For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தேள் கடித்துவிட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்? நீங்களே எப்படி விஷத்தை முறிக்கலாம்?

|

தேள் என்பது வேட்டையாடி உணவு உட்கொள்ளும் ஒரு சிலந்தி இனம் ஆகும். அவ்வாறு வேட்டையாடும் போது, அது தனது கொடுக்கிலிருந்து ஒரு வித விஷத்தை பாய்ச்சுகிறது. இந்த நிகழ்வு சிறிய விலங்குகளில் மரணத்தையும், மனிதர்களுக்கு பெரும் வலியையும் தர வல்லது. எனினும் பெரும்பாலான தேள் கடிகள் இறப்பில் கொண்டு போய் சேர்ப்பதில்லை. வட அமெரிக்காவில் உள்ள தேள் வகைகளிலேயே மிகவும் சக்தி வாய்ந்த விஷம் கொண்ட ஆபத்தான தேள் பார்க் தேள் (Bark Scorpion ) ஆகும். இதன் அறிவியல் பெயர் சென்றுரோய்ட்ஸ் எக்ஸிலிகாடா (Centruroides exilicauda) என்பதாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உலக அளவில்

உலக அளவில்

இந்த பார்க் தேள் அரிசோனா மாகாணத்தில் அதிகமாக உள்ளது.மேற்கில் தொடங்கி கொலராடோ ஆறு வழியாக கிழக்கே கலிபோர்னியா மற்றும் நியூ மெக்ஸிகோ வரை உள்ள நிலப்பரப்பில் பரவி காணப்படுகிறது. மேலும், இந்த பார்க் தேள், தேள்களுக்கே உரிய மிகவும் அச்சுறுத்தலான தோற்றத்தை கொண்டுள்ளன.இதில் ஆண் இனம் சராசரியாக 3.14 இன்ச் நீளமும், பெண் 2.75 இன்ச் நீளம் வரையிலும் வளரக்கூடியது. இதன் வால் மற்ற வகை தேள்களை விட மிகவும் மெல்லிதாக காணப்படுகிறது.

MOST READ: உறவின்போது ஆணுறுப்பு சீக்கிரமா சுருங்கிடுதா? அதுக்கு இதுதான் காரணம்...

விஷத்தை முறிப்பது

விஷத்தை முறிப்பது

ஒருவருக்கு பார்க் தேள் விஷத்தினால் ஏதேனும் ஒவ்வாமை இல்லாத வரை, இவ்வகை கடி பெரிய ஆபத்தில்லை, ஆனால் ஒவ்வாமை இருக்கும்பட்சத்தில் இறப்பில் கூட முடிய வாய்ப்புள்ளது. என்னதான் இருந்தாலும், இக்கடியினால் வரும் கடுமையான வலியினை தடுக்க முடியாது. உணர்வின்மை, மற்றும் வாந்தியுடன் இணைந்து வரும் வலி, ஒரு சராசரி மனதினிடம் 24 முதல் 72 மணி நேரம் வரை நீடிக்கும். நீங்களோ அல்லது உங்களுக்கு தெரிந்த நபர் ஒருவரோ இந்த தேளினால் கடிக்கப்படும்பொழுது, கீழ்கண்ட வழிகளை பின்பற்ற வேண்டும்.

பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

உங்களை இந்த தேள் கடிக்காமல், உங்களுக்கு தெரிந்த ஒரு நபரை கடித்திருந்தால், நீங்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஏனென்றால் சிறிதளவு கவனக்குறைவு ஏற்பட்டாலும் அந்த தேள் உங்களையும் கடிக்க வாய்ப்புள்ளது. எனவே சுற்றும் முற்றும் பார்த்து அந்த தேள் இல்லை என்பதை முதலில் உறுதி செய்து கொள்ள வேண்டும். பின்பு நல்ல முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் பாதுகாப்பு கையுறைகள் மற்றும் ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். தேள் அருகில் எங்காவது இருந்தால் அதை வெறும் கைகளால் தொடுவதை தவிர்க்க வேண்டும்.

MOST READ: இப்படி கரும்புள்ளி வந்த வாழைப்பழத்த சாப்பிடலாமா? சாப்பிட்டா உடம்புல என்ன நடக்கும்னு தெரியுமா?

கடியின் வீரியத்தை தீர்மானிக்க வேண்டும்

கடியின் வீரியத்தை தீர்மானிக்க வேண்டும்

தேள் கடியினால் ஒருவருக்கு திடீரென்று அதிர்ச்சி ஏற்படும். இதனால் ஒருவருக்கு மூச்சுத்திணறல், தலைச்சுற்றல், மார்பு வலி, அல்லது சுவாசத்தில் சிரமம் ஏற்படுமேயானால், உடனடியாக அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். இந்த பார்க் தேள் கடியால் குழந்தைகளுக்கு பொதுவாக தசை பிடிப்பு, சீரற்ற உடல் இயக்கங்கள், கழுத்து அல்லது கண்களில் நடுக்கம், அமைதியின்மை, பதட்டம், ஆர்ப்பாட்டம், மற்றும் வியர்த்து கொட்டல் போன்றவை ஏற்படும். பொதுவாக பார்க் தேள் கடியினால் கடுமையான வலி ஏற்படுமே தவிர, வீக்கம் எதுவும் கடித்த இடத்தில் உண்டாவதில்லை. மேலே சொன்ன அறிகுறிகள் ஏதாவது தெரிந்தால், பாதிக்கப்பட்ட நபரை உடனடியாக அருகிலுள்ள அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க வேண்டும்.

அவசர சிகிச்சை பிரிவில் பாதிக்கப்பட்ட நபரை சேர்த்தல்

அவசர சிகிச்சை பிரிவில் பாதிக்கப்பட்ட நபரை சேர்த்தல்

பார்க் தேள் கடித்த சந்தேகம் இருந்தாலோ அல்லது மேலே சொன்ன அறிகுறிகள் ஏதேனும் தோன்றினாலோ உடனடியாக அவசர மருத்துவ உதவி எண்ணை அழைக்க வேண்டும். அவசர மருத்துவ உதவி எண் இல்லாத பக்கத்தில், பாதிக்கப்பட்ட நபரை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். கடந்த 40 வருடங்களில் அமெரிக்கா நாட்டில் ஒருவர் கூட தேள் கடியினால் இறந்ததில்லை என்ற புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் பார்க் தேள் கடி மிகவும் ஆபத்தை ஒன்று என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே கனநேரம் கூட காத்திருக்காமல் உடனடியாக அருகிலுள்ள அவசர மருத்துவ சிகிச்சையை நாட வேண்டும்.

MOST READ: கிட்னியில கல் வந்தா கொஞ்ச நாள்ல மாரடைப்பும் வருமாமே?... என்ன அறிகுறி வெச்சு கண்டுபிடிக்கலாம்?

டிப்ஸ் அல்லது குறிப்புகள்

டிப்ஸ் அல்லது குறிப்புகள்

* தேள் சிலந்தி வகையை சார்ந்த ஒரு உயிரினம். அது வேட்டையாடுவதற்கு மற்றும் பாதுகாப்பிற்காக மட்டுமே கடிக்கிறது. மனிதர்களை வேண்டுமென்றே அவை கடிப்பதில்லை தேள்கள் காலணிகளுக்கு அடியிலோ அல்லது படுக்கையறைக்கு அடியிலோ மாட்டிக்கொள்கின்றன. எனவே அந்த நேரங்களில் நம் காலை நுழைக்கும் போது வேறு வழியில்லாமல் பாதுகாப்பிற்காக கடிக்கின்றன. பார்க் தேள் கடி சற்று ஆபத்தானது, எனவே உடனடியாக மருத்துவ சிகிச்சையை பெறுதல் அவசியமான ஒன்று.

* சம்பவம் நடந்த இடத்தில தேளை நீங்கள் பார்க்க நேர்ந்தால் உடனடியாக அதன் மேல் ஒரு ஜாடியை போட்டு கவிழ்த்த வேண்டும், அல்லது குறைந்தது 8 இன்ச் நீளமுள்ள இடுக்கியை பயன்படுத்தி அதனை அப்புறப்படுத்த வேண்டும்.

* தேள் கடித்த இடத்தில ஐஸ் கட்டிகளை வைத்து ஒத்தடம் கொடுப்பதன் மூலம் வலி பாதிப்பை குறைக்கலாம்.

* பார்க் தேள் கடியின் விஷ முறிவு மருத்து அரிசோனா-வில் மட்டுமே கிடைக்கிறது. எனவே பார்க் தேள் கடியின் அறிகுறி ஏதேனும் தெரியும்பட்சத்தில் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: health
English summary

How to Treat a Scorpion Sting?

Most scorpion stings don’t require treatment, though it can be a good idea to see your doctor as a precaution. If symptoms are severe, you may need to receive hospital care. You may need to take sedatives if you’re experiencing muscle spasms and intravenous (IV) medication to treat high blood pressure, pain, and agitation
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more