For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதுகு பிடிச்சிடுச்சா? எப்படி வலிக்காம உடனே சரிசெய்யலாம்?

திடீரென்று முதுகு பிடிச்சுக்கிட்டு தீராத வலியை கொடுக்கும். இந்த முதுகு பிடிப்பு படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் போது, கனமான பொருட்களை தூக்கும் போது, டக்கினு அசையும் போது போன்ற செயல்களை செய்யும் போ

|

முதுகு பிடிச்சுகிட்டா அப்போ இத செய்ங்க சரியாகிடும். திடீரென்று முதுகு பிடிச்சுக்கிட்டு தீராத வலியை கொடுக்கும். இந்த முதுகு பிடிப்பு படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் போது, கனமான பொருட்களை தூக்கும் போது, டக்கினு அசையும் போது போன்ற செயல்களை செய்யும் போது அந்த பகுதியில் உள்ள தசைகளில் பிடிப்பு ஏற்படுகிறது.

How to Get Rid of Back Spasms

தசைப்பிடிப்பு தசைகளின் ஒழுங்கற்ற செயல்பாட்டால் ஏற்படுகிறது. தசைகளின் சுருங்கி விரியும் தன்மை பாதிப்பால் ஏற்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காரணங்கள்

காரணங்கள்

இந்த தசைப்பிடிப்பு ஏற்பட முக்கிய காரணங்கள் உடல்பருமன், ஒழுங்கற்ற நிலையில் அமர்தல், உடல் வடிவமைப்பு பிரச்சினை, போதிய நீர்ச்சத்து இல்லாமல் இருத்தல், எலக்ட்ரோலைட் இழப்பு, ஒழுங்கற்ற நிலையில் தூங்குதல்.

இந்த தசைப்பிடிப்பு ஒரு வேளை தண்டுவட காயமாகக் கூட இருக்கலாம். இந்த தசைபிடிப்பை உடனடியாக சரி செய்யவில்லை என்றால் தீவிர வலி உண்டாக வாய்ப்புள்ளது.

இந்த தசைப்பிடிப்பை சில வீட்டு வைத்தியங்களை கொண்டே சரி செய்து விடலாம்.

குறிப்பு : தீவிர வலி இருந்தால் உடனே மருத்துவரை அணுகி விடுவது நல்லது

ஓய்வு

ஓய்வு

எதாவது வேலை செய்து கொண்டிருக்கும் போது தசைப்பிடிப்பு ஏற்பட்டு விட்டால் உடனே அந்த வேலையை நிறுத்திவிட்டு சிறிது ஓய்வு எடுங்கள். தொடர்ந்து நீங்கள் உடம்பை அசைக்கும் அது தீவிர பாதிப்பை ஏற்படுத்தலாம்.

மெதுவாக படுத்துக் கொள்ளலாம், இல்லை என்றால் நன்றாக அமர்ந்து கொண்டு ஓய்வு எடுக்கலாம். தலையணையை உங்களுக்கு ஏதுவாக பின்னாளில் வைத்துக் கொள்ளலாம். இது உங்களுக்கு மூச்சு விட துணையாக இருக்கும். கால்களை தூக்கி வைத்துக் கொள்ளுங்கள். இதுவும் உங்கள் முதுகிற்கு இதத்தை அளிக்கும்.

அசையாமல் இப்படி ஓய்வெடுப்பது உங்கள் வலியின் அளவையும் நீடிக்கும் நேரத்தையும் குறைத்து விடும்.

1-2 நாட்கள் வரையாவது ஓய்வெடுக்க வேண்டும். அதற்காக படுக்கையிலேயே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தசைப்பிடிப்பு விடும் வரை வலுவான உடற்பயிற்சி, பளு தூக்குதல் போன்றவற்றை செய்ய வேண்டாம்.

MOST READ:நம்ம ஏளனமா நெனக்கிற இந்த 8 காய்களில் இருக்கற சீக்ரெட் தெரியுமா? இனி தினம் சாப்பிடுங்க...

