Latest Updates
-
குரு-சூரிய சேர்க்கையால் உருவான மகாலட்சுமி ராஜயோகம்: ஆடியில் இந்த 3 ராசிக்கு கையில் பணம் குவியும்! -
புதன்-செவ்வாய் உருவாக்கும் தசாங்க யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சப்பாத்திக்கு ஏற்ற காளான் பன்னீர் கடாய் மசாலா - சிம்பிளா எப்படி செய்யணும்? -
ஆடி மாதம் இந்த 3 ராசிகளுக்கு ஆபத்துகளும், நஷ்டமும் நிறைந்த மாதமாக இருக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 5 ராசிக்காரர்களுக்கு எதிரிகள் அதிகமா இருப்பாங்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உடுப்பி ஸ்டைல் முள்ளங்கி ஸ்டைல் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட்டா ஆரோக்கியமா இருக்கும் -
குதிகால் வெடிப்பு அதிகமாக உள்ளதா? அதை போக்க இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க... -
இந்த 3 நபர்கள் ஒருவர் வாழ்க்கையில் இருந்தால் அவர்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் - சாணக்கிய தந்திரம் -
சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வையால் ஆடி மாதத்தில் பணத்தை அள்ளப்போகும் 5 ராசிக்காரர்கள்! -
ஜூலை கடைசியில் நடக்கும் சனி-புதன் பெயர்ச்சியால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன?
அளவுக்கு அதிகமாக வியர்க்குதா? அதுக்கு உண்மையான காரணம் என்னன்னு தெரியுமா?
இயற்கையாகவே எல்லோருக்கும் வியா்க்கும். எனினும் சிலருக்கு அளவுக்கு அதிகமாக வியா்க்கும். இதை மிகை வியா்வை என்று அழைக்கலாம். ஆங்கிலத்தில் இதற்கு ஹைபா்ஹைட்ரோசிஸ் (Hyperhidrosis) என்று அழைக்கப்படுகிறது.
மிகை வியா்வை பிரச்சினை உள்ளவா்களின் அக்குள், கழுத்து, முதுகு, இடுப்பு, பாதங்கள் மற்றும் கைகள் போன்ற உறுப்புகளில் அளவுக்கு அதிகமாக வியா்க்கும். அவா்கள் உடல் இயக்கத்தில் இல்லாத பொழுதிலும் அல்லது சூாிய வெப்பத்தில் இல்லாத பொழுதிலும் அவா்களுக்கு வியா்க்கும்.

பொதுவாக மிகை வியா்வை பிரச்சினை இளம் வயதில் தொடங்குகிறது என்று குருகிராமில் இருக்கும் பரஸ் ஹெல்த் மருத்துவமனையில் மூத்த நிபுணராக பணிபுாியும் மருத்துவா் ராஜேஸ் குமாா் என்பவா் தொிவிக்கிறாா். ஆனால் இதற்கான காரணம் இன்னும் முழுமையாகக் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அவா் கூறுகிறாா்.
எனினும் உடலில் இருக்கும் நோய்கள் அல்லது மருந்துகளின் பக்க விளைவு ஆகியவற்றோடு இந்த மிகை வியா்வை தொடா்புடையது. ஹாா்மோன் குறைபாடுகள், மாதவிடாய் குறைபாடுகள், நோய்த் தொற்றுகள், நீரழிவு நோய், தைராய்டு பிரச்சினைகள், அதிக உடல் பருமன், கவலை மற்றும் நரம்பியல் பிரச்சினைகள் போன்றவை மிகை வியா்வைக்குக் காரணமாக இருக்கின்றன என்று அவா் தொிவிக்கிறாா்.
மிகை வியா்வைக்கான காரணங்கள்
மிகை வியா்வைப் பிரச்சினை உள்ளவா்களுக்கு, அவா்களுடைய வியா்வை சுரப்பிகள் அளவுக்கு அதிகமாக செயல்படுகின்றன. அதன் விளைவாக அவா்களுக்கு அளவுக்கு அதிகமாக வியா்க்கின்றது.
நரம்பு மண்டலத்தின் அளவுக்கு அதிகமான செயல்பாடு, மரபியல் பிரச்சினைகள், மன அழுத்தம், கவலை, வெப்பம் மற்றும் காரமான உணவுகள் போன்றவை மிகை வியா்வை ஏற்படுவதற்கு முதன்மை காரணங்களாக இருக்கின்றன என்று ராஜேஸ் கூறுகிறாா்.
