For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாப்பிட்டது கல்லா இருந்தாலும் உடனே ஜீரணமாகணுமா? அப்போ நீங்க இத கண்டிப்பா பண்ணணும்...

சாப்பிட்ட உடனேயே எளிதாகவும் வேகமாகவும் ஜீரணமாக வேண்டுமென்றால், கீழே கொடுக்கப்பட்ட ஆறு வீட்டு வைத்திய முறைகளைப் பின்பற்றினால் போதும். அதுபற்றி இங்கே பார்ப்போம்.

|

உடல் இயக்கத்தில் செரிமான மண்டலம் முக்கிய பங்காற்றுகிறது. செரிமான மண்டலத்தில் கோளாறு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், உடலில் செயல்பாடுகள் குறைவது, மோசமான ஊட்டச்சத்து, உணவு ஒவ்வாமை மற்றும் தொற்று கூட ஒரு சில நேரங்களில் காரணமாக இருக்கலாம். இருப்பினும், சில குறிப்பிட்ட உணவுத் தீர்வுகள் மூலம் இயற்கையான முறையில் செரிமானத்தை மேம்படுத்த முடியும்.

Home Remedies for Digestion

நீங்கள் சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு வித அசௌகரியமாக உணர்கிறீர்களா? இதற்குக் காரணம் அஜீரணமாக இருக்கலாம். செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் பொதுவானதாக இருக்கலாம், ஆனால் சாதாரணமானது அல்ல. செரிமானம் தொடர்பான கோளாறுகளைப் பற்றி நாம் பொதுவாக பேசத் தவிர்க்கிறோம், மற்றும் செரிமான ஆரோக்கியம் தொடர்பான உதவிகளை பெறுவதும் இல்லை. ஆனால் இதனைத் தவிர்ப்பது தவறான காரியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செரிமானப் பாதை

செரிமானப் பாதை

செரிமான பாதையில் உண்டாகும் பொதுவான பிரச்சனைகள், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், இரைப்பை குடல் நோய்க்குறி, குடல் அழற்சி, வயிற்று வலி, வாய்வு, குமட்டல் மற்றும் நெஞ்செரிச்சல் ஆகியவை ஆகும். செரிமான கோளாறுகளுக்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், உடல் பயிற்சி அல்லது செயல்பாடுகள் இல்லாமை, ஊட்டச்சத்து குறைபாடு, உணவு ஒவ்வாமை, மருந்து மற்றும் தொற்று போன்றவை செரிமான பிரச்சனைகளுக்கு முக்கிய காரணங்களாகும். ஆனால் இத்தகைய செரிமான கோளாறுகளைப் போக்க சில வகை இயற்கைத் தீர்வுகள் உண்டு. அதனைப் பற்றி இந்த பதிவில் நாம் காணலாம்.

MOST READ: இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்க தான் டாப்... மத்தவங்க அடுத்தது தான்...

உணவை மென்று சாப்பிடுங்கள்

உணவை மென்று சாப்பிடுங்கள்

உணவு நல்ல முறையில் ஜீரணம் ஆவதற்கு அதனை நன்றாக மென்று சாப்பிடவேண்டும். உணவை மென்று சாப்பிடுவதால், செரிமான மண்டல செயல்பாடுகள் எளிதாகின்றன. இதனால் உங்கள் உடல் மற்ற செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்த முடியும். உணவை சாப்பிடுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். உணவை நன்றாக மெதுவாக மென்று விழுங்கவும். உணவை விரைந்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தில் அவசரமாக விழுங்குவதால் அஜீரணம் ஏற்படலாம்.

