For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க காயம் மூன்று மடங்கு வேகமா குணமாகணுமா? அப்ப இத பண்ணுங்க போதும்...!

வலிகளுக்கு சூடு அல்லது ஐஸ்கட்டிகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கும் முறை பல ஆண்டுகளாக நம் மக்களிடையே இருந்து வருகிறது. ஆனால் எந்த வலிக்கு எதைக்கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற தெளிவு நம்மிடையே இல்லை.

|

வாழ்க்கையில் நாம் பல வலிகளை அனுபவிக்கிறோம், ஒவ்வொரு வலிக்குமென சிறப்பு வைத்தியங்கள் இருக்கிறது. பொதுவாக அனைத்து வலிகளுக்கும் மாத்திரைகளும்,மருந்துகளும் எடுத்துக்கொள்ளும் வழக்கம் நம் அனைவருக்கும் இருக்கிறது. ஆனால் நமது முன்னோர்கள் இவ்வாறு வலிகளை குணமாக்க மருந்துகளை எடுத்திக்கொள்ளவில்லை.

Ice or Heat: What’s Best for Your Pain?

வலிகளுக்கு சூடு அல்லது ஐஸ்கட்டிகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கும் முறை பல ஆண்டுகளாக நம் மக்களிடையே இருந்து வருகிறது. ஆனால் எந்த வலிக்கு எதைக்கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற தெளிவு நம்மிடையே இல்லை. இந்த பதிவில் ந்த வலிக்கு எதனைக் கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுளுக்கு

சுளுக்கு

சுளுக்கு ஏற்பட்ட இடத்திற்கு வெப்பத்தை கொண்டு சிகிச்சை அளிப்பது தவறான யோசனை ஆகும்.எந்தவொரு சுளுக்காகவும், வீக்கமாகவும் இருந்தாலும் அதற்கு வெப்ப சிகிச்சை அளிப்பது அதனை மேலும் மோசமாக்கும். சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் ஐஸ்கட்டி கொண்டு சிகிச்சை அளிப்பது வலியை குறைக்கும்.

 மாதவிடாய் பிடிப்புகள்

மாதவிடாய் பிடிப்புகள்

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிடிப்புகள் மற்றும் வலிகளை வெப்பமான துணியின் மூலம் ஒத்தடம் கொடுப்பதன் மூலம் குணப்படுத்தலாம்.மற்ற சிகிச்சையுடன் ஒப்பிடும்போது மாதவிடாய் பிடிப்பிற்கு வெப்பம் சிறந்தது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. கருப்பை நீடித்த மற்றும் வலி சுருக்கத்தால் மாதவிடாய் பிடிப்புகள் ஏற்படுகின்றன. வெப்பம் தசையை தளர்த்தி இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, இது வலியை குறைக்கிறது.

தலைவலி

தலைவலி

தலைவலிக்கு வெப்பம் சிறந்ததா அல்லது ஐஸ்கட்டி சிறந்ததா என்பது நீண்டகாலமாக இருக்கும் விவாதம் ஆகும். சரியான சிகிச்சை உங்களுக்கு ஏற்படும் தலைவலியின் வகையைப் பொறுத்தது. பதற்றத்தால் ஏற்படும் தலைவலிக்கு வெப்ப சிகிச்சை சிறந்ததாகும். இது கழுத்து மற்றும் தாடை முழுவதும் தசைகளை தளர்த்த உதவுகிறது. சைனஸ் தலைவலி வெப்ப சிகிச்சையைப் பயன்படுத்துவதன் மூலம் நன்மை பயக்கும், இது நாசிப் பாதைகளை சூடாகவும், கட்டமைக்கப்பட்ட சில சுரப்புகளை தளர்த்தவும் உதவும். ஒற்றைத் தலைவலி, அல்லது பிற வாஸ்குலர் தூண்டப்பட்ட தலைவலி போன்றவற்றிற்கு குளிர் சிகிச்சை நல்லது.

படை நோய்

படை நோய்

படை நோய்க்கு ஐஸ்கட்டிகள் மிகவும் சிறந்த சிகிச்சை முறையாகும். இதன் எரிச்சலூட்டும் ஒவ்வாமை எதிர்வினையிலிருந்து விடுபடுவதற்கான விரைவான வழிகளில் ஒன்று இதுவாகும். அரிப்பை ஏற்படுத்தும் புள்ளிகள் மீது ஐஸ்கட்டியை வைப்பது அதன் தக்கத்தைக் குறைக்கும்.

MOST READ:கடக ராசிக்காரங்ககிட்ட இருக்குற மிகப்பெரிய பிரச்சினை என்ன தெரியுமா?

 சிராய்ப்புக்காயம்

சிராய்ப்புக்காயம்

சிராய்ப்பு ஏற்பட்டு அதனை சுற்றி கருப்பு வளையங்கள் ஏற்பட்டவுடன் அதனை சுற்றி 15 நிமிடத்திற்கு ஐஸ்கட்டிகளை வைக்கவும். ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் இதனை செய்யவும். ஐஸ்கட்டிகள் காயங்களை விரைவாக குணமாக்கவும், வீக்கத்தை குறைக்கவும் உதவுகிறது.

தசைப்பிடிப்புகள்

தசைப்பிடிப்புகள்

சிறிய காயத்திற்கு ஐஸ்கட்டிகள் சிறந்த சிகிச்சையாக இருக்கலாம், ஆனால் தசைப்பிடிப்பு மற்றும் வலிகளுக்கு இது ஏற்றதல்ல. மூட்டு அல்லது தசையில் நீடித்த விறைப்பு இருக்கும்போது வெப்பம் மிகவும் உதவியாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இது தசைகள் மற்றும் தசைநாண்களை தளர்த்தும் மற்றும் விறைப்பு தொடர்பான நீடித்த அறிகுறிகளை அகற்றும்.

முதுகு வலி

முதுகு வலி

கீழ் முதுகுவலிக்கு ஐஸ்கட்டியைக் கொண்டு சிகிச்சையளிப்பது சிறந்த நிவாரணத்தை அளிக்கும். ஆனால் நீண்ட நாட்களுக்கு கீழ் முதுகில் வலி இருந்தாலோ அல்லது வீக்கம் இருந்தாலோ அங்கு வெப்ப ஒத்தடம் கொடுப்பது நல்ல பலனையளிக்கும்.

பூச்சிக்கடிகள்

பூச்சிக்கடிகள்

பூச்சிக்கடிகளுக்கு ஐஸ்கட்டியைக் கொண்டு சிகிச்சை அளிப்பது உங்களுக்கு ஆரம்பகால நிவாரணத்தை அளிக்கும். பூச்சிகளின் கொடுக்குகளால் வீக்கம் ஏற்பட்டால் ஐஸ்கட்டி சிறந்த மருத்துவமாகும்.

MOST READ:வருஷா வருஷம் தீபாவளி கொண்டாடுறீங்களே... தீபாவளியை பத்தி இந்த விஷயமெல்லாம் தெரியுமா உங்களுக்கு?

காயங்கள்

காயங்கள்

காயத்தின் முதல் மூன்று நாட்கள் ஐஸ்கட்டி வைப்பது வீக்கம் ஏற்படாமல் இருக்க உங்களுக்கு உதவும் அதற்குப்பிறகு வெப்பத்தைப் பயன்படுத்துவது காயத்தை சுற்றி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், மேலும் காயம் குணமாகும் வேகத்தை மூன்று மடங்கு அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ice or Heat: What’s Best for Your Pain?

Read to know what is best for your pain ice or heat.
Story first published: Thursday, October 24, 2019, 17:24 [IST]
Desktop Bottom Promotion