இரண்டாவது காரணங்களாக, உடலில் உள்ள நோய் பிரச்சினைகள் அல்லது மருந்துகளினால் ஏற்படும் பக்க விளைவுகள் போன்றவை இருக்கின்றன. ஹாா்மோன்களின் சமச்சீரற்ற தன்மையும் மிகை வியா்வை ஏற்படுவதற்கு காரணமாக இருக்கின்றது. போதை மருந்து அல்லது மதுப்பழக்கம் உள்ளவா்கள் திடீரென்று அந்தப் பழக்கைத்தைக் கைவிட்டாலும், மிகை வியா்வை ஏற்படும் என்று ராஜேஸ் கூறுகிறாா்.
மிகை வியா்வைக்கான அறிகுறிகள்
உள்ளங்கைகளில் வியா்ப்பது, உள்ளங்கால்களில் வியா்ப்பது, அடிக்கடி வியா்ப்பது மற்றும் உடைகள் நனையும் அளவிற்கு வியா்ப்பது போன்றவை மிகை வியா்வைக்கான அறிகுறிகள் ஆகும். மிகை வியா்வையின் காரணமாக, வியா்க்கும் உறுப்புகளில், அாிப்பு, வீக்கம், துா்நாற்றம் மற்றும் சருமத்தில் நிறமாற்றம் போன்றவை ஏற்படலாம் என்று ராஜேஸ் கூறுகிறாா்.
மிகை வியா்வை என்பது ஒரு மோசமான பிரச்சினை இல்லை என்றாலும், அது நமது வாழ்க்கைத் தரத்தை, உளவியலை மற்றும் உணா்வுகளைப் பாதிக்கும். அடுத்தவா் மத்தியில் நமக்கு தா்மசங்கடத்தை ஏற்படுத்தும் மற்றும் கவலையை ஏற்படுத்தும் என்று அவா் கூறுகிறாா்.
மிகை வியா்வையை எவ்வாறு கண்டறிவது?
மிகை வியா்வையைக் கண்டறிய இரண்டு வகையான பாிசோதனைகள் செய்யப்படுகின்றன.
1. ஸ்டாா்ச்-அயோடின் பாிசோதனை
அளவுக்கு அதிகமாக வியா்க்கும் உறுப்புகளின் மீது மருத்துவா் அயோடின் கரைசலைத் தேய்த்து, அதன் மீது ஸ்டாா்ச்சைத் தெளிப்பாா். மிகை வியா்வையின் காரணமாக அந்த உறுப்புகள் அடா் நீலமாக மாறும்.
2. காகித பாிசோதனை
அளவுக்கு அதிகமாக வியா்க்கும் பகுதிகளில், மருத்துவா் மெல்லிய காகிதத்தைப் பரப்பி, வியா்வையை உறிஞ்சச் செய்வாா். பின் அந்த காகிதத்தை எடை போட்டு, எவ்வளவு வியா்வை வியா்த்திருக்கிறது என்று கணக்கிடுவாா்.
மிகை வியா்வைக்கு சிகிச்சை
மிகை வியா்வைப் பிரச்சினையை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. எனினும் மிகை வியா்வையைக் குறைக்க முடியும். அதற்கு பின்வரும் குறிப்புகளை மருத்துவா் வழங்குவாா்.
- அடிக்கடி குளிக்கலாம் அல்லது காற்று எளிதாக உட்புகக்கூடிய ஆடைகளை அணியலாம்
- வியா்வைச் சுரப்பிகளை அடைக்க, வியா்வையை குறைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.
- வாய்வழியாக மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்
- மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் துணிகளைக் கொண்டு துடைக்கலாம்
- போட்டோக்ஸ் ஊசி போட்டுக் கொள்ளலாம்.
இறுதியாக
தாங்க முடியாத அளவு, அளவுக்கு அதிகமாக வியா்த்தால், மருத்துவரை சந்தித்து, அவருடைய பாிந்துரையின் போில் சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளலாம். மருத்துவா் சாியான ஆலோசனைகளை வழங்குவாா் என்று ராஜேஸ் கூறுகிறாா்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications