For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பென்சாயில் பெராக்சைடுனா என்ன? ஏன் இத கட்டாயம் வீட்ல வாங்கி வைக்கணும்?

பென்சாயில் பெராக்சைடு என்பது என்ன, அதை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பது பற்றி இந்த கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கப் போகிறோம். அது பற்றிய மிக விரிவான தொகுப்பாகத் தான் இது இருக்கப் போகிறது.

|

பென்சாயில் பெராக்ஸைடு பற்றியும் அதன் நன்மைகள் பற்றியும் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் பென்சையில் பெராக்ஸைடு சில வகை அசாதாரணமான நன்மைகளை தன்னிடம் கொண்டுள்ள ஒரு கூறு.

Benzoyl Peroxide

வீட்டில் வைத்திருக்க வேண்டிய முக்கிய பொருட்களில் இதுவும் ஒன்று. அதனால் கட்டாயமாக வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அவசரத்துக்கு உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பென்சாயில் பெராக்ஸைடு

பென்சாயில் பெராக்ஸைடு

பென்சாயில் பெராக்ஸைடு என்பது உடலின் மேல்புறம் தடவும் ஒரு மருந்து வகையாகும். தொழிற்சாலைகளிலும் இந்த வகை ரசாயனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நோய்க்கிருமி எதிர்ப்பி, நுன்னுயிர்கொல்லி மற்றும் ப்ளீசிங் முகவராக இது பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

உட்கொள்ளும்போது சிறிதளவு நச்சுத்தன்மையுடன் இருக்கும் இந்த பென்சாயில் பெராக்ஸைடு, சருமத்துடன் உறவாடும்போது உடைய நேரிடுகிறது என்று கொரியாவில் உள்ள சுற்றுப்புற ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனம் நடத்திய ஆராய்ச்சியில் மருத்துவர் ஹ்யுன் மி கிம் கூறியிருக்கிறார். இவற்றின் எதிர்வினையின் விளைவாக ஆக்சிஜன் மற்றும் பென்சாயிக் அமிலம் உற்பத்தியாகிறது. இது பல தாவரங்களில் காணப்படும் ஒரு வகை ரசாயனம் ஆகும். இது நச்சுதன்மையற்றதாக கருதப்படுகிறது.

MOST READ: இந்திய கிரிக்கெட் வீரர்களோட மனைவிகள் திருமணத்துக்கு முன்பு என்ன வேலை செஞ்சாங்கனு தெரியுமா?

பென்சாயில் பெராக்ஸைடு நன்மைகள்

பென்சாயில் பெராக்ஸைடு நன்மைகள்

பருக்களுக்கான சிகிச்சையில் பென்சாயில் பெராக்சைடு பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஹார்மோன்களால் ஊக்குவிக்கப்பட்ட அழற்சி மற்றும் எண்ணெய் சுரப்பிகள் மற்றும் தலைமுடியின் வேர்கால்களில் உண்டாகும் தொற்று போன்றவை பருக்கள் உண்டாகக் காரணமாக உள்ளன. ஹார்மோன் மாற்றம் காரணமாக சருமத்தின் கேரட்டின் அளவு அதிகரிக்கிறது.

இதனால் எண்ணெய் சுரப்பிகள் அடைக்கப்பட்டு, பி.அக்னே என்று அன்று சொல்லப்படும் ப்ரோபியனி பக்டிரியம் தொற்று பாதிப்பின் அபாயம் அதிகரிக்கிறது. இந்த வகைக் கிருமிகள் இயற்கையாகவே சருமத்தில் இருக்கின்றன. பருக்களைப் போக்கும் சிகிச்சையில் மூன்று வழிகளில் இந்த பென்சாயில் பெராக்சைடு உதவுகிறது. அவற்றைப் பற்றி இப்போது காணலாம்.

அன்டி பயோடிக்

அன்டி பயோடிக்

பென்சாயில் பெராக்ஸைடு சக்தி மிகுந்த அன்டிபயோடிக் மற்றும் அன்டிசெப்டிக் பண்புகள் கொண்டது. இதனை சருமத்தில் தடவுவதால், எளிதில் ஆவியாகிற ஆக்சிஜனை அடைக்கப்பட்ட துளைகளுக்குள் செலுத்தி, அங்கு வாழும் கிருமிகளை அழிக்கின்றன.

