Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
ஒருநாளைக்கு இத்தனை முறைக்குமேல் இருமினால் நுரையீரல் புற்றுநோய் இருப்பதாக அர்த்தமாம்...
இருமல் உண்டாவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அது அளவுக்கு மேல் அதிகரித்தால் என்ன பிரச்சினை உண்டாகும் என்பது பற்றி தான் இந்த பகுதியில் பார்க்கலாம்.
நம்மளுக்கு இருமல் வந்தால் அவ்வளவு சாதரணமாக போகக் கூடியது கிடையாது. அதிலும் தீராத இருமல் எப்பொழுதும் நமக்கு தொல்லை தான். நமக்கு மட்டுமல்ல அக்கம் பக்கத்தினர் கூட இது குறித்து கஷ்டமாக பீல் பண்ணுவார்கள். சரி இப்படி தொடர்ச்சியான இருமல் எப்படி ஏற்படுகிறது எனத் தெரியுமா?

நாள்பட்ட இருமல் உங்களுக்கு இருந்தால் 8 வாரங்களுக்கு தொடரும் என்கிறார்கள் மருத்துவர்கள். அதே நேரத்தில் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவதன் மூலம் இதை படிப்படியாக குறைக்க முடியும். இந்த 8 காரணங்களால் தான் நமக்கு இருமல் வருகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஒவ்வாமை
சுவாசப் பாதையில் அழற்சி ஏற்பட்டால் மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு போன்றவை ஏற்படும். இது அப்படியே தொண்டை யில் அழற்சியை ஏற்படுத்தி இருமலை உண்டாக்குகிறது.
எனவே இருமலை குணப்படுத்த வேண்டும் என்றால் முதலில் அழற்சிக்கான காரணத்தை நாம் கண்டறிய வேண்டும். இதற்கு ஆன்டி ஹிஸ்டமைன் உதவுகிறது.பெனிட்ரைல் டானிக் போன்றவை உதவியாக இருக்கும். நாசி பானம் கூட உங்களுக்கு இந்த அழற்சியை போக்க உதவும்.

ஆஸ்துமா
ஆஸ்துமா எல்லாருக்கும் இருப்பதில்லை. ஆனால் அதன் அறிகுறியாக இருமல் ஏற்பட வாய்ப்புள்ளது. உடற்பயிற்சி, அழற்சி, புகைப்பிடித்தல், பராமெட்ரிக் அழுத்தம், தொற்று போன்றவை ஆஸ்துமா அழற்சியை உண்டாக்கி இருமலை ஏற்படுத்துகிறது.

இரைப்பை உணவுக்குழாய் அமிலம்
எதுக்களித்தல் என்பது நமது வயிற்றில் உள்ள அமிலம் தொண்டை வரை வந்து எரிச்சலை ஏற்படுத்தும். இது பொதுவாக தூங்கும் போது நிகழக் கூடும். தொடர்ச்சியான அமில எரிச்சல் இருமலை உண்டாக்கும்.
இதற்கு டம்ஸ், ரோலெய்ட்ஸ், மாலாக்ஸ், சிமெடிடின் (டாகாமெட்) ரானிடிடைன் (பெப்சிட்) போன்ற ஆண்டிசிட்டை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். இரவும் தூங்குவதற்கு முன் அதிகமாக சாப்பிடுவதை நிறுத்துங்கள். புகைப்பிடித்தல் மற்றும் ஆல்கஹாலை தவிருங்கள்.

உடல் பருமன்
உடல் பருமன் அதிகமாக இருந்தால் குறையுங்கள். தலையை உயரமாக வைத்து படுக்கையில் தூங்குங்கள். உப்பு சேர்க்கப்பட்ட ஸ்நாக்ஸ்களை சாப்பிட்டால் இருமலை கட்டுப்படுத்தலாம். ஆனால் அதே நேரத்தில் உங்கள் உடம்பில் உள்ள உப்புச் சத்தின் அளவையும் அறிந்து கொள்ளுங்கள்.

புகைப் பிடித்தல்
புகைப் பிடிப்பது உங்கள் நுரையீரல் மற்றும் தொண்டையை பெருமளவு பாதிக்கிறது. புகையிலை, சிகரெட், பீடி போன்றவை உங்கள் சுவாச பாதையில் அழற்சியை ஏற்படுத்தி இருமலை உண்டாக்குகிறது.

தொற்று
சுவாச பாதை தொற்று, காச நோய் போன்றவை தொடர்ச்சியான இருமலை உண்டாக்கும்.

நுரையீரல் புற்று நோய்
தவிர்க்க முடியாத இருமல் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள். ஏனென்றால் அது நுரையீரல் புற்று நோயின் அறிகுறிகளாக கூட இருக்கலாம்.

ஸ்லீப் அனிமியா
தூங்குவதில் பிரச்சனை அதாவது ஸ்லீப் அனிமியா இருந்தால் உங்கள் தொண்டை க்கு போதுமான காற்று கிடைக்காது. இதனால் தொண்டை வறண்டு போய் இருமல் ஏற்படும். இதனால் அடிக்கடி நீங்கள் தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கும் நிலை ஏற்படும். இப்படி ஏற்படும் பிரச்சினையை நீங்கள் சிபிஏபி இயந்திரம் மூலம் கண்டறியலாம்.



Click it and Unblock the Notifications