உள்ள 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
வெயிலால் நீர்ச்சத்து குறைபாடு வரக்கூடாதா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 3 விதைகளை நீரில் ஊற வெச்சு சாப்பிடுங்க.. -
பாபா வங்கா கணிப்பு படி 2026 முதல் 2030 வரை உலகில் என்னென்ன மோசமான சம்பவங்கள் நடக்கப்போகுது தெரியுமா? -
செவ்வாயால் உருவாகும் சக்திவாய்ந்த ருச்சக யோகம்: மே மாதம் இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டபோகுது -
2 வெள்ளரிக்காயும், 1 கப் ரவையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போறாங்களாம் -
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 8 மாதம் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..
இவ்வளவு நேரம் போன் பேசுறீங்களா? அப்ப உங்களுக்கு இரத்த அழுத்தமோடு பெரிய ஆபத்து எல்லாம் வருமாம்!
High Blood Pressure In Tamil: இன்றைய நாளில் வளர்ந்து வரும் முக்கிய உடல்நல பிரச்சனைகளில் உயர் இரத்த அழுத்தமும் ஒன்று. சில சமயங்களில் இது இதய நோய் மற்றும் மாரடைப்பை ஏற்படுத்தலாம். ஓர் புதிய ஆய்வு, மொபைல் போனில் அதிகமாகப் பேசுவது உயர் இரத்த அழுத்த அபாயத்தை அதிகரிக்கும் என்று கூறுகிறது.
இந்தியாவில் 1.2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் மொபைல் போனை பயன்படுத்த்துகிறார்கள். பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள், இந்த சிறிய சாதனங்கள் எவ்வாறு நமது அன்றாட வாழ்வில் இவ்வளவு பெரிய பகுதியாக மாறியது என்பதற்கான காரணத்தை விளக்குகிறது. இருப்பினும், அதிகப்படியான மொபைல் போன் உபயோகத்தால் ஏற்படும் உடல்நல அபாயங்களையும் நாம் புறக்கணிக்கக் கூடாது.

மே 17 அன்று வர இருக்கின்ற உலக உயர் இரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு ஓர் ஆய்வு வெளியிடப்பட்டது. அந்த ஆய்வு, வாரத்திற்கு 30 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் மொபைல் போனில் பேசுவதால் ஏற்படும் பக்கவிளைவுகளை மதிப்பீடு செய்துள்ளது. நீங்கள் நீண்ட நேரம் போன் பேச விரும்பினால், நீங்கள் உயர் இரத்த அழுத்த பிரச்சனையால் பாதிக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தொலைபேசிகளில் இருந்து வெளிப்படும் குறைந்த அளவிலான கதிரியக்க அதிர்வெண் ஆற்றல், இரத்த அழுத்த அதிகரிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகளவில் 30 முதல் 79 வயதுக்குட்பட்ட 1.3 பில்லியன் மக்களுக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளது. இது மாரடைப்பு மற்றும் பக்கவாதத்திற்கான ஒரு முக்கிய ஆபத்து காரணியாகும். அத்துடன் மரணத்திற்கும் முக்கிய காரணமாக இருக்கிறது.
உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் காரணமாக ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வு இருக்க வேண்டியது முக்கியமானது. ஐரோப்பிய இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியின் படி, 30 நிமிடங்களுக்கும் அதிகமாக தொலைபேசியில் பேசுபவர்களுடன் ஒப்பிடும்போது, புதிதாகத் தொடங்கும் உயர் இரத்த அழுத்தத்தின் அபாயம் 12 சதவிகிதம் அதிகரிக்கும் என்று தெரிவிக்கிறது.
இந்த ஆய்வு சீனாவின் குவாங்சோவில் உள்ள தெற்கு மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்டது. 37 மற்றும் 73 வயதுக்குட்பட்ட 2,12,046 பங்கேற்பாளர்களிடம் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. காலப்போக்கில், குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் நல்வாழ்வில் தொலைபேசி பயன்பாட்டின் பக்க விளைவுகள் பற்றியும் நாம் அறிந்திருக்க வேண்டும்.
