For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்கள் தங்கள் ஆணுறுப்பை சுத்தமாக வைத்திருப்பது எப்படி? எப்படி ஈஸியாக சுத்தம் செய்யலாம்?

|

என்னதான் தினமும் அழுக்குப் போக, சோப்பெல்லாம் போட்டு உடலைத் தேய்த்துக் குளித்தாலும் காது மடல் போன்ற சில இடங்களை மட்டும் நாம் எப்போதும் கண்டுகொள்வதே இல்லை. காதை தேய்த்து சுத்தப்படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருப்போம். ஆனால் நிச்சயமாக குளிக்கும் சமயத்தில் அதை மறந்து விடுவோம். அதிலும் குறிப்பாக, நம்முடைய அந்தரங்க உறுப்புகளைச் சுத்தம் செய்வது பற்றிய எண்ணமே நம்மில் பலருக்கும் வருவதே கிடையாது. அதை ஒரு பொருட்டாகவே நாம் கருதுவதில்லை என்பது தான் உண்மை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அந்தரங்கப் பகுதி

அந்தரங்கப் பகுதி

நம்முடைய உடலில் மிக எளிமையாக நோய்த் தொற்றுக்களைப் பரப்பக்கூடிய இடமே நம்முடைய அந்தரங்கப் பகுதிகள் தான் என்பதை நாம் கவனத்தில் கொள்வதே இல்லை. அதனுடைய ஆரோக்கியத்திலும் தூய்மையிலும் எப்போதும் கவனமுடன் இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.

தினமும் பல் துலக்குவதைப் போல, குளிப்பதைப் போல தங்களுடைய அந்தரங்க உறுப்பை சுத்தம் செய்வது சுகாதாரமாக வைத்துக் கொள்வதை ஆண்கள் தங்களுடைய கடமையாகக் கொள்ள வேண்டும்.

சுரப்பிகள்

சுரப்பிகள்

ஆண்களுடைய அந்தரங்க உறுப்புகளின் மேல் தோலிற்கும் உறுப்பின் தலைப்பகுதிக்கும் இடையே ஒருவித திரவம் சுரக்கும். அப்படி சுரக்கும் smegma என்னும் பொருளானது மேல் தோலிற்கும் தலைப்பகுதியும் நேரடியாக உராய்வை ஏற்படுத்தாமல் பாதுகாக்கும். அதன் கழிவுகள் அவ்வபபோது உலர்ந்து மாவு போல் மேல் வந்து நிற்கும். அதை துடைத்து தண்ணீர் கொண்டு அவ்வப்போது சுத்தப்படுத்த வேண்டும்.

புற்றுநோய்

புற்றுநோய்

ஆணுறுப்பு மிகவும் சென்சிடிவான பகுதி. அதைப் பாதுகாக்க segama என்னும் அந்த பொருள் சுரந்தாலும், குறிப்பிட்ட சில நாட்களுக்கு ஒருமுறை அதை நன்கு தேய்த்துக் கழுவி சுத்தம் செய்தல் வேண்டும். இல்லாவிட்டால் அது அப்படியே தங்கி, உறுப்பின் உள்பகுதிக்குள் பரவி, புற்றுநோய் உண்டாகக் கூட காரணமாக அமைந்துவிடும்.

MOST READ: இரவு தூங்கும் போது இதையெல்லாம் செய்து விட்டு தூங்குங்க... அப்புறம் பாருங்க என்ன நடக்குதுன்னு..!

குளிக்கும்போது

குளிக்கும்போது

தோல் சம்பந்தப்பட்ட நோய்களும் உருவாகக்கூடும். அதனால் தினமும் குளிக்கும்போது ஒருமுறையாவது முன்தோலை பின்நோக்கித் தள்ளி, நன்கு தண்ணீர் கொண்டு கழுவுதல் வேண்டும்.

இதற்கு சோப் பயன்படுத்துவதாக இருந்தால், வாசனைப் பொருள்கள் கலக்காத, மென்மையான ஹெர்பல் சோப்புகளைப் பயன்படுத்துவது நல்லது.

தலைக்குப் பயன்படுத்தும் ஷாம்பு, வாசனைப் பொருள்கள் அதிகம் சேர்க்கப்பட்ட சோப், கெமிக்கல் அதிகமாக உள்ள சோப் ஆகியவற்றைப் பயன்படுத்தக்கூடாது.

ஈரப்பதம்

ஈரப்பதம்

பொதுவாக பெண்களின் அந்தரங்க உறுப்பை கொஞ்சம் ஈரப்பதத்துடன் வைத்திருப்பது நல்லது என்று சொல்வார்கள். ஆனால் ஆண்களின் பிறப்புறுப்பு எப்போதும் ஈரமாக இல்லாமல் உறுப்புகளை உலர்ந்த நிலையில் வைத்திருக்க வேண்டும்.

உள்ளாடைகள்

உள்ளாடைகள்

பொதுவாக உடைகளை ஃபிட்டாக அணிவது தான் நம்முடைய பழக்கமாக இருக்கிறது. அதேபோல உள்ளாடைகளையும் இறுக்கமாக அணிகிறோம். ஆனால் ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். முதலில் இறுக்கமான உள்ளாடைகளை அணிவதை முதலில் தவிர்க்க வேண்டும். காட்டன் உள்ளாடைகளை மட்டுமே அணிய வேண்டும். அடிக்கடி உள்ளாடைகளை மாற்றுவது நல்லது. குறிப்பாக கோடை காலங்களில் ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது 1உள்ளாடைகளை மாற்ற வேண்டியது அவசியம்.

MOST READ: ஒரே மாசத்துல தொப்பையை குறைக்க, வெல்லத்த இதோட சேர்த்து சாப்பிடுங்க...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Keep Men Private Parts Hygiene

here we are discussing about how to keep men privae parts hygene in a natural ways.
Story first published: Saturday, January 19, 2019, 20:33 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more