For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எலுமிச்சை சாறில் அரை ஸ்பூன் மஞ்சள் சேர்த்து குடித்து வந்தால் என்னென்ன மாற்றங்கள் உடலில் நடக்கும்..?

|

நம் வீட்டில் உள்ள சில உணவு பொருட்களோடு வேறு சில உணவு பொருட்களை சேர்த்தால் அதனால் கிடைக்கும் பயன் அதிகமே. இது எல்லா வகையான உணவுகளுக்கும் ஏற்றதாக இருக்காது. அந்தந்த உணவுகளின் தன்மையை பொருத்தே இது நிர்ணயிக்கப்படும். சில உணவுகளின் தன்மை முற்றிலும் முரண்பாடாக இருக்கும்.

எலுமிச்சை சாறில் அரை ஸ்பூன் மஞ்சள் சேர்த்து குடித்து வந்தால் என்னென்ன மாற்றங்கள் உடலில் நடக்கும்?

ஆனால், சில உணவுகள் மிக சுலபமாகவே வேறொரு உணவோடு சேர்ந்து விடும். அந்த வகையில் எலுமிச்சை சாறு மற்றும் மஞ்சளை சொல்லலாம். இவை இரண்டையும் சேர்த்து குடிக்கும் போது உடலில் பலவித மாற்றங்கள் உண்டாகும். கூடவே ஹார்மோன் பாதிப்பையும் இவை குறைத்து விடும்.

இதுவரை நீங்கள் கேள்விப்பட்டிறாத சில அதிசய நன்மைகள் எலுமிச்சை மற்றும் மஞ்சளை சேர்த்து குடிக்கும் போது கிடைக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன. எலுமிச்சை சாற்றில் மஞ்சளை கலந்து குடிப்பதால் எப்படிப்பட்ட மாற்றங்கள் உடலில் உண்டாகும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சை சாற்றில் பலவித ஆரோக்கிய நன்மைகள் உள்ளது என்பது நம் அனைவருக்கும் நன்கு தெரிந்திருக்கும். எலுமிச்சையின் தாதுக்களும், ஊட்டச்சத்துக்களும் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இதிலுள்ள சிட்ரிக் அமில தன்மை தான் இவற்றின் பல நன்மைகளுக்கு முக்கிய காரணமே.

மஞ்சள்

மஞ்சள்

கிருமி நாசினி என்றாலே அதில் மஞ்சள் தான் முதல் இடத்தில் இருக்கும். இயற்கையாக மஞ்சளில் நோய் கிருமிகளை அழிக்கும் தன்மை உள்ளது.

நாம் சாப்பிடும் உணவு முதல் ஏற்படுகின்ற காயங்கள் வரை மஞ்சள் தான் உதவுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் மஞ்சளுக்கென்று தனி இடமே உள்ளது.

மூளை திறனுக்கு

மூளை திறனுக்கு

எலுமிச்சை சாற்றில் மஞ்சளை கலந்து சாப்பிடும் போது பலவித மாற்றங்கள் உடலில் நடக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன. குறிப்பாக மூளையின் திறன் பல மடங்கு அதிகரிக்கும்.

உங்களது மூளையின் செயல்திறன் மிக மோசமான அளவில் இருந்தால் அதை சரி செய்து சிறப்பாக செயல்பட இவற்றின் கலவை உதவும்.

MOST READ: கைகளால் இந்த 8 பொருட்களை தொடவே கூடாது? காரணம் தெரிஞ்சா அதிர்ச்சி நிச்சயம்..!

ஆராய்ச்சி

ஆராய்ச்சி

ஜியார்ஜ்டவுன் மெடிக்கல் யூனிவர்சிட்டியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இவற்றின் கலவையை வைத்து ஆய்வு செய்ததில் பல நன்மைகள் இவற்றில் இருப்பதாக கண்டறிந்து வெளியிட்டனர்.

மேலும், மூளை பகுதியில் ஏதேனும் வீக்கம் உருவாகினால், அதை ஏற்படாமல் தடுக்கவும் இந்த கலவை உதவுகிறதாம்.

ஹார்மோன்

ஹார்மோன்

மூளை பகுதியில் உண்டாக கூடிய வீக்கம் தான் ஹார்மோன் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் செரடோனின் என்கிற ஹார்மோன் என்கிற ஹார்மோன் பெரும்பாலும் பாதிக்கப்படுவதாக இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மன அழுத்தம்

மன அழுத்தம்

ஹார்மோன் பாதிப்பால் மன அழுத்தம் அதிகரித்தால் அதை தடுக்க எலுமிச்சை- மஞ்சள் நீர் உதவும். மேலும், மனதில் ஏற்படுகின்ற தயக்கம், குழப்ப நிலை, நரம்பு சார்ந்த பாதிப்புகள் ஆகிய ஏற்படுவதை தடுக்க இந்த நீர் உதவியாக இருக்கும்.

மூல பொருள்

மூல பொருள்

மஞ்சளில் உள்ள குர்குமின் என்கிற மூல பொருள் தான் உடலை மேம்படுத்த முக்கிய காரணமாக இருக்குமாம். எலுமிச்சையோடு மஞ்சள் சேரும் போது தான் அதன் முழு தன்மையும் மாறுபடுகிறது. இவை நேரடியாக நமது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும்.

தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்

இந்த எலுமிச்சை மஞ்சள் பானத்தை தயாரிக்க சில உணவு பொருட்கள் தேவைப்படுகிறது.

தண்ணீர் 3 கப்

மஞ்சள் 1 ஸ்பூன்

இஞ்சி சிறிய துண்டு

தேன் 2 ஸ்பூன்

எலுமிச்சை சாறு அரை கப்

MOST READ: இந்த 9 அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் மருத்துவ பரிசோதிக்க எடுக்க வேண்டும்..!

தயாரிப்பு முறை

தயாரிப்பு முறை

முதலில் நீரை கொதிக்க வைத்து அதில் மஞ்சள் மற்றும் துருவிய இஞ்சியை சேர்த்து கொள்ளவும். 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விட்டு இந்த நீரை அப்படியே ஒரு ஜாரில் ஊற்றி கொள்ளவும். இதை நன்றாக கலக்கி கொண்டு, மிதமான சூட்டிற்கு வந்த பின் தேனை ஊற்றி கலக்கவும்.

தயாரிப்பு முறை

தயாரிப்பு முறை

அடுத்து இவற்றுடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து நன்றாக கலக்கி குடித்து வந்தால் மேற்சொன்ன பயன்கள் கிடைக்கும். தேவைக்கு சிறிது ஐஸ் கலந்தும் குடித்து வரலாம். இந்த நீரை வாரத்திற்கு நீங்கள் மிகவும் சோர்வாக இருக்கும் நேரங்களில் குடித்து வந்தால் நல்ல பலனை அடையலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to Make Turmeric Lemonade to Relieve Stress

This article talks about how to make turmeric lemonade to relieve stress.
Desktop Bottom Promotion