நீண்ட நேரம் போனில் பேசுவது நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் சில பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அவ்வாறு ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னவென்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
தசை பதற்றத்தை அதிகரிக்கிறது
மிகவும் பொதுவான பக்க விளைவுகளில் ஒன்று கழுத்து, தோள்கள் மற்றும் கைகளில் தசை பதற்றத்தை ஏற்படுத்துவது. தொலைபேசியில் நீண்ட நேரம் பேசுவது இந்த தசைகளை கஷ்டப்படுத்தி, அசௌகரியம் மற்றும் தலைவலிக்கு வழிவகுக்கும். இதனால், உங்களுக்கு தசை பதற்றம் அதிகரிக்கலாம்.
காது வலி
மொபைல் போனில் அதிகம் பேசுவதால் ஏற்படும் மற்றொரு பக்க விளைவு காது வலி. தொலைபேசியை காதுக்கு மிக அருகில் வைத்திருந்தாலோ அல்லது ஒலி மிகவும் சத்தமாக இருந்தாலோ இது நிகழலாம். அதனால், அளவாக அல்லது அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மொபைல் போனை பயன்படுத்த வேண்டும்.
மேலும், இயர்போன்கள் அல்லது ஹெட்ஃபோன்களை தொடர்ந்து அதிகம் பயன்படுத்துவதால் டின்னிடஸ் போன்ற காது பிரச்சனைகள் ஏற்படலாம். இது மன உளைச்சலை ஏற்படுத்துவதோடு, ஒரு நபரின் வாழ்க்கைத் தரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தையும் ஏற்படுத்தலாம். அதிக செல்போன் பயன்பாடு கவலை, மனச்சோர்வு மற்றும் தூக்கமின்மை பிரச்சனைக்கு வழிவகுக்கும்.
கண் அழுத்தத்தை ஏற்படுத்தலாம்
நீண்ட நேரம் செல் ஃபோன் திரையைப் பார்ப்பது கண் அழுத்தத்தை ஏற்படுத்தும். இது கண் வறட்சி, மங்கலான பார்வை மற்றும் தலைவலிக்கு வழிவகுக்கும். மேலும், திரையில் அதிக நேரம் செலவிடுவது, உங்கள் உடல் செயல்பாடுகளை குறைக்கிறது. இது உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.
கவனத்தை பாதிக்கிறது
வாகனம் ஓட்டுதல் அல்லது இயந்திரங்களை இயக்குதல் போன்ற பிற பணிகளைச் செய்யும்போது நீங்கள் தொலைபேசியில் பேசினால், அது கவனத்தை சிதறடிக்கும். இதனால் ஆபத்தான நிகழ்வுகள் ஏதும் ஏற்படலாம். நீங்கள் வாகனம் ஓட்டுபவராக இருந்தால், விபத்துகளைத் தவிர்க்க சாலையில் கவனம் செலுத்த மொபைல் போனை பயன்படுத்தக் கூடாது. இது சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம்.
மன அழுத்தம்
உணர்ச்சிவசப்பட்ட அல்லது அழுத்தமான தொலைபேசி உரையாடல்கள் மன அழுத்தத்தை அதிகரிக்க வழிவகுக்கும். இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். நாம் அனைவரும் ஏற்கனவே அறிந்தபடி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிக்க நமது மன அழுத்தத்தை நிர்வகிக்க வேண்டியது மிக அவசியம்.
இறுதிக்குறிப்பு
அதிகப்படியான ஃபோன் பயன்பாடு மேலே குறிப்பிடப்பட்டுள்ள பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும். ஆனால் இடைவெளிகளை எடுத்து, நல்ல தோரணையை பயிற்சி செய்வதன் மூலம் அவற்றைத் தணிக்க முடியும். மொபைல் போன் பேசுவதால் உங்களுக்கு தொடர்ந்து வலி அல்லது அசௌகரியம் ஏற்பட்டால், உடனே மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.
ஃபோன் உரையாடல்கள் வசதியாகவும், தகவல்தொடர்புக்கு அவசியமாகவும் இருக்கும் போது, ஆபத்தைக் குறைக்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது முக்கியம். முடிந்தளவு திரை நேரத்தை குறைப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications













