For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் முட்டை சாப்பிட பிடிக்காதவர்கள் முழு புரதமும் கிடைக்க வேறு என்ன சாப்பிடலாம்?

புரதம் மிக அதிகமாக தேவைப்படுகிற ஊட்டச்சத்து. முட்டை பிடிக்காதவர்கள் என்ன மாதிரி உணவுகளின் மூலம் அந்த புரோட்டீன் தேவையை நிறைவு செய்யலாம் என்பது பற்றி விளக்குகிறோம்.

|

என்ன தான் மட்டன், சிக்கன், மீன் என்று விட்டு வெளுத்துக் கட்டுபவராக இருந்தாலும் சிலருக்கு முட்டை சாப்பிட அவ்வளவாகப் பிடிக்காது.

how to get protein when you are allergic to eggs

ஆனால் மற்ற எந்த அசைவ உணவைக் காட்டிலும் புரதம் என்றாலே நம்முடைய நினைவுக்கு வருவது முட்டை தான். ஏனென்றால் முட்டையில் தான் முழுக்க முழுக்க புரதம் நிறைந்திருக்கின்றது என்பது நம் எல்லோருக்குமே தெரியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புரதம்

புரதம்

இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம். அப்போ முட்டை சாப்பிடாதவர்கள் தங்களுக்குத் தேவையான முழுமையாக புரதச் சத்துக்களையும் பெறுவதற்கான வழியே இல்லையா?... என்று கேட்பது புரிகிறது. அப்படி உங்களுக்கு முழுமையான புரதமும் வேண்டுமென்றால் அதற்கு வேறு என்னென்ன உணவுகளையெல்லாம் சாப்பிடலாம் என்று இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

MOST READ: உறவின்போது விந்து உள்ளே செல்லும்முன் உறுப்பை எடுத்துவிட்டால் கர்ப்பம் உண்டாகுமா? ஆகாதா?

புரோட்டீன் குறைபாடு

புரோட்டீன் குறைபாடு

சிலருக்கு முட்டை என்றாலே அலர்ஜியாக இருக்கும். சாப்பிடப் பிடிக்காது. அப்படிப்பட்டவர்களுக்கு மிக எளிதாக புரோட்டீன் குறைபாடு உண்டாகும். அப்படி முட்டை சாப்பிடாதவர்களுக்கு புருாட்டீன் குறைபாடு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் முட்டைக்கு இணையாக புரோட்டீன் உள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டியது மிக அவசியம். அப்படி என்னவெல்லாம் சாப்பிட்டால் நமக்குத் தேவையான புரோட்டீன் கிடைக்கும்.

ஸ்பைரூலினா

ஸ்பைரூலினா

ஸ்பைரூலினாவில் முட்டையைக் காட்டிலும் மிக அதிக அளவிலான புரதச்சத்து நிறைந்திருக்கின்றது. அதிலும் கேட்டால் ஆச்சர்யப்படுவீர்கள். வெறும் இரண்டு ஸ்பூன் உலர்ந்த ஸ்பைரூலினாவில் அதிக அளவில் எட்டு கிராம் அளவுக்கு புரோட்டீன் இருக்கிறது. இது ஒரு முட்டையில் உள்ள புரதச்சத்தின் அளவுக்குச் சமம். இதை மிக எளிதாக சாலட் போன்றவற்றில் சேர்த்துக் கொண்டே சாப்பிடலாம். இது காபசூல் வடிவிலும் கிடைக்கிறது. அதை தினமும் எடுத்துக் கொள்ளலாம்.

சோயாபீன்ஸ்

சோயாபீன்ஸ்

வெறும் கால் கப் சோயா பீன்ஸில் மிக அதிக அளவில் 15 கிராம் அளவுக்கு புரோட்டீன் நிறைந்திருக்கிறது. சைவ உணவு மட்டுமே உண்பவர்குளாக இருந்தால் உங்களுக்கு மிகச்சிறந்த புரோட்டீன் இந்த சோயா பீன்ஸில் இருந்தே கிடைத்து விடும். அதனால் அடிக்கடி இதை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதனால் இந்த சோயா பீன்ஸில் மசாலா, சுண்டல் போன்று, குருமா ஆகியவற்றைச் செய்து சாப்பிட்டு வரலாம்.

MOST READ: புதன் கிரகத்தோட கெட்ட பார்வையிலிருந்து தப்பிக்கணுமா? உங்க ஜாதகப்படி என்ன பரிகாரம் செய்யணும்?

சீஸ்

சீஸ்

பால் மற்றும் பால் பொருட்களில் அதிக அளவில் புரதங்கள் இருக்கும். அதிலும் சீஸில் புரோட்டீன் அதிக அளவில் இருப்பதோடு மிகவும் சுவையான உணவாகவும் இருக்கும். குறிப்பாக சின்ன குழந்தைகளுக்கு சீஸை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொடுத்து வந்தால் அது அவர்களுடைய வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.

பூசணிக்காய் விதை

பூசணிக்காய் விதை

பூசணிக்காயின் விதைக்குள்ளே அதிக அளவிலான புரோட்டீன் மட்டுமல்லாது நார்ச்சத்து, மக்னீசியம் ஆகியவையும் அதிக அளவில் இருக்கின்றன. அதனால் தினமும் உங்களுடைய சாலட் மற்றும் சூப்களில் இந்த பூசணிக்காய் விதையைச் சேர்த்துக் கொள்ளலாம். அதேபோல் ஸ்நாக்ஸ் நேரத்திலும் இந்த விதைகளை அப்படியே எடுத்துக் கொள்ளலாம்.

MOST READ: இந்த ஏழு செடிகளும் வீட்டில் இருந்தால் வீட்டுக்கு கெட்ட சக்தியைக் கொண்டு வருமாம்...

தயிர்

தயிர்

தயிரில் அதிக அளவில் புரோ-பயோடிக்ஸ் இருப்பது நம் எல்லோருக்குமே தெரிந்தது தான். அதாவது தயிரில் மிக அதிக அளவிலான நல்ல பாக்டீரியாக்கள் இருக்கின்றன என்று அர்த்தம். அதேபோல் தயிரில் முட்டையைக் காட்டிலும் அதிக அளவிலான புரதச்சத்து நிறைந்துள்ளது. எனவே தினமும் தயிரை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

how to get protein when you are allergic to eggs

we are giving the list for you have plenty of options to choose from when it comes to substitution of eggs.
Story first published: Monday, January 7, 2019, 18:10 [IST]
Desktop Bottom Promotion