Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் குறைந்த பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நீங்க என்ன செய்யணும்?
பிளேட்லெட்டுகள் உங்கள் எலும்பு மஜ்ஜையில் பரவியிருக்கும் மிகச் சிறிய இரத்த அணுக்கள். நீங்கள் காயத்தால் பாதிக்கப்படும்போது இரத்தத்தை உறைய வைப்பதே இந்த செல்களின் பங்கு.
பிளேட்லெட் என்பது நம் உடலிலுள்ள இரத்தத்தின் முக்கிய கூறுகள். இது தமிழில் இரத்த தட்டுக்கள் என்று அழைக்கப்படுகிறது. உங்கள் இரத்தத்தில் எத்தனை பிளேட்லெட்டுகள் உள்ளன என்பது மிக முக்கியம். குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கை உங்கள் இரத்தப்போக்கு அல்லது கடுமையான இரத்தப்போக்கு அபாயத்தை அதிகரிக்கிறது. அதிகப்படியான இரத்தப்போக்கு உள் அல்லது வெளிப்புறமாக ஏற்படும்போது உங்கள் உயிருக்கே ஆபத்தாகிவிடும். வைரஸ்கள்: மோனோநியூக்ளியோசிஸ், எச்ஐவி, எய்ட்ஸ், தட்டம்மை மற்றும் ஹெபடைடிஸ் போன்ற வைரஸ்கள் உடலிலுள்ள பிளேட்லெட்டுகளின் அளவை குறைக்கலாம். கர்ப்பம், உயரம் அல்லது மருந்தின் பக்க விளைவுகள் ஆகிய காரணங்களால் கூட பிளேட்லெட் அளவு குறைவதற்கான வாய்ப்புள்ளது.

பிளேட்லெட்டுகள் இரத்தத்தின் பாகங்கள், அவை இரத்தம் உறைவதற்கு உதவுகின்றன. அவை சிவப்பு அல்லது வெள்ளை இரத்த அணுக்களை விட சிறியதாக உள்ளன. டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நேரத்தில், உங்களுக்கு டெங்கு காய்ச்சல் வராமல் இருக்க, உங்கள் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான வழிகளை இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பிளேட்லெட்டுகள் என்றால் என்ன?
பிளேட்லெட்டுகள் உங்கள் எலும்பு மஜ்ஜையில் பரவியிருக்கும் மிகச் சிறிய இரத்த அணுக்கள். நீங்கள் காயத்தால் பாதிக்கப்படும்போது இரத்தத்தை உறைய வைப்பதே இந்த செல்களின் பங்கு. உங்களுக்கு அடிபட்டாலோ, கீழே விழுந்தோ, இரத்தப்போக்கு ஏற்படும்போது, ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு, தானாகவே இரத்தம் வெளியேறுவது நின்றுவிடும் என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். அதுதான் பிளேட்லெட்டுகளின் வேலை. காயம் ஏற்பட்டால் இரத்த இழப்பு ஏற்படாமல் அவை நம்மை பாதுகாக்கின்றன.

எவ்வளவு இருக்க வேண்டும்?
ஒரு ஆரோக்கியமான நபரின் பிளேட்லெட் எண்ணிக்கை 100,000 க்கும் அதிகமாக இருக்க வேண்டும் ஆனால் சில நிபந்தனைகள் அல்லது டெங்கு, இரத்த சோகை, புற்றுநோய் போன்ற நோய்கள் பிளேட்லெட் எண்ணிக்கையை குறைக்க வழிவகுக்கும். பிளேட்லெட் எண்ணிக்கை 20,000-க்கும் குறைவாக இருப்பது ஆபத்தானதாகக் கருதப்படுகிறது. ஆதலால், உங்கள் பிளேட்லெட்துகளின் எண்ணிக்கை எவ்வாறு அதிகரிக்கலாம் என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

வைட்டமின் பி12 நிறைந்த உணவுகள்
ஆரோக்கியமான பிளேட்லெட் எண்ணிக்கைக்கு உடலின் பி12 தேவைகளை பூர்த்தி செய்வது முக்கியம். நமது இரத்த அணுக்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் வைட்டமின் பி12 முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, முட்டை, கல்லீரல், கடல் உணவுகள் போன்ற வைட்டமின் பி12 நிறைந்த உணவுகளை உட்கொள்வது உங்கள் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்.

தேங்காய் தண்ணீர்
டெங்கு நோயாளிகளுக்கு அவர்களின் மருத்துவர்களால் தேங்காய் தண்ணீர் பரிந்துரைக்கப்படுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். அதற்குப் பின்னால் ஒரு அறிவியல் காரணம் உள்ளது. 2019 ஆம் ஆண்டு தேசிய மருத்துவ நூலகத்தில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, தேங்காய் நீரை வழக்கமாக உட்கொள்வது நமது இரத்த சிவப்பணுக்கள் மற்றும் ஹீமோகுளோபினில் சாதகமான விளைவைக் கொண்டுள்ளது. பிளேட்லெட்டுகள் மற்றும் ஃபைப்ரினோஜென் அளவுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு, இரத்தப்போக்கு நேரம் குறைதல் மற்றும் தேங்காய் நீரால் உறைதல் நேரம் அதிகரிப்பது ஆகியவை ஆய்வில் தெரியவந்துள்ளது.

பப்பாளி இலை சாறு
பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பப்பாளி இலை சாற்றைப் பயன்படுத்துவது மிகவும் பழமையான வீட்டு வைத்தியமாகும். இது சுகாதார நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. டெங்கு காய்ச்சலிலிருந்து உங்களை பாதுகாக்க, பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்க பப்பாளி இலை சாற்றை தொடர்ந்து பருகுங்கள்.

கிலோய்
கிலோய் ஒரு கொடிவகை செடி. அதன் இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் சாறு பல நன்மைகளை நமக்கு அளிக்கிறது. பப்மெட் சென்ட்ரலில் வெளியிடப்பட்ட 2010 ஆய்வின்படி, கிலோய் அல்லது டினோஸ்போரா கார்டிஃபோலியா இரத்த சுத்திகரிப்புக்கு நல்லது மற்றும் வெள்ளை இரத்த அணுக்கள் (WBC), சிவப்பு இரத்த அணுக்கள் (RBC) மற்றும் ஹீமோகுளோபின் ஆகியவற்றில் நேர்மறையான விளைவைக் கொண்டிருக்கிறது, இது பிளேட்லெட் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் அதிகரிக்கவும் உதவும்.

பெர்ரி
பெர்ரிகளில் குறிப்பாக பாலிபினால்கள் நிறைந்துள்ளன. அவை வைட்டமின் சி போன்ற பிற உயிர்ச்சக்தி கொண்ட பொருட்களையும் கொண்டிருக்கின்றன. தேசிய மருத்துவ நூலகத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, மிதமான அளவு பெர்ரிகளின் நுகர்வு பிளேட்லெட் செயல்பாடு, எச்டிஎல் கொழுப்பு மற்றும் பீபி ஆகியவற்றில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தியது. பெர்ரிகளின் வழக்கமான நுகர்வு இருதய நோய்களைத் தடுப்பதில் ஒரு பங்கைக் கொண்டிருக்கக்கூடும் என்று ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றன.



Click it and Unblock the Notifications