ஐஸ் ஒத்தடம்

ஐஸ் ஒத்தடம்

மற்றொரு நல்ல வலி தசைப்பிடிப்பு ஏற்பட்ட இடத்தில் ஐஸ் கட்டி வைத்து ஒத்தடம் கொடுக்கலாம். இது அந்த பகுதியில் ஏற்படும் வலி மற்றும் காயங்களை குறைக்கும்.

24-72 மணி நேரத்திற்கு ஐஸ் கட்டி ஒத்தடம் ரெம்ப சிறந்தது. இந்த ஐஸ் ஒத்தடம் அழற்சி மற்றும் வலியை போக்குகிறது. இது தசைகளை சுருங்கச் செய்யவும், தசைப்பிடிப்பிற்கு காரணமான எனர்ஜியை போக்கவும் உதவுகிறது.

ஒரு சிறிய துண்டில் ஒரு கைப்பிடியளவு ஐஸ் கட்டிகளை கட்டிக் கொள்ளுங்கள்

15 நிமிடங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் ஒத்தடம் கொடுக்கவும்.

இதை 24-72 மணி நேரம் திரும்பவும் செய்யவும்.

ஐஸ் கட்டிகள் இல்லாத சமயத்தில் சில்லென்று இருக்கும் காய்கறிகள் பேக்கை கூட நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

விளைவு : இந்த ஐஸ் பேக்குகளை நேரடியாக சருமத்தில் அப்ளே செய்வதை தவிருங்கள். இது எரிச்சலையும் தரவல்லது.

சுடுநீர் ஒத்தடம்

சுடுநீர் ஒத்தடம்

பாதிக்கப்பட்ட இடத்தில் 72 மணி நேரத்தில் சுடுநீர் ஒத்தடம் கொடுங்கள். இதுவும் தசைபிடிப்பிலிருந்து விடுபட ஒரு நல்ல ஐடியா. இந்த சுடுநீர் ஒத்தடம் அந்த பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து தசைகளை நீட்டிக்கவும் குறைக்கவும் உதவுகிறது.

பயன்படுத்தும் முறை

ஒரு துண்டை எடுத்து அதை சுடுநீரில் நனைத்து பிழிந்து கொள்ளுங்கள். இந்த சூடான துண்டை பாதிக்கப்பட்ட இடத்தில் 10 நிமிடங்கள் வரை ஒத்தடம் கொடுக்கவும். இதை ஒரு நாளைக்கு பல முறை என 2-3 நாட்கள் தொடர்ந்து செய்து வரவும்.

ஒரு நாளைக்கு சூடான குளியல் அல்லது ஒரு நாளைக்கு இரண்டு தடவை குளியல் போன்றவை வலியை போக்கும்.

குறிப்பு : அதிகமான சூடு வீக்கத்தை ஏற்படுத்தி விடும். எனவே மிதமான சூட்டில் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

MOST READ:ஆரஞ்சுப்பழ தோலை தூக்கி வீசாதீங்க... இப்படி செஞ்சு சாப்பிடுங்க... இவ்ளோ நோய் தீரும்...

மசாஜ்

மசாஜ்

தசைபிடிப்பை சரி செய்ய லேசான மசாஜ் மேற்கொள்ளலாம். இது உங்களுக்கு ரிலாக்ஸ்யை தரும்.மேலும் மசாஜ் அந்த இடத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். உங்களால் முதுகில் மசாஜ் செய்ய முடியவில்லை என்றால் நண்பர்கள் அல்லது உறவினர்களின் உதவியுடன் இதை செய்யலாம்.

பாதிக்கப்பட்ட இடத்தில் வெதுவெதுப்பான ஆலிவ் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.

5-10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும். மசாஜ் செய்த பிறகு வெதுவெதுப்பான துண்டைக் கொண்டு கட்டிக் கொள்ளுங்கள். இதை ஒரு நாளைக்கு பல தடவை என செய்து வரலாம்.

மஞ்சள் கடுகு

மஞ்சள் கடுகு

மஞ்சள் கடுகு முதுகில் உள்ள தசைப்பிடிப்பை போக்க சிறந்த தீர்வளிக்கிறது. தசைப்பிடிப்பிற்கு காரணமான நரம்புகளை ரிலாக்ஸ் செய்கிறது.

பயன்படுத்தும் முறை

1 டீ ஸ்பூன் மஞ்சள் கடுகை எடுத்து சாப்பிட்டு வாருங்கள் நல்ல ரிலீவ் கிடைக்கும். காரமான சாஸ்களை தவிருங்கள். இது உங்கள் சீரண மண்டலத்தை துரிதப்படுத்தி விடும்.

MOST READ:இறந்தவங்க உடம்ப தாண்டிட்டி போனா என்ன அர்த்தம்னு தெரியுமா? தெரிஞ்சிக்கங்க... கவனமா இருங்க...

மிளகாய்

மிளகாய்

மிளகாயில் கேப்சைசின் என்ற பொருள் உள்ளது. இதில் அனலஷிக், அழற்சி எதிர்ப்பு பொருள் உள்ளது. இதுவும் தசைபிடிப்பை போக்க உதவுகிறது.

இது ஒரு சூடான இதத்தை தந்து முதுகில் இருக்கும் தசைப்பிடிப்பிற்கு ரிலாக்ஸ் செய்கிறது.

பயன்படுத்தும் முறை

1/2 டீ ஸ்பூன் மிளகாய் பொடி, 1 டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான ஆலிவ் ஆயில் சேர்த்து நன்றாக கலக்கவும்

இதை பாதிக்கப்பட்ட இடத்தில் அப்ளே செய்து 1 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும்.

20-30 நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள்

இந்த ரெசிபியை சரியாகும் வரை சில நாட்களுக்கு செய்து வாருங்கள்.

குறிப்பு

காயங்கள் மற்றும் புண்கள் இருக்கும் சருமத்தில் மிளகாய் தூளை அப்ளே செய்ய வேண்டாம்.

எப்சம் உப்பு

எப்சம் உப்பு

மக்னீசியத்தின் அளவு குறையும் போது தசைப்பிடிப்பு தீவிரமாகும். எனவே எப்சம் உப்பு இந்த பிரச்சினையை சரி செய்கிறது.

எப்சம் உப்பில் உள்ள மக்னீசியம் தசைகளை ரிலாக்ஸ் செய்யவும், ஆற்றவும் பயன்படுகிறது. ஆனால் இதை 48 மணி நேரங்கள் கழித்தே செய்ய வேண்டும்.

ஒரு குளியல் டப்பில் வெதுவெதுப்பான நீரை நிரப்பிக் கொள்ளுங்கள்

அதில் 1-2 கப் எப்சம் உப்பு சேர்த்து நன்றாக கலக்குங்கள்.

இந்த பாத் டப்பில் 20 நிமிடங்கள் நனையுங்கள். இதைக் கொண்டு குளிக்கும் போது வலி குறைந்து விடும். தேவைப்பட்டால் அடுத்த நாளும் இதைச் செய்து கொள்ளலாம்.

MOST READ:இனிமேல் உப்பு வாங்கும்போது இந்த செலடிக் கடல் உப்பானு பார்த்து வாங்குங்க... ஏன்னு தெரியுமா?

கெமோமில்

கெமோமில்

கெமோமில் ஓர் அற்புதமான மூலிகை, தசைபிடிப்பை சரி செய்கிறது.

இதில் உள்ள அதிகப்படியான ப்ளோனாய்டுகள், அழற்சி எதிர்ப்பு பொருள் வலியை குறைக்கிறது. இதன் ரிலாக்ஸ்இன் தன்மை தசைப்பிடிப்பை குணப்படுத்துகிறது.

சில துளிகள் கெமோமில் எண்ணெய், 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் இரண்டையும் சேர்த்து பாதிக்கப்பட்ட இடத்தில் ஒரு நாளைக்கு 2-3 தடவை என

மசாஜ் செய்யுங்கள்.

ஒரு நாளைக்கு 2-3 முறை கெமோமில் டீ குடித்து வாருங்கள். இது தசைகளை ரிலாக்ஸ் செய்யும். ஒரு கப் சுடுநீரில் கெமோமில் பேக்கை போட்டு 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். வெதுவெதுப்பாக இருக்கும் போது பருகுங்கள்.

நீர்ச்சத்து

நீர்ச்சத்து

உடம்பில் போதிய நீர்ச்சத்து இல்லாமல் இருப்பது தசைப்பிடிப்பை ஏற்படுத்தும். அதே மாதிரி எலக்ட்ரோலைட் குறைவும் தசை பிடிப்பை ஏற்படுத்தக் கூடியது.

அதிகமான நீரைப் பருகி உங்கள் உடம்பை நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் சத்துள்ள பழங்கள், காய்கறிகளை பயன்படுத்தலாம்

விளையாடும் போது பயன்படுத்தும் எலக்ட்ரோலைட் அடங்கிய பானங்களை பயன்படுத்தி வரலாம். நீர்ச்சத்து இல்லாமல் இருப்பது எலக்ட்ரோலைட்டில் சமநிலை அற்ற நிலையை உருவாக்கும்.

MOST READ:எடையை சூப்பரா குறைச்சு ஸ்லிம் ஆக்கும் யோ-யோ டயட் பத்தி தெரியுமா? இதுதான் அது...

சிரோபிராக்டிக் பராமரிப்பு அல்லது அக்குபஞ்சர்

சிரோபிராக்டிக் பராமரிப்பு அல்லது அக்குபஞ்சர்

தசைப்பிப்பிற்கு இந்த இரண்டு முறைகளும் மிகவும் சிறந்தது.

சிரோபிராக்டிக் பராமரிப்பில் முதுகெலும்பு, அழுத்தம் கொடுத்தல், மசாஜ், உடற்பயிற்சி, வாழ்க்கை முறை ஆலோசனைகள் போன்றவை அழற்சி, வலி மற்றும் வீக்கங்களை குறைக்கும்.

இதற்கு டாக்டரிடம் சென்று மருந்துகளை வாங்கிக் கொண்டு ஆலோசித்து கொள்ளலாம்.

அக்குபஞ்சர் முறையில் பாதிக்கப்பட்ட இடத்தில் சிறிய ஊசியை குத்தி தசைகளை ரிலாக்ஸ் செய்வார்கள். இது வலி மற்றும் அழற்சியை போக்கும். இதை அக்குபஞ்சர் எக்ஸ்பட்டிடம் போய் நீங்கள் செய்து வரலாம்.

டிப்ஸ்கள்

டிப்ஸ்கள்

தசைபிடிப்பை சரி செய்ய ஸ்டீராய்டு இல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்தை பயன்படுத்தலாம்.

உடற்பயிற்சி தெரபி கூட உங்களுக்கு நல்ல ரிலீவ்வை தரும்.

முடிந்த வரை எழுந்து மெதுவாக நடக்க முயற்சி செய்யுங்கள். இது நல்ல இரத்த ஓட்டத்தை கொடுக்கும்.

கால்சியம், மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் பற்றாக்குறை கூட பாதிப்பை ஏற்படுத்தும்.

கால்களை நீட்டி மடக்கி செய்யும். உடற் பயிற்சிகளை செய்து வரலாம். தசை நார்கள் ரிலாக்ஸ்யை தருகிறது. தசைகளின் சமநிலையின்மையை குறைக்கிறது.

உடற்பருமன் பிரச்சினை இருந்தால் கூட உடற்பயிற்சி செய்து எடையை குறைத்து உடலுக்கு நல்ல வடிவமைப்பை கொடுக்கலாம்.

தாங்க முடியாத வலி இருந்தாலோ, தசைப்பிடிப்பு ஒரே இடத்தில் திரும்ப திரும்ப ஏற்பட்டாலோ மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

MOST READ:தொடையில உங்களுக்கு இப்படி கொழுப்பு தேங்கியிருக்கா? வீட்லயே எப்படி இத கரைக்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to Get Rid of Back Spasms

A back spasm is a common muscle problem that one can experience when waking up and getting out of bed, lifting something heavy, or after a sudden or jerky movement. Spasms in the back can be easily treated with home remedies and other popular techniques.
Desktop Bottom Promotion