Just In
- 2 hrs ago
வார ராசிபலன் (07.03.2021 முதல் 13.03.2021 வரை) - புதிய தொழில் தொடங்க இது சாதகமான காலமில்லை…
- 3 hrs ago
இன்றைய ராசிப்பலன் (07.03.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய முதலீடுகள் செய்யாமல் இருப்பது நல்லது…
- 14 hrs ago
இந்த ராசிக்காரங்க பணத்தை நிர்வகிப்பத்தில் சுத்தமா பொறுப்பில்லாமல் இருப்பாங்களாம்...!
- 15 hrs ago
இந்த 5 ராசிக்காரங்கள காதலிக்கிறவங்க ரொம்ப பாவம்... ஏனா இவங்க சைக்கோத்தனமா காதலிப்பாங்களாம்...!
Don't Miss
- News
பீமா-கொரேகான் வழக்கு.. 6 மாதம் நிபந்தனை ஜாமீன்.. 81 வயதான வரவர ராவ் 2 வருடத்திற்கு பின் விடுதலை!
- Automobiles
மெர்சலாக்கும் தோற்றத்தில் ஷோரூமை வந்தடைந்தது கவாஸாகி நிஞ்சா 300!! மொத்தம் 3 நிறங்கள்... உங்களது தேர்வு எது?
- Movies
பிரபலங்களின் பாராட்டு மழையில் அன்பிற்கினியாள்.. ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் சக்கைபோடு போடுகிறது!
- Sports
அறிமுக தொடரிலேயே அசத்தல் ஆட்டம்...30 வருஷமா யாருமே செய்யலயாம்..வரலாற்று சாதனை படைத்த அக்ஷர் பட்டேல்
- Finance
டிவிஎஸ் மோட்டார்-இன் சூப்பர் அறிவிப்பு.. ஊழியர்கள் மகிழ்ச்சி..!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் மபொதுத்துறை நிறுவன வேலை!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
காதலர் தினம் ரோஜா புற்றுநோயோடு போராடி உயிர் பிழைத்த கதையை அவரே சொல்றார் கேளுங்க...
காதலர் தினம் போன்ற சில தமிழ் படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே. கடந்த வருடம் அவருக்கு புற்று நோய் இருப்பது தெரிய வந்தது. சோனாலி பிந்த்ரே அவருடைய மருத்துவ நிலை பற்றி தன்னுடைய விசிறிகளுக்கு தெரிவிக்க விரும்பினார்.
"இந்த நிலையை யாருமே எதிர்பார்க்கவில்லை" என்று அவர் கூறினார். இவருக்கு மேட்டாஸ்டடிக் கான்சர் இருப்பது கண்டறியப்பட்டு, சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.

அமெரிக்க சிகிச்சை
நாடு முழுவதும் உள்ள புற்று நோயாளிகளுக்கு இவர் ஒரு உத்வேகமாக இருந்தார். சமூக ஊடகங்களில் இவருடைய நிலையைப் பற்றி அவ்வபோது செய்திகள் வெளியிட்டபடி இருந்தார். புற்று நோயை எதிர்த்து இவர் நடத்திய போராட்டத்தை மிக எளிமையாக மற்றவர்களுக்கு எடுத்துரைத்தார். இவருடைய வாழ்க்கை பலபேரின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியது . இதானல் இவருடைய ரசிகர்களிடம் இருந்து பலத்த வரவேற்பு எழுந்தது.
MOST READ: வடிவேலுவின் செம கெட்டப்பும் பட்டைய கிளப்பிய டயலாக்கும் (#வடிவேலு காமெடி கலெக்ஷன்ஸ்)

நேர்காணல்
ஹார்பர் பஜாருடன் இவருடைய சமீபத்திய நேர்காணலில், இவருடைய வாழ்க்கையைப் பற்றியும் புற்று நோயுடன் போராடியதைப் பற்றியும் முழுவதும் விவரித்தார். புற்று நோய் இருப்பது தெரிய வந்தவுடன் இவருடைய குடும்பத்தாரும், இவரும் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இவருடைய அடிவயிறு முழுவதும் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்ததைப் பற்றி இவர் மேலும் விவரித்தார். இந்த பாதிப்பால் சோனாலி முழுவும் உடைந்து போனார்.

நொறுங்கிய இதயம்
"பாஸிட்ரான் எமிஷன் டோமோகிராபி என்ற ஸ்கேன் மூலம் இவருடைய அடிவயிற்றில் புற்றுநோய் பரவி இருப்பது கண்டறியப்பட்டது. தேவைதையின் ஒளி எல்லா இடங்களிலும் பரவுவது போல் புற்று நோய் அடிவயிறு முழுவதும் பரவி இருந்தது. இதனைப் போக்குவதற்கான முயற்சியில் 30% மட்டுமே வெற்றி வாய்ப்பு உள்ளதாக நியுயார்க் மருத்துவர்கள் தெரிவித்தபோது நாங்கள் என்ன செய்வதென்று தெரியவில்லை. இதயம் உடைந்து தூள் தூளானது" என்று சோனாலி கூறினார்.

என்ன நினைத்தார்?
புற்று நோய்க் கிருமியின் அதி தீவிர பரவலைப் பற்றி மருத்துவர்கள் தெரிவித்த போது, சோனாலி, உடைந்து போனார் என்றாலும், அவருடைய நம்பிக்கையை இழக்க வில்லை. "நோய்வாய்பட்டு நான் இறப்பேன் என்று கனவிலும் நான் நினைக்கவில்லை" என்று சோனாலி கூறினார்.

எப்படி மீண்டார்?
"ஆனால் இறப்பைப் பற்றி நான் கவலைப்படவில்லை. இது ஒரு நீண்ட போராட்டமாக இருக்கலாம். ஆனால் இந்த நோயால் நான் இறந்து விடுவேன் என்று நான் நினைக்கவில்லை" என்று அவர் கூறினார்.
இந்த சிகிச்சை முழுவதும் சோனாலியின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அவருக்கு பக்க பலமாய் இருந்து அவரை ஊக்குவித்து வந்தனர்.
"தற்போது நான் என் உடலின் அசைவுகளை கூர்மையாக கவனிக்கத் தொடங்கியுள்ளேன். இது ஒரு புதிய வழக்கம் மற்றும் புதிய பயணம்." புற்று நோயால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்த பெண்களுக்கு நான் கூற விரும்புவது, "நோயில் இருந்து முற்றிலும் மீண்டு வர தேவையானது, போதிய பராமரிப்பு மற்றும் ஆதரவு. குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து இருந்து அவர்களின் முழு அன்பையும் ஆதரவையும் பெற்றுக் கொள்ளும் நேரம் இது" என்று அவர் கூறி முடித்தார்.