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு

செரிமானத்தில் நார்ச்சத்து உணவுகள் முக்கிய பங்காற்றுகின்றன. கரையக் கூடிய நார்ச்சத்து மற்றும் கரைய முடியாத நார்ச்சத்து ஆகிய இரண்டு விதமான நார்ச்சத்துகளையும் உணவில் எடுத்துக் கொள்வது நல்லது. ஏனென்றால் இவை இரண்டும் செரிமான மண்டலத்திற்கு வெவ்வேறு விதங்களில் உதவுகின்றன. பழங்கள், காய்கறிகள், கோதுமை, முழு தானியம், ஓட்ஸ், பருப்பு, விதைகள், மற்றும் பயறு வகைகள் ஆகியவை நார்ச்சத்தின் ஆதாரமாக விளங்குபவையாகும். பதப்படுத்தப்பட்ட ஜன்க் உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

நீர்ச்சத்துடன் இருங்கள்

நீர்ச்சத்துடன் இருங்கள்

செரிமான ஆரோக்கியத்திற்கு அதிக நீர் பருகுவது நன்மை செய்யும். நாள் முழுவதும் தண்ணீர் பருகுவதாலும், பழச்சாறு, எலுமிச்சை நீர் மற்றும் தேங்காய் நீர், இளநீர் பருகுவதாலும் உடலை நீர்ச்சத்தோடு வைத்துக் கொள்வது நல்லது.

MOST READ: இந்த 2019 இல் எந்தெந்த நாட்களில் முடி வெட்டலாம்? எந்த நாட்களில் வெட்டக்கூடாது... தெரிஞ்சிக்கங்க

நடந்து கொண்டே இருங்கள்

நடந்து கொண்டே இருங்கள்

உங்கள் உடல் நகரும் விதத்தில் வடிவமைக்கப்பட்டதாகும். உடற்பயிற்சி செய்வது ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி, நீச்சல், யோகா, சைக்ளிங், போன்றவையும் செய்யலாம். உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துக் கொள்வதால் செரிமான மண்டலத்தை நோக்கி உணவுன் பயணிக்க எளிதாகிறது. இதனால் செரிமானம் தொடர்பான கோளாறுகள் குறைகிறது. ஆகவே தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

ஆரோக்கிய கொழுப்பு

ஆரோக்கிய கொழுப்பு

கொழுப்பு சத்து, உணவு எளிதாக செரிமான மண்டலத்தை அடைய உதவுகிறது. ஆகவே ஆரோக்கிய கொழுப்பு உணவுகளான சீஸ், ஆலிவ் எண்ணெய், முழு முட்டை, பருப்பு, அவகாடோ, கொழுப்பு மீன் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் கூடுதல் நன்மையாக, ஒமேகா 3 கொழுப்பு அமிலம், அழற்சியை குறைக்க உதவுகிறது. இதனால் குடல் நோய்கள் வளர்ச்சி அடைவது தடுக்கப்படுகிறது. ஆகவே, சால்மன், டூனா, மீன்கள், ஆளி விதைகள், சியா விதைகள், பூசணி விதைகள் ஆகியவற்றை உங்கள் உணவில் இணைத்துக் கொள்ளலாம்.

MOST READ: இந்த வருடம் அமாவாசை எந்தெந்த தேதிகளில் வருகிறது? இதோ ஃபுல் லிஸ்ட் உங்களுக்காக...

மன அழுத்தத்தைத் தவிர்த்திடுங்கள்

மன அழுத்தத்தைத் தவிர்த்திடுங்கள்

பொதுவாக மன அழுத்தம் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் எதிர்மறை விளைவுகளை உண்டாக்கலாம். பல வகை செரிமான கோளாறுகளான வயிற்றுப்புண், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், இரைப்பை குடல் நோய்க்குறி போன்றவை மன அழுத்தத்துடன் தொடர்புடைய நோய்களாகும். மன அழுத்தம் ஏற்படுவது இயற்கை என்றாலும், சில குறிப்பிட்ட சுவாச பயிற்சி, தியானம், யோகா போன்றவற்றை செய்யலாம். இதனால் உங்கள் மன அழுத்தம் குறையலாம். இதனால் உங்கள் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top 6 Home Remedies That Can Help Speed Up Your Digestion

here we suggest some top Home Remedies That Can Help Speed Up Your Digestion.
Desktop Bottom Promotion