சாலிசைலிக் அமிலத்தை விட அதிகமாக, பென்சாயில் பெராக்ஸைடு பி.அக்னே என்னும் பரு வகையை சிறந்த முறையில் போக்க உதவுகின்றன. இந்த வகையில் துளைகளுக்குள் உள்ள அழற்சி குறைந்து, சருமத்தின் சிவந்த நிறம் சீராகிறது.

எண்ணெய் உற்பத்தி

எண்ணெய் உற்பத்தி

எண்ணெய் சுரப்பிகள் உங்கள் சருமத்திற்கு தேவையான எண்ணெய் உற்பத்தியை இயற்கையான முறையில் செய்கின்றன. இதனால் உங்கள் சருமம் ஈரப்பதத்துடன் இருக்க முடிகிறது. மேலும் காயங்களை குணப்படுத்த இந்த ஈரப்பதம் உதவுகிறது. இந்தக் வகை எண்ணெய் சுரப்பிகள் மிக அதிக உற்பத்தியை மேற்கொள்வதால், ஹார்மோன் மாற்றம் காரணமாக பருக்கள் உண்டாகத் தொடங்குகின்றன. அதிகரித்த எண்ணெய் சரும துளைகளை அடைக்கத் தொடங்குகின்றன.

இதனால் சரும துளைகள் அடைக்கப்பட்டு , கரும்புள்ளிகள் மற்றும் வெண் புள்ளிகள் சருமத்தில் உண்டாகின்றன. இவற்றிற்கான சரியான சிகிச்சை அளிக்கப்படாமல் இருக்கும் நிலையில் இவை கட்டிகளாக மாற்றம் பெறுகின்றன. பென்சாயில் பெராக்ஸைடை இதர சிகிச்சைகளுடன் சேர்த்து பயன்படுத்துவதால், அழற்சி ஏற்பட்டு அவை அடுத்த நிலை அடைவதற்கு முன்னர் பருக்கள் வறண்டு போக உதவுகிறது.

MOST READ: மனிதனுக்கு திடீர்னு மரணம் வருவது எதனால்? அதை எப்படி தவிர்க்கலாம்?

கரோட்டின் குறைகிறது

கரோட்டின் குறைகிறது

ஹார்மோன் ஊக்குவிப்பால் சருமத்தில் கரோட்டின் உற்பத்தி அதிகரிப்பதும், எண்ணெய் சுரப்பிகள் அடைக்கப்படுவதற்கு ஒரு முக்கிய காரணமாக அறியப்படுகிறது. க்ளென்சிங் ஆக்சிஜென் மற்றும் ப்ரீ ரேடிகல்களை வெளியாக்கும் பென்சாயில் பெராக்ஸைடு கேரடினை உடைத்து விடுகின்றனது. இதனால் மறுமுறை துளைகள் அடைக்காமல் தடுக்கப்படுகின்றன.

இதனை எவ்வாறு பயன்படுத்துவது?

இதனை எவ்வாறு பயன்படுத்துவது?

மருத்துவர் பரிந்துரைக்காமல் வாங்கும் மருந்தாகவும், மிக அதிக அளவில் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்தாகவும் பென்சாயில் பெராக்ஸைடு சந்தையில் கிடைக்கின்றன. ஜெல், வாஷ்,மற்றும் லோஷன் வடிவத்தில் இவை கிடைக்கின்றன. பென்சாயில் பெராக்சைடு முதன் முறை பயன்படுத்துவதற்கு முன்னர், இவற்றின் ஒவ்வாமை பாதிப்புகள் குறித்து பரிசோதித்த பின்பு பயன்படுத்தலாம்.

