For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடற்பயிற்சி இல்லாமலே பின் பக்க கொழுப்பை குறைக்கும் உணவுகள்..!

|

நம்ம உடம்புல கொழுப்பு அதிகமாகிடுச்சினா, அத குறைக்கிறது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. இந்த கொழுப்பு வயிற்று பகுதி, தொடை பகுதி, பின்புறம், கை, போன்ற பல இடத்துலயும் கூவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அதிலும் குறிப்பாக பின்பக்கத்தில் சேர்ந்துள்ள கொழுப்பு மற்றும் தொடை பகுதியில் சேர்ந்துள்ள கொழுப்பை குறைக்கிறது கொஞ்சம் கடினமான ஒன்றுதான்.

உடற்பயிற்சி இல்லாமலே தொடை மற்றும் பின் பக்க தசையை குறைக்க இதை சாப்பிட்டாலே போதும்..!

பலருக்கு மிக இடைஞ்சலாக கூட இந்த இடத்தில் உள்ள கொழுப்புகள் உள்ளன. பேண்ட் போடுவதற்கு கூட நாலு பேர கூப்பிட வேண்டிய நிலைக்கு இந்த பகுதியில் சேர்ந்துள்ள கொழுப்புகள் நம்மை ஆளாக்கி விட்டன. சரி, அப்போ இத குறைக்கவே முடியாதா..? அப்படினு கவலையோட கேக்குற உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தியும் காத்திருக்கு. ஆமாங்க, இந்த கொழுப்பை ஒரு சில உணவுகளை வைத்தே குறைக்க முடியுமாம். இனி அவை எந்தெந்த உணவுகள் என்றும், அவற்றின் தன்மை என்னவென்றும் தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஏன் சேருகின்றது..?

ஏன் சேருகின்றது..?

கொழுப்புகள் நமது உடலில் ஏன் சேருகிறது என்கிற கேள்விக்கு பதில் மிக சுலபமானது. நாம் சாப்பிட கூடிய அதிக கலோரிகள் கொண்ட உணவுகளும், அதிக கொழுப்புகள் நிறைந்த உணவுகளும் தான் இந்த நிலைக்கு முக்கிய காரணம்.

இவை உடலில் செயல்பாட்டை குறைத்து பசியின்மை, சோம்பேறித்தனம், உடல் எடை கூடுதல் போன்ற பிரச்சினைகளையும் கூடவே சேர்த்து விடும்.

காரசார உணவுகள்

காரசார உணவுகள்

நீங்கள் சாப்பிட கூடிய உணவு வகைகளில் அதிக காரத்தன்மையை சேர்த்து கொள்ளுங்கள். மேலும், மஞ்சள் போன்ற கொழுப்பை குறைக்கும் பொருட்களை சேர்த்து கொண்டால் மிக விரைவிலே இதன் பலன் கிடைக்கும்.

காரணம் இதிலுள்ள curcumin என்கிற மூல பொருள் கொழுப்பை அகற்ற கூடிய தன்மை கொண்டதாம்.

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை

இந்த உணவு பொருள் பலவிதத்தில் உங்களுக்கு உதவுகிறது. இதை டீ போன்று குடித்து வந்தால் பின்பக்க கொழுப்பை எளிதாக குறைத்து விட முடியும். இதற்கு தேவையானவை...

இலவங்கப்பட்டை 1

தேன் 1 ஸ்பூன்

தயாரிப்பு முறை :-

தயாரிப்பு முறை :-

முதலில் இலவங்கப்பட்டையை பொடி போன்று தயாரித்து கொள்ளவும். அடுத்து, 1 கிளாஸ் நீரை கொதிக்க வைத்து அதில் இந்த பொடியை சேர்க்கவும்.

5 நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க வைத்த பின்னர் இதனை இறக்கி கொள்ளவும். பிறகு இதனுடன் தேன் கலந்து காலையில் அல்லது படுக்க போகும் முன் குடிக்கலாம்.

MOST READ:இந்த வருடம், எந்தெந்த ராசிக்கு எந்தெந்த வகையில் ஆபத்துகள் வரும்னு தெரியுமா.?

நார்சத்து

நார்சத்து

நீங்கள் அதிகம் கொண்ட உணவுகளை சாப்பிட்டால் தொடை மற்றும் பின்பக்க கொழுப்பை நம்மால் குறைக்க இயலும். இதற்கு ஓட்ஸை, ப்ரோக்கோலி, கோதுமை ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்து கொண்டாலே போதும். மேலும், ஆரஞ்சு போன்ற பழ வகைகளையும் சேர்த்து உண்ண வேண்டும்.

நெல்லி

நெல்லி

கொழுப்பை குறைத்து சீரான உடல் அமைப்புடன் வைத்து கொள்ள இந்த நெல்லி அதிகம் உதவுகிறது. செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைப்பதுடன், கொழுப்பை குறைக்கவும் செய்கிறது. இதனை வெறும் வயிற்றில் இப்படி தயாரித்து குடித்தால் விரைவிலே கொழுப்பை குறைத்து விடலாம்.

தேவையான பொருட்கள்...

நெல்லிக்காய் சாறு அரை கப்

தேன் அரை ஸ்பூன்

தயாரிப்பு முறை...

தயாரிப்பு முறை...

பெருநெல்லிக்காயை எடுத்து கொண்டு துண்டு துண்டாக நறுக்கி அரைத்து கொள்ளவும். அடுத்து இதனை வடிகட்டி கொண்டு, தேன் சிறிதளவு சேர்த்து கொண்டு காலை வேளையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். இப்படி தொடர்ந்து 1 மாதம் செய்து வந்தால் பின்பக்க கொழுப்பு குறையும்.

கிரீன் டீ

கிரீன் டீ

ஆராய்ச்சி பூர்வமாக இது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதாவது, கிரீன் டீயை காலையில் தொடர்ந்து குடித்து வந்தால் இவற்றில் உள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ்கள் கொழுப்பை குறைக்க வழி செய்யும். அத்துடன் உடல் எடையையும் இது குறைத்து விடும் தன்மை கொண்டது.

MOST READ: வழுக்கை விழுந்த இடத்தில் மீண்டும் முடி வளர பப்பாளியை இப்படி பயன்படுத்துங்க..!

தவிர்க்க வேண்டும்..!

தவிர்க்க வேண்டும்..!

ஒரு புறம் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு விட்டு, மறுபுறம் கொழுப்புகள் கொண்ட உணவுகளை சாப்பிட்டால் உடலில் கொழுப்புகள் குறையாது. எனவே, எண்ணெய் உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். மேலும், தெருக்களில் விற்க கூடிய உணவுகளை சாப்பிடாமல் இருக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Are There Any Foods That Get Rid of Back Fat?

Here we listed some foods to reduce back fat.
Desktop Bottom Promotion