உடலின் சிறு பகுதியில் தினமும் தொடர்ந்து வரிசையாக சிறு சிறு திட்டுகளாக இந்த மருந்தை பயன்படுத்தி வரவும். பொதுவாக சரும வறட்சி இயல்பாக இருந்தாலும், தீவிர அழற்சி அல்லது சருமம் சிவந்து போவது, போன்ற நிலை சருமத்தில் தென்பட்டால், இவற்றின் பயன்பாட்டை உடனடியாகத் தவிர்க்கவும். ஆடைகள், தலைமுடி, மரக்கலன்கள் போன்றவற்றை ப்ளீச் செய்யவும் பென்சாயில் பெராக்சைடை பயன்படுத்தலாம். ஆனால் இதனை தடவும்போது கவனமாகக் கையாளவும்.

பென்சாயில் பெராசைடு ஜெல் பயன்படுத்தும்போது மிகக் குறைவாக நேரடியாக பருக்களில் தடவவும். பருக்களில் தடவி மருந்தில் குறிப்பிட்டுள்ள நேரம் அப்படியே விடவும். இந்த மருந்தை வாய், கண் மற்றும் மூக்கின் உட்பகுதியில் தடவக் கூடாது. திரவ நிலையில் இதனை பயன்படுத்தினால், இந்த திரவத்தை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, 10-20 நிமிடம் கழித்து கழுவி விடவும்.

இதர பயன்பாடுகள்

இதர பயன்பாடுகள்

பென்சாயில் பெராக்சைடு ஒரு சிறந்த ப்ளீச்சிங் முகவராக செயல்புரிகிறது. தலைமுடி ப்ளீச் செய்வதில் இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. மற்றும் பற்கள் வெண்மைக்கு இத் ஒரு முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. தொழிற்சாலை ரீதியாக, கரிம வேதியல் பிரிவில் ஆக்சிஜெனேற்ற முகவராக பயன்படுத்தப்படுகிறது. பாலிமர் அறிவியலில் கேடலிஸ்ட் என்னும் வினையூக்கியாகவும் கடினத்தன்மையூட்டியாகவும் பயன்படுகிறது. துளைகள் அற்ற கரிம மேற்பரப்பு அல்லாத வினைல் மற்றும் கல் போன்றவற்றில் சிறந்த சுத்தீகரிப்பு கூறாக பயன்படுகிறது.

MOST READ: நீங்களே நினைச்சு பார்க்காத அளவு டக்குனு வெயிட் குறையணுமா? அதுவும் ஆரோக்கியமா? இதோ

பக்க விளைவுகள்

பக்க விளைவுகள்

பென்சாயில் பெராக்சைடை உட்கொள்ளக் கூடாது. மேலும் வெட்டு பட்டு திறந்திருக்கும் சருமத்தில் அல்லது காயத்தில் பயன்படுத்தக்கூடாது. வாய், கண் மற்றும் மூக்கு போன்ற இடங்களுடன் தொடர்பு கொள்ளக் கூடாது. சருமத்தில் உண்டாகும் எதிர்வினைகளான சருமம் சிவந்து போவது, வறண்டு போவது அல்லது தோல் உரிவது போன்றவை இதனை முதன்முதலில் பயன்படுத்தும்போது உண்டானால், இதனை உடனடியாக தவிர்க்க வேண்டும்.

சிலருக்கு பென்சாயில் பெராக்சைடு பயன்படுத்துவதால் உயர் உணர்திறன் காரணமாக அதிகரித்த அழற்சி மற்றும் சருமம் சிவந்து போகும் நிலை ஏற்படலாம். சில அரிய வழக்குகளில் ஒளி உணர்திறன் கூட ஏற்படும் என்று அறிக்கைகள் உள்ளன. வாய் மற்றும் நாக்கில் தடிப்பு மற்றும் வீக்கம் ஏற்படுவது, மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் மயக்கம் போன்ற தீவிர ஒவ்வாமை எதிர்வினைகளும் ஏற்படலாம் . மிகக் கவனமாக இந்த பொருளைக் கையாண்டு அதன் நன்மைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Benzoyl Peroxide Benefits, Uses and Side Effects

This medication is used to treat mild to moderate acne. It may be used in combination with other acne treatments. When applied to the skin, benzoyl peroxide works by reducing the amount of acne-causing bacteria and by causing the skin to dry and peel.
Desktop Bottom Promotion